Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

Monday, April 13, 2026

தந்தை நாட்டின் பெயர் சொல்ல தைரியமில்லையா மோடி?

 


இரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் இருக்கும் சூழலில் அதனை சீர்குலைக்க லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்றது.

அத்தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெண்டைக்காயையும் விளக்கெண்ணெயையும் சேர்த்து ஒரு அறிக்கை.

லெபனான் மீதான தாக்குதலுக்காகவும் உயிரிழப்பிற்காகவும் வருந்தி இனி இப்படி ஒரு தாக்குதல் நடக்காமல் இருப்பது நலம் என்ற ரீதியில் அந்த அறிக்கை செல்கிறது.

தாக்குதல் நடத்திய இஸ்ரேல் கண்டிக்கப்படவே இல்லை. ஏன் இஸ்ரேலின் பெயர் கூட எந்த இடத்திலும் இல்லை.

தந்தை நாட்டின் மீது அவ்வளவு பயமா மோடி?

இஸ்ரேல் உங்களுக்கு கொடுத்த ‘Speaker of the Knesset Medal’  விருதை பறித்து விடுவார்கள் என்ற பயமா?

Thursday, April 9, 2026

உங்களைத்தாண்டா மக்கள் மன்னிக்க மாட்டாங்க


 சங்கிகள் தாங்கள் அடி முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள் என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இரான்-அமெரிக்கா போரைப் பொறுத்தவரை இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இது சற்று ஆசுவாசமளிக்கிற செய்தி.

இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்துள்ளது. பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியே இந்த போர் நிறுத்தம்.

இதனை டொனால்ட் ட்ரம்பும் ஒப்புக் கொண்டுள்ளார். இரானும் ஒப்புக் கொண்டுள்ளது.



மேலே உள்ள செய்தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.

உலகமே இன்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஒரு முயற்சிக்கு பாகிஸ்தான் காரணம் என்று திமுக எம்.பி சல்மா கருத்து சொல்லி விட்டாராம்.  அதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று சங்கிகள் குதிக்கிறார்கள்.


சங்கிகளின் அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது.

சரியானதொரு கருத்தை வெளியிட்ட சல்மாவை கைது செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கிறது?

மோடிதான் விஸ்வகுருவாக இருந்து போரை முடித்து வைப்பார் என்று இவர்களாகவே முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தது நடக்காமல் அந்த பெயர் பாகிஸ்தானுக்கு போய் விட்டதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மணிப்பூரிலேயே மத்தியஸ்தம் செய்ய முடியாத டம்மி பீஸ் மோடி.

இரண்டாவது இவர்கள் சல்மாவை மதக்கண்ணால்தான் பார்க்கிறார்கள்.

அதனால் சங்கிகளின் அயோக்கியத்தனத்தைத்தான் மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். 

Wednesday, April 8, 2026

இரான் - இருளில் ஒளி

 சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் சிறப்பான ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். இரான் மக்களின் மன உறுதிக்கு சான்றாக இப்பதிவு அமைந்துள்ளது.




ஈரானிய மக்கள் உலகிற்கு காட்டிய வெளிச்சம்...

அ.முத்துக்கிருஷ்ணன்
8:00 மணி என்றால் இந்தியரக்ளுக்கு பொதுவாகவே ஒரு பயம் தான், இரவு 8 மணிக்கு ஒருவர் தொலைக்காட்சியில் வரப்போகிறார் என்றாலே தொட்டியில் போட்டு தாய்மார்கள் குழந்தைகளை கூட தூங்கவைத்து விடுவந்து இந்திய வழக்கமாகவே 2014க்கு பிறகு மாறியுள்ள நிலையில் அதே போல் ஒரு 8 மணி மிரட்டலை ஈரான் நாட்டிற்கு விடுத்தார் ஒருவர்.
விளக்குகள் எல்லாம் அணைந்து விடும், நாடே இருளில் மூழ்கும், ஒரு நாகரீகமே அழிந்துவிடும் என்ற ஏக வசனங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிந்து, உலகையே பதட்டம் கொள்ளச் செய்தார். நிச்சயம் நேற்றைய இரவு எனக்கு மட்டும் அல்ல நண்பர்கள் பலருக்குமே தூக்கமில்லா இரவு தான் ஆனால் ஈரான் மக்கள் பயத்தின் இருளுக்குள் சென்றிடவில்லை, ஒரு துளியும் பின்வாங்கவில்லை.
அவர்கள் தாங்கள் தான் ஈரான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உலகிற்கே உணர்த்தினார்கள். நேற்றைய இரவின் பொழுதில் அவர்கள் காட்டிய வீரம் என்பது வரலாற்று நிகழ்வாகவே எனக்கு படுகிறது.
இஸ்பஹானின் மூடுபனியில் இருந்து தப்ரிஸ் நகரின் தொழில்துறை பகுதிகள் வரை, வரலாறு எழுதப்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் மனித மதில் சுவர்களாக மாறினார்கள், தாக்குதலுக்கான இலக்குகளாக உருமாற்றம் பெற்றார்கள்,
தேஹ்ரானில், தபியத் பாலம் "நள்ளிரவு கீதத்தின்" மேடையாக மாறியது; அங்கு தார் இசையின் தாளங்களூக்கு கலைஞர்கள் நடமனாடினார்கள். உலகமே பதட்டத்தில் உறைந்து கிடக்கும் நேரம் அவர்கள் இசையும் நடனமுமாக லயித்திருந்தார்கள்.
"முழுமையான அழிவு" என்ற அச்சுறுத்தலுக்கு எதிரான பண்பாட்டு எழுச்சி. மின் நிலையங்களை ஒளிக் காட்சியகங்களாகவும், பாலங்களை மனித சங்கிலிகளாகவும் மாற்றிய மக்கள், "Power Plant Day" என்ற தாக்குதல் தர்க்கத்தை மக்கள் தைரியத்தின் ஒளியால் செயலிழக்கச் செய்தனர்.
ஈரான் முழுவதுமே எதிர்ப்பு பல்வகைமைகள் கொண்டாதாக, விரிவானதாக ஒன்றை விட ஒன்று வீரியமானதாகவே இருந்தது; ஒவ்வொரு நகரமும் தேசிய பாதுகாப்பின் ஓர் நூலாக தன்னை நெய்தது. புஷேர் நகரின் தெற்கில், மாணவர்களும் தொழிலாளர்களின் குடும்பங்களும் அணு நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் பெரிய சுவரோவியங்களை வரைந்தனர்; அவை மேலே பறக்கும் விமானிகளுக்கும் செயற்கைக்கோள்களுக்கும் அமைதியின் செய்திகளை வெளிப்படுத்தின.
கெர்மான்ஷா மற்றும் அஹ்வாஸ் நகரங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி, மருத்துவமனைகளையும் வீடுகளையும் சுற்றி அரன் அமைத்தனர். தங்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தும் மின் நிலையங்களின் வாயில்களை விட்டு நகர மறுத்தனர்; இவை "Shields of Light/ ஒளியின் கவசங்கள்" என அழைக்கப்பட்டன. வீதிகள் எங்கும் உணவின் மணமும், கவிதை வாசித்தலின் ஓசையும் காற்றில் நிரம்பியிருந்தது.
அலி காம்சாரி மற்றும் பென்யாமின் பகதூரி போன்ற கலைஞர்கள் சாதாரண மக்களுடன் தோளோடு தோள் நின்று, "நூர் பர் தரிகி"—இருளில் ஒளி—என்ற முழக்கத்தை எழுப்பினார். மக்களின் இதயத் துடிப்பு உலகம் முழுவதிலும் கலைஞர்கள் ஒலிக்கச் செய்தார்கள்.
இந்த வரலாற்றுச் செயல்பாடு ஒரு தற்காலிக பாதுகாப்பை விட ஒரு படி மேலே சென்றது; இது அந்த மக்களின் மரபு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இரு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும், "நாகரிகத்தை முடிவுக்கு கொண்டுசெல்லும்" முடிவுகள் இரு வாரங்களுக்கு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவே மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஒன்றரை கோடி பேர் ஒரு இரவில் தங்களின் நாட்டை காக்க முதல் முறையாக கூடியிருக்கிறார்கள், இரவெல்லாம் இந்த வரலாற்றை நான் ஒவ்வொரு நொடியாக நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஈரான் மக்கள் ஒன்றுகூடிய அந்த தருணம் 21ஆம் நூற்றாண்டின் மறக்க முடியாத நிகழ்வாகும். "எங்கள் பாலங்கள், எங்கள் மின் இணைப்புகள்" என்ற அவர்களின் முழக்கம், நேரடி பதிலாக அமைந்தது.
கலை மூலம் தெருக்களையும், இசை மூலம் தொடுவானத்தையும் நிரப்பிய ஈரானியர்கள், போர் இயந்திரங்களுக்கு எதிராக தங்களின் அசாத்திய எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள்.
போர்களை இந்த உலகம் மறுபரீசீலனை செய்ய வேண்டும் அதுவே கலையும் கலைஞர்களும் எளிய மக்களும் இந்த உலகிற்கு விடுக்கும் செய்தி, உலகம் முழுவதும் நடைபெற்ற எல்லா போர்களிலும் எளிய மக்களும் அவர்களது உடமைகளும் அவர்களது வாழ்வாதாரமுமே முதன்மையாக பாதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வு தான் மிகுதியாக சிதைந்துள்ளது.
இந்த இரவு என் வாழ்வின் மகத்தான இரவும் கூட.... மறக்க முடியாத இரவும் கூட....

Thursday, March 26, 2026

ட்ரம்பின் குரு சீமான் . . .

 


ட்ரம்ப் உதிர்த்த லேட்டஸ்ட் முத்து கீழே உள்ளது.


இப்படியெல்லாம் பேச அவர் சீமானிடம்தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மோடியையும் சீமானையும் தவிர இப்படியெல்லாம் கதை அளக்க உலகில் வேறு யார் இருக்கிறார்கள்!

ட்ரம்ப் சொன்னதை இரான் மறுத்துள்ளதாக அதே செய்தி சொல்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாந்தான் என்று ட்ரம்ப் அன்றாடம் சொன்னாலும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேச மோடி அரசால் ஏன் முடியவில்லை?

Tuesday, March 17, 2026

வேடிக்கைக்காக தாக்குவாராம் மெண்டல் ட்ரம்ப்

 


நேற்றைய ஆங்கில இந்து இதழின் முதல் பக்க செய்தி கீழே . . .


இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடுத்துள்ளதால் இரான் மீதான போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் தனக்கில்லை என்று சொல்லியுள்ள டொனால்ட் ட்ரம்ப், இரானிற்கு பேச்சு வார்த்தை மேஜைக்கு வரும்  எண்ணம் இருந்தால் கூட நாங்கள் வேடிக்கைக்காக இரானின் "கார்க்" தீவின் மீது குண்டுகள் போடுவோம் என்று சொல்கிறார்.

சும்மா வேடிக்கைக்காக குண்டு போடுவோம் என்று சொல்கிற ஆளை "முற்றிப் போன பைத்தியக்காரன்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது!

பைத்தியக்காரனின் சினேகிதன்/அடிமை/எஜமான் மட்டும் நல்ல மன நிலை கொண்டவராகவா இருக்க முடியும்?

நான் இஸ்ரேலின் நெதன்யாஹூ வை சொல்கிறேன். 

நீங்கள் யாரை நினைத்தீர்கள்? 

Saturday, March 14, 2026

போரில் ட்ரம்ப் இன்று 😆😆😆😆


சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்னன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த காணொளி கீழே உள்ளது. கடைசி வரை கண்டிப்பாக பார்க்கவும். நாளைக்கு மோடிக்கும் இதெ நிலை வரப்போகிறது.



Thursday, March 12, 2026

நன்றி கெட்ட, துரோக மோடி அரசு . . .

 


சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி கீழே உள்ளது.



இந்த செய்தியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.

இரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மறைவிற்கு மோடி ஒரு இரங்கல் செய்தி கூட விடுக்கவில்லை.

இரானின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவை கண்டிக்கவில்லை, கண்டிப்பதற்கான தைரியம் மோடிக்கு கிடையாது என்பது நாமறிந்த உண்மைதான். போரை நிறுத்துங்களேன் என்று ஒரு சின்ன வேண்டுகோள் கூட விடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியக் கப்பல்களுக்கு இரான் அனுமதி கொடுத்தது என்றால் அது இரானின் பெருந்தன்மை. பாரம்பரியமாக நட்பு பாராட்டும் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள மரியாதை.

இந்திய அரசின்  சிக்கலுக்கு தீர்வு கொடுத்த இரானுக்கு இந்தியா செய்த பதில் மரியாதை என்ன?

இரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் வழிமொழிந்து இஸ்ரேல்-அமெரிக்கக் களவாணிகள் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மோடி. இதையும் கூட ராஜதந்திரம் என்று  வெட்கமே இல்லாமல் பீற்றிக் கொள்வார்கள் சங்கி மூடர்கள்.

உதவிக்கரம் நீட்டுபவரின் முதுகில் குத்தும் நன்றி கெட்டவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம் என்று நினைக்கவே கடுப்பாக இருக்கிறது.

ஆட்சியாளர்களின் துரோகத்தால் நாம் என்னென்ன பிரச்சினைகளை அனுபவிக்கப்போகிறோமோ? 

Saturday, March 7, 2026

மோடி, உமக்கு தகுதி கிடையாதய்யா

 



கீழேயுள்ள செய்தியை சங்கிகள் நேற்றிலிருந்து பரப்பி மிகவும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.


இப்படியெல்லாம்  இரானின் கருணையைப் பெற இந்திய அரசுக்கு (மக்களுக்கு அல்ல) தகுதி இருக்கிறதா?

வரலாற்று ரீதியாக இரானோடு நட்புறவு பாராட்டிய இந்தியா, அதன் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் தொடுத்த போது ஏன் ஒளிந்து கொண்டது?

இரானின் உச்ச தலைவர் மறைவிற்கு ஒரு அஞ்சலி தெரிவிக்கக்கூட மோடிக்கு ஏன் மனது வரவில்லை?

இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த இரானின் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த  கொடுமைக்கு ஏன் வாய் திறக்கவில்லை?

இரானின் எதிர்வினைக்காக கவலைப்பட்ட மோடி, ஏன் இரான் தாக்குண்டது பற்றி மௌனமாகவே இருக்கிறார்?

அயத்துல்லா காமெனி மரணத்திற்கு இந்தியா அஞ்சலி தெரிவித்துள்ளது. அதுவும் யார் தெரிவித்தது? எப்போது? 



"செத்ததுக்கு வா ன்னா, பத்துக்கு வந்திருக்க" என்பது போல 28.02.2026 அன்று கொல்லப்பட்ட அயத்துல்லா காமெனிக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் 05.03.2026 அன்று இந்தியாவில் உள்ள இரானின் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் அஞ்சலி குறிப்பு எழுதி வந்துள்ளார்.

மோடி பத்துக்கும் போக மாட்டார்.

இப்படிப்பட்ட நிலையில் இரானின் நல்லெண்ணத்தை பெறவும் அதை மோடியின் ராஜதந்திரம் என்று பீற்றிக் கொள்ளவும் அவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்ன?


Tuesday, March 3, 2026

அவர்கள் காந்தியின் குரங்குகள் அல்ல தோழர்

 


இரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி யை அமெரிக்க, இஸ்ரேல் கொலைகாரப்படைகள் கொன்றது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களுடைய பதிவு கீழே உள்ளது.



இரானிய அரசின் சில ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கருத்து வேறுபாடு இருப்பினும் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரையும் மற்ற உயரதிகாரிகளை அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஜியோனிஸ்ட் இஸ்ரேலும் இரானின் இரையாண்மைக்கு எதிராகவும் சர்வதேச விதிகளுக்கு முரணாகவும் கொன்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் இது.

லத்தீன் அமெரிக்காவிலும் மற்ற பல நாடுகளிலும் கடைபிடித்த அதே உத்திகளைத்தான் அமெரிக்கா கையாள்கிறது. இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா அளந்து விட்ட பொய்கள் அம்பலமானதை நாம் பார்த்திருக்கிறோம். ஆப்கானிஸ்தான், லிபியா மர்றும் சிரியா அனுபவங்கள் நம் கண் முன்னே உள்ளது.

அமெரிக்க ராணுவத்துறை உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. இரானில் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டணி இரானில் செய்து வரும் குற்றங்களுக்கு எதிராக உலகளாவிய அளவில் குரல் எழுப்ப இந்தியா முன்னெடுக்க வேண்டும். 

உலக அமைதிக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ள சூழலில் அனைத்து ஜனநாயகக்குரல்களையும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். அப்போதுதான் வன்முறைத் தாக்குதல்களும் அதற்கான எதிர்வினைகளும் நிறுத்தப்படும்.

தோழர் எம்.ஏ.பேபி சொன்னது மிகவும் அருமையான ஆலோசனை. முன்னொரு காலத்தில் அணி சேரா நாடுகள் அமைப்பின் தலைவராக இது போல செயல்பட்ட நாடுதான் இந்தியா. 

ஆனால் இந்த ஆட்சியாளர்கள் கேட்பார்களா?

அயத்துல்லா அலி காமேனி கொலையை கண்டிக்காத ஆள் மோடி. இஸ்ரேலோடு நிற்பேன் என்று வெளிப்படையாக கூவியவர் அவர்.

மகாத்மா காந்தியின் குரங்குகளுக்கு முற்றிலும் முரணானவர்கள் இவர்கள்.

இவர்கள் நல்லதை பார்க்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை கேட்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை பேசவும் மாட்டார்கள். 

Monday, April 28, 2025

போர், போர் என பொங்கும் சங்கிகளெல்லாம் . . .

 


கீழேயுள்ள பதிவுகள் எல்லாம் சங்கிகளுடையது. போர், போர் என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே ஆருத்ரா திருடன் அமர் பிரசாத் ரெட்டியும் அதில் அடக்கம். இந்த பதிவுகளை முதலில் படியுங்கள்.







மேலே உள்ள படம் போல இந்த போர் வெறி சங்கிகள் எல்லாம், அவர்களை இந்திய ராணுவம் அழைத்தால் சமையலறை மேடைக்கடியில் ஒளிந்து கொண்டு விடுவார்கள் என்பது நிச்சயம்.

56 இஞ்சர் போரெல்லாம் தொடுக்க மாட்டார் என்ற தைரியத்தில் சொல்லப் படும் வெட்டி வார்த்தைகள் அவை

Thursday, March 13, 2025

கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டு . . .

 


உக்ரைன் ரஷ்யா மீதான போரை நிறுத்த வேண்டும். உக்ரைனுக்கு இனி ஆயுத சப்ளை கிடையாது,  அமெரிக்கா இதுவரை செய்த உதவிக்கு மாற்றாக உக்ரைன் தன் கனிம வளத்தை கொடுத்து விட வேண்டும் என்றெல்லாம் ட்ரம்ப் சொல்லிக் கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறும் என்ற அறிவிப்பிற்கே பாரக் ஒபாமா நோபல் அமைதி விருது பெற்றது போல ட்ரம்பிற்கும் ஆசை போல என்று நினைத்திருந்தேன்.

அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்பதை இன்றைய செய்தி உணர்த்தி விட்டது. அமெரிக்கா உக்ரைனுக்கு மீண்டும் ஆயுத சப்ளையை தொடங்கி விட்டது.

அப்பறம் என்ன?

போர்தான்! அழிவுதான், மறு கட்டமைப்புதான், அதுக்கான டீலிங்தான்.

ஒரு கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டு உலகமே தவிக்கிறது . . .

Wednesday, February 26, 2025

ரஷ்யா Vs உக்ரைன், அமெரிக்கா பல்டி

 

ரஷ்ய - உக்ரைன் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைனை டம்மியாக வைத்துக் கொண்டு அமெரிக்காவும் நேடோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் நடத்திய போர்தான் அது.

ட்ரம்ப் வந்தவுடன் அவர் உக்ரைன் ஜனாதிபதி ஜேலென்ஸ்கியை கிறுக்கன் என்று திட்டுகிறார்.

ஒரு கிறுக்கனே
இன்னொரு கிறுக்கனை
கிறுக்கன் 
என்று சொல்கிறானே!
அடடே
ஆச்சர்யக்குறி.

நேற்று ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ஐ.நா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறது. 

இது நாள் வரை உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்காவும் அதன் கூட்டாளி இஸ்ரேலும் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முழு விபரம் கீழே . . .


சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல அமெரிக்காவின் பல்டிக்குப் பின்னே ஏதோ கணக்கு இருக்கிறது. அதன் பாதிப்பு ரஷ்யாவுக்கா உக்ரைனுக்கா என்பது சீக்கிரம் தெரிய வரும்.  


Thursday, October 24, 2024

கொல்லப்பட்ட கடைசி தருணத்திலும் கம்பீரம்

 பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்தது. இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத்தலைவர் யாஹ்யா சின்வர் அவர்களின் இறுதி உயில். தமிழாக்கம் செய்தவர் தோழர் ராஜ சங்கீதன்.

LAST MOMENTS OF YAHYA SINVAR என்ற இந்த காணொளியை யூடூயுபில் பாருங்கள். ஒரு கை வெட்டப்பட்டு வாழ்வின்  இறுதித்தருணத்தில் இருக்கையில் பறந்து வரும் ட்ரோன் மீது ஒற்றைக் கையால் தடியை வீசி எரியும் தீரத்தை பார்க்க மறவாதீர். கீழேயுள்ள படத்தில் சொல்லப்பட்டது போல அமெரிக்க அடிமையாக பாலஸ்தீனத்திற்கு எதிரான சவுதி அரேபிய மன்னரின் அரியணையை விட சின்வரின் சோபா கம்பீரமானது. 

பாலஸ்தீனத்தின் வரலாற்றில் அம்மக்களின் துரோகியாக, எதிரியாக மோடியும்  பதிவு செய்யப்படுவார். 



ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்:

இந்த வார்த்தைகளை எழுதுகையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணி பார்க்கிறேன். சந்துகளில் திரிந்திருந்த பால்யகாலம் தொடங்கி பல வருட சிறைவாசம் வரையான வாழ்க்கையையும் இந்த நிலத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நினைவுகூருகிறேன்.
1962ம் ஆண்டில் நான் கான் யூனிஸ் முகாமில் பிறந்தேன். பாலஸ்தீனம் கிழித்தெடுக்கப்பட்டு நினைவாக மட்டுமே எஞ்சியிருந்த காலக்கட்டம் அது. அரசியல்வாதிகளின் மேஜைகளில் மறக்கப்பட்ட வரைபடமாக பாலஸ்தீனம் கிடந்தது.
நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் வளர்ந்தவன் நான். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழ்வது, நிரந்தர சிறைவாசம் என்பதை வாழ்க்கையின் தொடக்கத்திலேயே புரிந்திருந்தேன்.
இங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் தன் நெஞ்சில் உடையாத ஓர் ஆயுதத்தை ஏந்தியிருக்க வேண்டும். விடுதலைக்கான தூரம் நெடியது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
முதன்முறையாக 1988ம் ஆண்டில் சிறைக்கு சென்றேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருள் நிறைந்த அந்த சிறைகளின் ஒவ்வொரு சுவரிலும் தூரத்து அடிவானத்துக்கான ஒரு ஜன்னலை நான் கண்டேன். ஒவ்வொரு சிறையிலும் விடுதலைக்கான வழி காட்டும் வெளிச்சம் தெரிந்தது,.
பொறுமை என்பது பண்பல்ல, ஆயுதம் என்பதை சிறையில் கற்றுக் கொண்டேன். மிகவும் கடுமையான ஆயுதம் அது. ஒவ்வொரு துளியாக மொத்த கடலையும் குடிக்க முனையும் ஒருவரின் முயற்சிக்கு நிகரான ஆயுதம்!
என்னுடைய அறிவுரை இதுதான்: சிறைகளுக்கு அஞ்சாதீர்கள். விடுதலைக்கான நெடும்பாதையின் அங்கங்கள் அவை.
விடுதலை என்பது வலியில் பிறப்பது; பொறுமையில் பக்குவப்படுவது! 2011ம் ஆண்டு “வஃபா அல் அஹ்ரார்” ஒப்பந்தத்தில் நான் விடுவிக்கப்பட்ட போது, போராட்டத்தை விட்டுச் சென்றுவிட வில்லை. வலிமை பெற்றிருந்தேன். நம்பிக்கை அதிகமாகி இருந்தது. நாம் முன்னெடுப்பது சாதாரண போராட்டமல்ல என்பதையும் நம் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாம் சுமக்கும் விதி போராட்டம்தான் என்பதையும் புரிந்து கொண்டேன்.
என்னுடைய அறிவுரை, துப்பாக்கியையும் வழுவாத சுயமரியாதையயும் அழிவுறா நம் கனவையும் கைவிட்டு விடாதீர்கள் என்பதுதான். நம் போராட்டத்தை நாம் கைவிட்டுவிட வேண்டுமென எதிரி விரும்புகிறான். நம் நோக்கத்தை நெடிய பேச்சுவார்த்தை மூலம் நீர்த்துப் போக வைக்க விரும்புகிறான்.
ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் உரிமை பெற்றிருக்கும் ஒரு விஷயத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தாதீர்கள். உங்களின் ஆயுதங்களை விட, உங்களின் உறுதி அவர்களை அச்சுறுத்துகிறது.
போராட்டவுணர்வு என்பது நமக்கான ஆயுதம் மட்டுமில்லை, நம் சுவாசத்தில் பாலஸ்தீனத்தின்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு அது; ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் தாக்குதலும் தொடர்ந்தாலும் இங்கு நாம் தொடர்ந்து நீடிப்பதற்கான பற்று அது!
உயிரிழந்த ஈகியரின் ரத்தத்துக்கு உண்மையாக இருங்கள். முட்களாலான பாதையில் நமக்கான விடுதலைப் பாதையை தங்களின் ரத்தம் கொண்டு போட்டவர்கள் அவர்கள்தான். அரசியல்வாதிகள் தரும் கணக்குகளுக்காகவும் அரசப் பிரதிநிதிகள் காட்டும் ஆட்டத்துக்காகவும் அவர்களின் ஈகையை விரயமாக்கி விடாதீர்கள்.
முன்னவர்கள் தொடங்கியதை முடிக்கத்தான் நாம் இங்கு இருக்கிறோம். என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் இந்த பாதையிலிருந்து நாம் விலகிடக் கூடாது. பூமியே நம்மை குறுக்கினாலும் உறுதிப்பாட்டின் தலைநகரமாகவும், தொடர்ந்து துடிக்கும் பாலத்தீன இதயமாகவும் காசா இருக்கும்.
2017ம் ஆண்டில் ஹமாசின் தலைவராக நான் ஆனபோது, வெறும் அதிகாரப் பரிமாற்றமாக அதை நான் பார்க்கவில்லை. கற்களால் தொடங்கி துப்பாக்கிகளால் தொடரும் ஒரு பெரும் போராட்டத்தின் தொடர்ச்சியாகதான் பார்த்தேன்.
விடுதலையை நோக்கி நாம் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். சரணடைவதால் நாம் கொடுக்கும் விலை இவற்றை விட மிக அதிகமாக இருக்கும். எனவே வேர், மண்ணை பிடித்திருப்பது போல், இந்த நிலத்தை பிடித்திருங்கள். வாழ வேண்டுமென முடிவெடுத்து விட்ட மக்களை எந்தக் காற்றாலும் பெயர்த்தெடுக்க முடியாது.
அல் அக்ஸா போர், உடல்களுக்கு எதிரான ஆன்மாக்களின் போர்; ஆயுதங்களுக்கு எதிரான உறுதியின் போர்!
நான் விட்டுச் செல்வது என் தனிப்பட்ட மரபு அல்ல, ஒரு கூட்டு மரபு! விடுதலைக் கனவு கொண்ட ஒவ்வொரு பாலஸ்தீனருக்கும், உயிர் துறந்த மகனை தோளில் சுமந்த ஒவ்வொரு தாய்க்கும், தோட்டா உயிர் குடித்த மகளை சுமந்த ஒவ்வொரு தந்தைக்கும் அந்த மரபை நான் விட்டுச் செல்கிறேன்.
போராட்டம் வீண் போகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். போராட்டம் என்பது துப்பாக்கியின் தோட்டா மட்டும் அல்ல, நாம் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடிப்படையும் அதுதான்.
உலகம் நீதி வழங்கும் என எதிர்பார்க்காதீர்கள். நம் வலியை வெறுமனே உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தற்கு நானே சாட்சி. நீதியை எதிர்பார்க்காதீர்கள்; வழங்குங்கள்! பாலஸ்தீனர்களின் கனவை நெஞ்சில் ஏந்துங்கள். ஒவ்வொரு காயத்தையும் ஆயுதம் ஆக்குங்கள். ஒவ்வொரு கண்ணீரிலும் நம்பிக்கையை பெற்றெடுங்கள்.
இதுவே என் உயில். உங்களின் ஆயுதங்களை ஒப்படைக்காதீர்கள். கற்களை கீழே போடாதீர்கள். ஈகியரை மறந்திடாதீர்கள். நீங்கள் உரிமை கொண்டிருக்கும் கனவை காவு கொடுத்து விடாதீர்கள்.
நாம் இங்குதான் இருப்போம். நம் நிலத்தில், நம் நெஞ்சங்களில், நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் நாம் இருப்போம்.
இறுதி வரை நான் நேசித்த நிலத்தையும் பெருமலை போல் என் தோள்களில் சுமந்த கனவையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
நான் வீழ்ந்தால், நீங்களும் வீழ்ந்திடாதீர்கள். என்றுமே வீழாத பதாகையை எனக்காக ஏந்துங்கள். என் ரத்தத்தை, ஒரு தலைமுறை வலிமை பெறுவதற்கான பாலமாக மாற்றுங்கள்.
சொந்த நிலம் என்பது சொல்வற்கான கதையல்ல, வாழ்வதற்கான யதார்த்தம் என்பதை மறந்து விடாதீர்கள்.
உயிரை ஈகை செய்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் பிறப்பார்கள்.
மீண்டும் போர் வருகையில் நான் உங்களுடன் இல்லாது போயிருந்தால், விடுதலைக்கான அலைகளின் முதல் துளி நான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Monday, October 14, 2024

இந்தியர்கள் செத்தாலும் இஸ்ரேல் பக்கம்தானா மோடி?

 


இஸ்ரேலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் வளாகத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.

நேற்று இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் கதவுகளை தகர்த்து உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு அமைதிப் படையின் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. தீவிரவாத இயக்கங்கள் கூட செய்யத் துணியாத, தயங்குகிற ஒரு வேலையை இஸ்ரேல் ராணுவம் செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு மிரட்டல் வீடியோ அனுப்பியுள்ளார். அந்த மிரட்டல் வீடியோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை லெபனானை விட்டு வெளியேறாவிட்டால் அதன் மீது தாக்குதல் நடத்தி முற்றிலுமாக அழித்து விடுவேன் என்று சொல்லியுள்ளார்,

இஸ்ரேல் குரைக்கும் நாய் அல்ல, கடிக்கும் நாய்.

நெதன்யாகு தான் மிரட்டியது போல செய்யக்கூடிய ஆசாமிதான்.

இதிலே மோடி எங்கே வருகிறார் என்ற கேள்வி எழலாம்.

லெபனானில் செயல்படும் ஐ.நா அமைதிப்படையில் 20 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர்.  இந்திய ராணுவ வீரர்கள் மட்டும் 903 பேர் உள்ளனர். இஸ்ரேல் தாக்கினால் அவர்களும் செத்துப் போவார்கள்.

மோடிக்கு இது ஏற்புடையதுதானா?

மோடி அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார் என்பதுதான் சோகமான யதார்த்தம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாலஸ்தீனம் உபட இஸ்ரேலின் மண்ணில் கால் வைக்கக் கூடாது என்று இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

இத்தடைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் 125 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது இரண்டு நாடுகள். ஒன்று அமெரிக்கா.

இன்னொன்று.

ஆம். அது இந்தியாதான்.

இஸ்ரேல் என்ன அராஜகம் செய்தாலும் அதற்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் நாடாக இந்தியாவை மாற்றி விட்டது மோடியின் அரசு.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய மனிதப் பிறவியா மோடி?

அப்படிப்பட்ட கவலையெல்லாம் இருந்திருந்தால் உளவுத்துறை எச்சரித்தும் 44 வீரர்களை புல்வாமாவில் சாகவிட்டிருப்பாரா?

Sunday, April 14, 2024

மோடியின் கூடா நட்பால் . . .

 


உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அரசான இஸ்ரேல் அரசுடன் இந்தியா வாஜ்பாய் காலம் வரை விலகியே நின்றது. மோடியோ ஒட்டி உறவாடினார். மோடி, ட்ரம்ப், நெதன்யாகு என மூவருமே வெறி பிடித்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே .

இஸ்ரேலின் உதவியோடுதான் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் ஆகியோரை வேவு பார்த்தது மோடி அரசு.

அதெல்லாம் போகட்டும்.

இஸ்ரேலுடன் மோடி கொண்ட கூடா நட்பு இந்தியர்களுக்கு கேடாக முடிந்துள்ளது.

பல முனைகளில் இஸ்ரேலுக்கும் மற்ற நாடுகளுக்கும் பிரச்சினை, மோதல், அவ்வப்போது போர்.

பாலஸ்தீனத்துடனான போர் ஒரு புறம் என்றால் இரானுடனான போர் இன்னொரு புறம். 

கட்டுமானப் பணிகளுக்காக உபி தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அவர்கள் சில ஆயிரம் பேர் அங்கே சிக்கிக் கொண்டுள்ளனர்.

அதைத் தவிர இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க தயார் செய்யப்பட்டவர்கள், அதற்கான விமானக் கட்டணம் உட்பட லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி செலுத்தி இப்போது பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் தவித்து நிற்கிறார்கள் சில ஆயிரம் பேர்.

இந்த தருணத்திலும் கூட இஸ்ரேலுக்கு ஆள் பிடிக்கும் வேலை தொடர்வதாக தகவல்கள் வருகிறது.

மோடியின் கூடா நட்பு அவருக்கு கேடாய் அமைந்தால் தவறில்லை. அவர் பிரதமராய் இருந்து தொலைப்பதால் இந்திய மக்களுக்கு கேடாகிறது.

அவரை பிரதமர் பதவியிலிருந்து துரத்த வேண்டும் என்பதற்கு இஸ்ரேல் நட்பும் ஒரு காரணம்.

Sunday, October 8, 2023

விழித்துக் கொண்ட நியாயவான்களே!

 


இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம் என்று உலகெங்கும் பல நியாயவான்கள் (மணிப்பூர் மக்களை கைவிட்ட டிமோ உட்பட)  என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

நல்லது. 

இத்தனை நாள் உறக்கத்தில் இருந்தவர்கள் இப்போதாவது விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.  உங்கள் உறக்கத்தை முற்றிலுமாக கலைக்க நல்ல டீயோ, காபியோ குடித்து விட்டு (டிமோ கோமியம்தான் குடிப்பார் என்றால் அது அவரின் விருப்பம்) ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் இது நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தது என்பதை கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்பாவிகள் யார் கொல்லப்பட்டாலும் யாரால் கொல்லப்பட்டாலும் தவறுதான்.

இன்று இஸ்ரேலிய மக்களின் இறப்பிற்காக கதறி அழுகிறவர்கள் யாராவது இஸ்ரேலால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களுக்காக கண் கலங்கியதாவது உண்டா?

பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டே  இருக்கிற இஸ்ரேல் மீது சிறு விமர்சனமாவது செய்ததுண்டா?

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான தோழர் அ.முத்துகிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட ஒரு படத்தை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த கதையாக பாலஸ்தீனம் எப்படி இஸ்ரேலால் சுருக்கப்பட்டது என்பதை படம் பார்த்து உணருங்கள்.

தோழர் முத்து கிருஷ்ணன் இன்னொரு கேள்வியையும் எழுப்பி இருந்தார். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த உளவுத்துறை என்று புகழப்படுகிற இஸ்ரேலின் உளவுத்துறைக்கு ஹமாஸின் தாக்குதல் பற்றி ஏன் தெரியவில்லை என்று கேட்டு அதற்கு ஒரு ஊகத்தையும்சொல்கிறார்.

செல்வாக்கு முற்றிலும் சரிந்து போய், நீதி மன்றத்தோடு மோதிக் கொண்டிருக்கிற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவுக்கு தன் மீதான பிரச்சினைகளை திசை திருப்ப ஹமாஸின் தாக்குதல் தேவைப் பட்டிருக்குமோ என்பது அவரது ஊகம்.

அதனை நாம் நிராகரிக்க முடியாது. 2019 தேர்தலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்தும் கூட புல்வாமாவில் சி.ஆர்.பி.ஃஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த கொடூரர்களின் ஆட்சியில் அல்லவா நாம் வாழ்கிறோம்!

இஸ்ரேலுக்காக இதயம் துடிக்கிற நியாயவான் கனவான்களே (நீங்கள் அப்படிப்பட்ட அடைமொழிகளுக்கெல்லாம் அருகதை அற்றவர்கள் என்ற போதிலும்) கீழே உள்ள படத்தை பாருங்கள்.


பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக 1994 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் அவர்கள்.

அந்த ஒப்பந்தத்தில் பாலஸ்தீனர்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டார் என்று அப்போது யாசர் அராபட் விமர்சிக்கப்பட்டார். 

அந்த அற்ப ஒப்பந்தத்தைக் கூட நிறைவேற விடாத பெருமை இன்றைய இஸ்ரேல் பிரதமர் நெத்ன்யாஹூ வுக்கே உண்டு.

உங்கள் மனிதாபிமானம் உண்மை என்றால் குறைந்தபட்சம் அந்த ஒப்பந்தத்தையாவது அமலாக்கச் சொல்லுங்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலை வெளியேறச்சொல்லுங்கள். 

Thursday, July 13, 2023

யாருடைய நாடகம்? எதற்காக?

 


உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. ரஷ்யாவும் உக்ரைனும் மட்டும் போரிட்டிருந்தால் இந்த போர் எப்போதோ முடிந்திருக்கும். ஆனால் இது இத்தனை நாள் இழுத்துச் செல்வதற்கான காரணமே இது  ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேடோ NATO) அமைப்பிற்கும் இடையிலான போர் என்பதால்தான்.

நேடோ நாடுகளின் உதவியோ, போர்த்தளவாடங்களோ, நிதியுதவியோ, உளவுத்தகவல்கள், ஆலோசனைகள் இல்லாமல் உக்ரைனால் இத்தனை காலம் தாக்கு பிடித்திருக்க முடியாது.

ஆனால் இன்று செய்தி பார்த்தேன்.

உக்ரைன் ஜனாதிபதி ஃஸேலன்ஸ்கி நேடோ நாடுகளை கடுமையாக சாடியுள்ளார். உக்ரைனை எப்போது நேடோவில் சேர்த்துக் கொள்வீர்கள் என்பதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணியுங்கள் என்பது அவரது ஆதங்கம்.

ஏன் அவர் அப்படி கேட்டுள்ளார் என்பதையும் அந்த செய்தி விளக்குகிறது.

சமீபத்தில் நடந்த நேடோ உச்சி மாநாட்டில் “உக்ரைன் இப்போது ரஷ்யாவுடம் போரிடுவதால் உக்ரைனை இப்போது நேடோவில் சேர்த்துக் கொண்டால் அந்த போரில் நேடோ தலையிட வேண்டியிருக்குமாம். அதனால் யோசிக்கிறார்களாம், அமெரிக்காதான் ரொம்பவே சிந்திக்கிறதாம்”

“இது உன் பிரச்சினை குமாரு, நாங்க தலையிட்டா கேங் வாராயிடும்” என்ற புதுப்பேட்டை வசனத்தை நேடோ உக்ரைனில் சொல்லியுள்ளதாக அந்த செய்தி சொல்கிறது.

நேடோவின் தலையீட்டால்தான் உக்ரைன் ரஷ்யா போரே நடந்து கொண்டிருக்கிறது, ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.

அப்படி இருக்கையில் எதற்கு இந்த நாடகம்? யாரை ஏமாற்ற?


Wednesday, January 4, 2023

சம்பந்தம் இல்லையென்றால் நம்புங்கள்

 


நகரம் திரைப்படத்தில் வடிவேலு சுந்தர்.சி யிடம் என் ஏரியா பக்கம் வா, தெருவுக்கு வா, வீட்டுக்கு வா என்றெல்லாம் உதார் விட்டு விட்டு கடைசியில் காலில் விழுந்து கதறும் காட்சிக்கும்

எல்லையில் ஆவேசமாக முழங்கிய ராஜ்நாத்சிங் வஜனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். 

Tuesday, December 20, 2022

அழகல்ல, அழிவு . . .

 


காலையில் நாளிதழை கையிலெடுத்ததும் கண்ணில் பட்டது இந்த படம்தான். ஆகா அழகு என்று முதலில் தோன்றினாலும் சற்று கவனித்ததும்தான் இது அழிவு என்பது புரிந்தது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் எரிந்து கொண்டிருக்கும் மின் நிலையம் இது.

இந்த போர் எப்போது முடியும் என்பது தெரியவில்லை.

புடினோடு மோடி பேசி விட்டார். போர் முடிந்து விடும் என்று இரண்டு நாட்கள் முன்பாக சங்கிகள்தான் கதையளந்து கொண்டிருந்தார்கள்.

முட்டாப் பசங்க . . .

Wednesday, September 21, 2022

என்னது? சீனா வலிமையான சவாலா?

 


மோடி வந்த பின்னாடி சீனா இந்தியாவைப் பாத்து பயந்து நடுங்குது. வாலை சுருட்டிக்கிட்டாங்க, மோடி பேரைச் சொன்னாலே சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் கிற்கு குளிர்க்காய்ச்சல் வந்துடும் (இதுக்கு மேல படிக்காதவன் படத்தில் சுமனைப் பார்த்த விவேக்கின் செய்கையைக் கூட) என்றெல்லாம் சங்கிகள் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். திருட்டு சங்கிகள் எழுதுவதை முட்டாள் சங்கிகள் பரப்புகிறார்கள்.

இந்திய கப்பற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், இந்த மாயைகளை உடைத்து விட்டார். உண்மையை பொசுக்கென்று உடைத்து விட்டார்.

எல்லைப் பகுதியில் இருப்பதைப் போலவே சீனா கடல் பகுதியிலும் வலிமையான சவாலாகவே {Formidable Challange)  இருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதி முழுதுமே ஐந்திலிருந்து எட்டு போர்க்கப்பல்கள், ஏராளமான ஆய்வுக்கப்பல்கள், மீன்பிடிக் கப்பல்கள் என்று சீன மயமாக உள்ளது. கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் பணியை அவர்கள் துவக்கியதிலிருந்தே  கடலிலும் அவர்களின் ஆதிக்கம்தான்.

இதுதான் அவர் சொன்னது.

வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருந்தால் உண்மையான ஆபத்துக்கள் கண்ணிற்கு தென் படாது. மோடிக்கும் உண்மைக்கும் வெகு தூரம்.

எனவே இந்த ஆட்சியாளர்கள் நீடிப்பது இந்திய பாதுகாப்பிற்கு என்றும் சிக்கல்தான்.