எழுத்தாளர் வினாயக முருகன், சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதிலே சில பகுதிகள் எடிட் செய்யப்பட்டுவிட்டது என்று அந்த பகுதிகளை முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனந்த விகடன் கட்டுரையோடு ஒப்பிட்டு பார்த்தேன்.
ஆனந்த விகடன் கட்டுரையில் நீக்கப்பட்டிருந்த பகுதிகள் இவைதான்.
இதுபோன்ற விஷமற்ற ஜந்துக்களை பகிர்பவர்கள் ஒருபக்கம் என்றால் சீன விமானநிலையத்தை காட்டி அதை குஜராத் பேருந்துநிலையம் என்று சொல்பவர்கள். ஒரு வெள்ளைப்பலகையில் இரண்டும் இரண்டும் ஆறு என்று ஏதாவது பொய் பித்தலாட்ட கணக்கை எழுதி அதை வீடியோவாக எடுத்துப்போட்டு அவதூறு செய்பவர்கள் என்று இன்னொருப்பக்கம். இரண்டாவது வகையினர்தான் இப்போது சமூக ஊடகங்களை முழுவதும் ஆக்கிரமித்து நடப்பு தகவல்களை மட்டுமல்ல எழுதப்பட்ட வரலாற்றையே கூட மாற்றும் அளவுக்கு ஆபத்தாக பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக ஜோதிகா பள்ளிக்கூடம்,கோவில் பற்றிய கருத்துக்கு ஒருத்தர் வந்து இப்படி பின்னூட்டமிடுவார். கோவிலை மட்டும் சொல்றீங்க. ஏன் மசூதி, சர்ச் பற்றி சொல்லமாட்டேங்கறீங்க.
ஒரு வரலாற்று நிகழ்வை எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் மீண்டும் ஓர் ஆதாரமற்ற பொய்ச்செய்தியை தூக்கிக்கொண்டு வந்து கேள்விகேட்பார்கள். பெரியார் ஒரு சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார் என்று அடம்பிடிப்பார்கள். அப்போது மணியம்மை வயது இருபத்தேழு என்றாலும் ஒத்துக்கொள்வார்கள். ஓஹோ அப்படியா என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். பிறகு சிலமாதங்களில் மீண்டும் வந்து அதே கேள்வியை கேட்பார்கள்.
ஆக மொத்தம் பார்த்தால் அவர்கள் நீக்கியது எல்லாமே சங்கிகளை அம்பலப்படுத்தி எழுதப்பட்டவைதான். அதிலே போர்ட் தாஸ் பற்றி வேறு உள்ளது.
நியூஸ் 18 நிகழ்வுகளைப் பார்த்த ஆனந்த விகடனுக்கு பயம் வராதா என்ன?
வானளாவிய அதிகாரம் கொண்ட பி.ஹெச்.பாண்டியனுக்கெல்லாம் அஞ்சாத விகடன் டுபாக்கூர் மாரிதாஸுக்கெல்லாம் பயப்படுவது காலக் கொடுமை.
News 18 what is the problem ? Kindly describe
ReplyDeleteபாலன் காலத்தோடு விகடன் முடிந்து விட்டது
ReplyDelete