Tuesday, December 31, 2019

சென்று வா 2019இந்திய தேசத்தின் 
இருள் தொடர்ந்த ஆண்டு
ஒற்றுமையை குலைப்பவர்கள் 
உச்சத்தில் அமர்ந்த ஆண்டு
அராஜகப் பேர்வழிகளின் 
அவர்தம் அடிமைகளின்
ஆட்டம் அதிகமான ஆண்டு.

இப்படியொரு ஆண்டு
இனி வேண்டாம் என
முடிக்கத்தான் ஆசை.

தேசமெங்கும் ஒலிக்கும்
போராட்டக்குரல் உரக்க
கேட்டு நம்பிக்கையை
வளர்த்த ஆண்டாகவும்
மாறியது 2019.

கசப்புக்களை மட்டும்
கடத்திக் கொண்டு
சென்று வா 2019.

நம்பிக்கைகளோடு
தொடங்கட்டும் புத்தாண்டு


தீ - அன்று ஹிட்லர், இன்று மோடிநேற்று மோடியின் அலுவலகத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மோடி படிக்காத, வாங்காத பட்டம் கூட அந்த தீயில்  எரிந்து போய் விட்டது என பலர் நக்கலடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இந்த தீ விபத்தை அவ்வளவு சுலபமாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. 

மோடி முழுக்க முழுக்க ஹிட்லர் ஜெர்மனியில் செய்ததைத்தான் பின்பற்றி வருகிறார். என்னை வேண்டுமானால் வெறுத்துக் கொள்ளுங்கள், இந்தியாவை வெறுக்காதீர்கள் என்ற அவரது லேட்டஸ்ட் வசனம் கூட ஹிட்லரின் வசனத்தை அப்படியே காப்பியடித்துதான்.

இந்த தீ விபத்து சிறிய ஒன்று, சிறப்பு காவல்படை அலுவலக வரவேற்பரையில் நிகழ்ந்தது என்று இப்போது சொல்கிறார்கள். ஆனால் தீ விபத்துக்கான காரணத்தை இன்னும் சொல்லவில்லை.

ஹிட்லர் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜெர்மன் நாடாளுமன்றத்தை அவனது குண்டர்களை வைத்து கொளுத்துகிறான். பழியை கம்யூனிஸ்ட் கட்சி மீது போடுகிறான். டிமிட்ரோவ் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் (நீதிமன்ற விசாரணையை தோழர் டிமிட்ரோவ் எதிர்கொண்டது தொடர்பான ஒரு நூல் உண்டு. வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள். நன்றாக இருக்கும்)  

நாடாளுமன்றக் கட்டிட எரிப்பை காரணமாக வைத்து அவசர நிலை அடக்குமுறையை கொண்டு வருகிறான். அதன் பின்புதான் அவனது அராஜகம் அதிகமானது.

மோடிக்கு சிக்கல் அதிகமாகும் போது எல்லையில் ஒரு தாக்குதல் நடந்து இந்திய வீரர்கள் இறந்து போய் ராணுவம் ஒரு பதிலடி கொடுக்கும். இது வாடிக்கை.

இப்போது சிக்கல் கை மீறிப் போவதால் ஹிட்லர் பாணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகத்தான் மோடியின் அலுவலகத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிற தீ விபத்தை நான் பார்க்கிறேன். 

தேசம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம் இது. 


Monday, December 30, 2019

கோலமும் இனி இங்கே ஆயுதம் . . .

எடுபிடி அரசின் அராஜக கைதால் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்ட வடிவமாக  கோலம் வரைதலும் மாறியுள்ளது.

முகநூலில் தோழர் பகத்சிங் அவர்களின் பதிவிலிருந்து எடுத்த சில கோலங்கள் கீழே
வாழ்த்துக்களும் எச்சரிக்கையும் சோரேன் . .ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள் ஹேமந்த் சோரேன்.

உங்களது வெற்றி இந்த சூழலில் மிகவும் முக்கியமானது.

இயற்கை வளங்கள் நிரம்பிய மண் உங்கள் மண்.  ஆனால் இங்கிருந்து எடுக்கப்படும் எந்த கனிமமும் இந்த மண்ணின் மைந்தர்கள் வாழ்வில் வளம் உருவாக உதவவில்லை. வெள்ளைக்காரர்கள் காலம் முதற்கொண்டு இன்றைய கொள்ளைக்காரர்கள் காலம் வரை முதலாளிகளும் தரகர்களும் பிழைக்கத்தான் ஜார்கண்ட் மண்ணின் செல்வங்கள் பயன்பட்டுள்ளன. 

உங்கள் மண்ணின் மகத்தான வீரன் பீர்ஸா முண்டா வின் வாழ்க்கை வரலாறு  நீங்கள் அறியாதது அல்ல. அதை மீண்டும் மீண்டும் படியுங்கள். உங்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்திலாவது சுரண்டப்பட்ட உங்கள் மக்கள் வாழ்வில் ஒளியேற்ற முயற்சியுங்கள்.

நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமும் இதுதான். 

சின்னஞ்சிறு மாநிலமாக இருந்தாலும் அங்கே பில்லா-ரங்கா கிரிமினல் கோஷ்டி தோற்றுப் போயிருக்கிறது. சாணக்கிய சதிகாரன் இந்த தோல்வியை அவ்வளவு சுலபமாக விட்டு விட மாட்டான். அவர்களின் கூட்டாளி தேர்தல் ஆணையம் முடிவுகளை தாமதமாக அறிவித்ததே ஏதேனும் மோசடி செய்ய முடியுமா என்று முயற்சிப்பதற்கே.

அடிபட்ட அந்த கொடிய விஷப் பாம்புகள் பணம் கொடுத்தோ அல்லது மிரட்டியோ உங்கள் கட்சி எம்.எல்.ஏ க்களையோ அல்லது உங்கள் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ க்களையோ இழுக்க முயற்சிப்பார்கள். எந்த கேவலத்திற்கும் தயங்காத கேடு கெட்ட கூட்டம் அது. அதனால் மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள்.

ஆட்சிக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ஆட்சியை தக்க வைப்பதற்கும் வாழ்த்துக்கள் 

Sunday, December 29, 2019

கதாகாலட்சேபமும் இவர்களும் கேவலமா ராசா?


கதாகாலட்சேபம் என்பது நான் அறிந்த வரை இசையும் கதையும் கலந்து  இறைவனின் புகழ் பாடும் ஒரு வடிவம்.

அது ஏன் எச்.ராசாவிற்கும் கேடி.ராகவனுக்கும் வெறுப்பாக உள்ளது?

கதாகாலட்சேபம் என்பது அப்படி ஒரு கெட்ட வார்த்தையா என்ன?

அப்படி என்றால் கதாகாலட்சேபம் மூலம் புகழ் பெற்றவர்களும் கேவலமானவர்களா?

சொல்லுங்கய்யா.

நல்ல சேம் ஸைட் கோல் இது !!!!

மோடி மூஞ்சியை வரையலாமா எடப்பாடி?

தமிழகம் இது வரை காணாத கேவலமான ஆட்சியாக எடப்பாடி ஆட்சி மாறியுள்ளது.

கேடு கெட்ட மோடி ஆட்சியின் பினாமி ஆட்சியாக நடக்கும் இந்த அடிமை ஆட்சியில் 

குடியுரிமை மசோதாவிற்கான எதிர்ப்பை "கோலம்" போட்டு பதிவு செய்த காரணத்தால் எட்டு பெண்களை கைது செய்துள்ளது தமிழக ஏவல் துறை.

இந்த கொடுமை இன்று காலை சென்னை பெஸண்ட் நகரில் நடந்துள்ளது.

மிஸ்டர் எடப்பாடி, இன்னும் என்ன கொடுமையெல்லாம் செய்யப் போறீங்க? தவழ்ந்து வந்து சசிகலா காலில் விழுந்து முதலமைச்சரான உமக்கெல்லாம் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் இருக்கலாம். யார் காலிலாவது விழுந்து கிடக்கிற மானம் கெட்ட பிழைப்பு உம்முடையதாக இருக்கலாம். அதனால் உம்மைப் போல அனைத்து தமிழ்நாட்டு மக்களையும் நினைக்க வேண்டாம்.

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக கோலம் போட்டால் கைது செய்யும் எடப்பாடியே, மோடியின் மூஞ்சியை கோலமாகப் போடலாமா? அப்படி செய்தால் உம்முடைய மனசும் உம் எஜமானன் மனசும் குளிர்ந்து போகுமா?


Saturday, December 28, 2019

பயங்கரமான ராணுவ ரகசியமாம் . . .சங்கிகளைப் போன்ற அதி புத்திசாலிகள் யார் இருக்கிறார்கள்?
கீழே படியுங்கள். புரியும்கரெக்டுதான் சிப்பு சேகரு . . .

சிப்பு சேகரு சொல்லியிருப்பது சரிதான்.மோடியிடம் உண்மையை எதிர்பார்க்க முடியுமா?
கிரிமினல் அமித்ஷாவிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா?
ஆணவம் தலைக்கேறிய நிர்மலா அம்மையாரிடம் பணிவை எதிர்பார்க்க முடியுமா?
முட்டாள் சங்கிகளிடம் புத்திசாலித்தனத்தை எதிர்பார்க்க முடியுமா?

Friday, December 27, 2019

2610 கோடி ரூபாய் அச்சம் . . .கடந்த 2018-2019 ம் நிதியாண்டில் எல்.ஐ.சிக்கு கிடைத்த லாபத் தொகையான ரூபாய் 53,214.41 கோடி ரூபாயில் மத்தியரசுக்கு அளிக்க வேண்டிய 5 % லாபப் பங்குத் தொகையான ரூபாய் 2,610.74 கோடி ரூபாயை எல்.ஐ.சி யின் சேர்மன் திரு எம்.ஆர்.குமார் நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரிடம் காசோலை மூலம் அளித்துள்ளார்.

இந்தியாவின் முதன்மையான நிறுவனம் எல்.ஐ.சி என்பதும் மத்திய அரசுக்கு லாபத் தொகை மட்டுமல்லாமல், வரியாகவும் முதலீடாகவும் அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருப்பது எல்.ஐ.சி என்பதும் பெருமை அளிக்கிற ஒன்றாகும்.

எல்.ஐ.சி யிடம் காசோலை வாங்கியதையும் அதன் செயல்பாட்டையும் அம்மையாரே தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளதுதான் அச்சம் அளிக்கிறது.

இவ்வளவு சிறப்பாக செயல்படுகிற நிறுவனத்தை இன்னும் உற்சாகப் படுத்த வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத தரகு அரசாயிற்றே இது!

அம்பானிக்கும் அதானிக்கும் செல்ல வேண்டிய லாபம் இப்படி ஒரு அரசு நிறுவனத்துக்கு போகிறதே என்று சிந்திக்கிற அரசல்லவா இது!

ஏற்கனவே முதலாளிகளுக்கு எல்.ஐ.சி மீது ஒரு கண் இருக்கிறது. 

இப்போது இன்னும் அதிகமாகும்.

ஆனாலும் அவர்களுக்கு ஒரு தகவல்.

இத்தனை நாள் வரை இந்திய உழைப்பாளி மக்களின் போராட்டம் எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே பாதுகாத்துள்ளது.

இனியும் பாதுகாக்கும்.

8,ஜனவரி, 2020 அன்றைய அகில இந்திய வேலை நிறுத்தம் அதற்காகத்தான். 

மோடிக்கு கோயில், மாலை ஏனய்யா?

குஷ்புவுக்கு கோயில் கட்டிய அதே திருச்சி மாவட்டத்தில் ஒருவர் மோடிக்கும் கோயில் கட்டி சிலை வைத்துள்ளார்.

கோயில் கட்டி சிலை வைத்ததெல்லாம் சரி.

ஏனய்யா பொட்டு வைத்து மாலையெல்லாம் போட்டிருக்கிறாய்?எடப்பாடி, அமித்து படத்துக்கு வேற பொட்டு வைத்துள்ளார்.

இதற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா அந்த முட்டாள் பக்தருக்கு?


Thursday, December 26, 2019

அருகதையற்ற தளபதிமேலே உள்ள படம் கர்ணன் திரைப்படத்தில் வரும் உணர்ச்சிமயமான காட்சி. 

கௌரவர்களின் தளபதியாக நியமிக்கப்பட்ட பீஷ்மரால் இழிவுபடுத்தப் படும் கர்ணன் கொதித்தெழுந்து

"நீர் தளபதி பதவிக்கு அருகதையற்றவர்" 

என்று சாடும் காட்சி அது.

வரலாறு திரும்புகிறது.

இன்னும் ஐந்து நாட்களில் ஓய்வு பெறப்போகும் நிலையில் தன் பொறுப்பை மறந்து குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை விமர்சித்துள்ள ராணுவத்தளபதி பிபின் ராவத்தைப் பார்த்து நாமும் உரக்கச் சொல்லிட வேண்டும்.

"நீர் தளபதி பதவிக்கு அருகதையற்றவர்" 

முறைகேடாய் பதவிக்கு வந்த மனிதனின் சிந்தனையும் செயலும் மட்டும் என்ன முறையாகவா இருக்கும்!

மறக்க இயலா தலைவர் பற்றி . . .அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகராக திகழ்கிற தோழர் சந்திரசேகர் போஸ், தோழர் என்.எம்.எஸ் அவர்களைப் பற்றி தன்னுடைய நினைவலைகள் நூலில் எழுதிய பகுதியின் தமிழாக்கத்தை ஓய்வு பெற்ற உயரதிகாரி திரு ரமணன் காலையில் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார்.

அவருக்கு நன்றி கூறி அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கீழே உள்ள புகைப்படங்கள், தோழர் என்.எம்.எஸ் அவர்கள் எங்கள் வேலூர் கோட்டத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்த நிகழ்வுகள். அவர் வேலூரில் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியும் கூட இதுதான். தோழர் என்.எம்.சுந்தரம்

( தோழர் சந்திரசேகர் போஸ் அவர்களுடைய ' Talking of Times Past' லிருந்து)

ஏஐஐஇஏ இன்றைக்கு அடைந்துள்ள உச்சத்திற்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அது பெற்றிருக்கும் புகழுக்கும் முக்கியமாக நினைக்கப்பட வேண்டிய தலைவர்கள் சரோஜ் சவுத்திரியும் சுனில் மொய்த்ராவும். இதற்கு அடுத்தபடியாக வருவது தோழர் சுந்தரத்தின் பெயர். முதலில் பொதுச் செயலாளர் என்ற முறையிலும் பின் தலைவர் என்ற முறையிலும் அவர்  மிகுந்த திறமையுடன் ஏஐஐஇஏவை முன்னெடுத்து சென்றார். 

அவர் வளர்ச்சி எளிதாக வந்துவிடவில்லை. எல் ஐ சி உருவாக்கப்பட்ட பின் 1957இல்  நியமிக்கப்பட்ட முதல் அணி ஊழியர்களில் ஒருவர். அவருடைய தந்தை திரு நாராயணன் வளர்ச்சி அதிகாரி. அந்த சங்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தவர். 

தென் மண்டலம் எல்லாவற்றையும் விட பெரிய மண்டலம். சென்னை அதன் தலைமையகம். அந்தக் காலத்தில் அங்கிருந்த சங்கத்தின் தலைமை கட்டுக்கோப்பு இல்லாமலும் உள் பூசல்களும் பிணக்குகளும் அதிகமாகவும் இருந்தன.தென்மண்டலத்தின் தலைவரும் பிரபல கமயூனிஸ்ட் தலைவருமான மோகன் குமாரமங்கலம் அடிக்கடி தலையிடவேண்டியதிருந்தது. ஏராளமான எண்ணிக்கையில் இருந்த புதிய ஊழியர்கள் இந்த மோதல்களை விரும்பவில்லை. சுந்தரம் சென்னையிலுள்ள ஒரு கிளையில் தனது 19வது வயதில் சேர்ந்தார். இதற்கு முன்னால் பூனாவில் தனது உறவினருடன் தங்கி ஆங்கில வழிக் கல்வி கற்று வந்தார். சிறந்த மாணவராகவும் சிறப்பான ஆங்கில சொல்லாற்றலினால் புகழ் பெற்றவராகவும் இருந்தார். தனது ஐஏ(IA) படிப்பை முடித்தபின் எல் ஐ சியில் சேர்ந்தார். பிறகு எல் ஐ சி ஊழியராக இருந்துகொண்டே நேபாள் நாட்டிலுள்ள காத்மாண்டு திருபுவன் பல்கலைக்கழகத்தில் தனித் தேர்வராக பட்டப் படிப்பை முடித்தார். எல் ஐ சியில் சேர்ந்த பிறகு சங்கத்தில் உறுப்பினரானார்.ஊழியர்களிடையே மிகப் பிரபலமானவரானார். இந்தப் பரந்த ஊழியர் ஆதரவினால் குறுகிய காலத்திலயே அவர் மண்டலப் பொதுச் செயலாளரானார்.  ஏஐஐஇஏயின் இயக்கங்களை கோட்ட சங்கங்கள் சிறப்பாக நிகழ்த்துமாறு  ஒருங்கிணைப்பதில் மிகுந்த திறமையை வெளிப்படுத்தினார். மண்டல பொதுச் செயலாளர் என்ற முறையில் அவர் அகில இந்திய சங்கத்தின் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எல் ஐ சியுடன் கோரிக்கை சாசனத்தில் பேச்சு வார்த்தை நடத்தும் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் குழுவில் சரோஜ் மற்றும் சுனிலின் முன்னிலையில் எல் ஐ சி உயர் அதிகாரிகளின் வாதங்களை முறியடித்து நமது கோரிக்கைகளை நிலைநாட்டுவதில் அவர் ஈடு இணையற்ற பாத்திரம் வகித்தார்.

 ஜெய்ப்பூர் மாநாட்டில் அவர் சரோஜின் இடத்தில் பொதுச் செயலாளரானார். ஏஐஐஇஏ தலைமையகம் சென்னைக்கு மாற்றப்பட்டபோது தன்னை சுற்றி மிகத் திறமையானவர்களைக் கொண்ட அணியை உருவாக்கினார். பிறகு இன்சூரன்ஸ் ஒர்க்கர் அலுவலகமும் சென்னைக்கு மாற்றப்பட்டது. அதன் ஆசிரியர் என்ற முறையில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் நிற்கக்கூடியது. இன்சூரன்ஸ் ஒர்க்கரில் ‘நாம் அரசியல் பேசுவோம்’(Let Us Play Politics) என்ற தொடரை எழுதத் தொடங்கினார். இந்த தொடரில் தேசிய மற்றும் சர்வ தேசிய அரசியல் பொருளாதாரம்  குறித்து விளக்கினார். உழைக்கும் வர்க்கம் என்ற முறையில் தங்களது கடமைகள் குறித்த சிந்தனையை செழுமைப்படுத்த வாசகர்களுக்கு  அவை உதவின. பிப்ரவரி 2003இல் நடந்த ராய்ப்பூர் மாநாட்டில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் காலத்தில் அவர் உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு  தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இந்திய தொழிற் சங்க நிலைமைகள் குறித்து  தனது சீரிய கருத்துக்களை சிறப்பான முறையில் முன்வைத்தார். 

சில காலத்திற்குப் பிறகு அவருடைய உடல்நலம் காரணமாக அவரது பணிகளின் வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருந்தது. ஆனால் எல் ஐ சி ஊழியர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்த அவரது ஆலோசனைகள் ஏஐஐஇஏ முன்னேறி செல்ல எப்போதுமே உதவின.

            பல்வேறு கோட்டங்களில் உருவாக்கப்பட்ட சங்க ஊழியர் அணிகள் அவரது  தலைமைப் பண்பிற்கு சான்றுகளாக உள்ளன. பெங்களூரு கோட்டத்திலிருந்து தோழர் அமானுல்லாகான் ஏஐஐஇஏ தலைவராக உள்ளார். ஹைதராபாத் கோட்டத்திலிருந்து தோழர் வேணுகோபால் பொதுச் செயலாளரானார். இன்றும் ஏஐஐஇஏயின் தலைமையகம் ஹைதராபாத்தில் இயங்குகிறது. தோழர் ரமேஷ் பொதுச் செயலாளராக உள்ளார். தோழர் அமானுல்லாகானை ஆசிரியராகக் கொண்டு இன்சூரன்ஸ் ஒர்க்கர் பெங்களூரிலிருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

 2017ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுந்தரம் நம்மை விட்டு பிரிந்தார் என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.தோழர்கள் சரோஜ்,சுனில்,சுந்தரம் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவர்கள் காட்டிய பாதையில் ஏஐஐஇஏ முன்னே சென்று கொண்டு இருக்கிறது.

Wednesday, December 25, 2019

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் . . .கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு

மின்சாரக்கனவு படத்தில் வரும்

"அன்மென்ற மழையிலே அகிலம் நனையவே"

பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்

மனமெல்லாம் அங்கேதான் . . .இன்று வெண்மணி தியாகிகள் நினைவு தினம்.

2004 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த எங்கள் தோழர்களோடு அங்கே சென்று கொண்டு இருக்கிறேன்.

உச்சகட்ட தியாகம் புரிந்த தோழர்களின் நினைவகத்தில் நிற்கையில் ஏற்படும் உணர்வுகளை இன்று வரை என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயல முடியவில்லை.

நம்மை புதுப்பித்துக் கொள்ளும் ரீசார்ஜ் பயணமாகவே நான் வெண்மணி பயணத்தை பார்க்கிறேன்.

சிறிய உடல் நிலை நலிவு காரணமாக இந்த வருடம் வெண்மணி பயணத்தில் மற்ற தோழர்களோடு இணைய முடியவில்லை.

ஆனாலும் மனம் என்னமோ அங்கேதான், வெண்மணியில்தான் உள்ளது. அந்த நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை என்பது உடல் உபாதையை விட பெரிதும் வலிக்கிறது.

அடுத்த வருடம் கலந்து கொள்வோம் என்ற நம்பிக்கை அந்த வலிக்கு மருந்தாக இருக்கிறது.

கலந்து கொண்ட எங்கள் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்.

உங்கள் தியாகம் இந்த மண்ணில் மாற்றம் வர போராடுபவர்களுக்கு என்றென்றும் எழுச்சி தரும் . . .

Tuesday, December 24, 2019

பெரியார் என்றால் இன்னும் பயம் . . .


தந்தை பெரியார் மறைந்து நாற்பத்தி ஆறு வருடங்களாகி விட்டது.

ஆனாலும் அந்த பெயரை நினைத்தாலே சங்கிகளுக்கு நடுங்கிறது. சங்கிகளை துரத்தி துரத்தி அடிக்கும் மண்ணாக தமிழகம் இருப்பதற்கு பெரியார் அமைத்த சமூக நீதி அடித்தளம் காரணம் என்பதால் பெரியார் என்ற பெயரே  சங்கிகளுக்கு எரிச்சலும் அச்சமும் தருகிறது.

அதனால்தான் அவரை இழிவு படுத்த முயற்சிக் கொண்டே இருக்கிறார்கள்.

அதிலும் நேற்றைய சென்னைப் பேரணி சங்கிகளின் உறக்கத்தை கெடுத்து விட்டது போல . . .

அதனால்தான் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார்கள்.


ஆனால் பாவம் இதற்கும் அடிதான் வாங்கினார்கள்.

பதிமூன்று வயதுப் பெண்ணை பால்ய விவாகம் செய்த குற்றவாளி மோடியை பாக்சோவில் கைது செய் என்று சொல்வார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

பாலியல் குற்றவாளிகள் நிரம்பிய கயவர்களைக் கொண்ட கட்சி என்பதை வேறு பட்டியலிட பதிவை நீக்கி விட்டு பதுங்கி விட்டார்கள்.

சங்கிகளுக்கு பெரியார் என்றால் வருகிற 

அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு 

Monday, December 23, 2019

இந்த ஒரு படம் போதும்

மோடி  அரசுக்கு எதிரான சென்னைப் பேரணி.இந்தியாவின் ஒற்றுமை எங்கே என்பதை இப்படம் உணர்த்தும்.
இதனை சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் இந்தியா முழுதும் நடக்கும் போராட்டங்கள் சொல்லும் செய்தி.

மடை திறந்து தாவும் நதியலை . . .ராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான

"மடை திறந்து தாவும் நதியலை நான்" 

பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்.

இதுதான் கம்யூனிஸ்ட் கெத்து

படமே போதும், 
நன்றி தோழர் வெண்புறா சரவணன்

மோடிக்கு எந்த பெயர் பொருத்தம்?தனது அராஜக ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு அர்பன் நக்ஸல் என்று முத்திரை குத்துகிற மோடிக்கு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்?

அர்பன் நாஜி?

இந்திய நாஜி?

காவி நாஜி?

சங்கி நாஜி?

இந்திய ஹிட்லர்?

காவி முசோலினி?

சங்கி அமீன்?

பொருத்தமான பெயரைச் சொல்பவர்களுக்கு இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படும் பொன்னான வாய்ப்பு உண்டு.


Saturday, December 21, 2019

ராசாவோட தேஷ் பக்த் காமெடிதமிழகம் தேச பக்தர்களின் மண் என்பதை நிரூபிக்க வாருங்கள் என்று எச்.ராசா அறைகூவல் விடுத்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ்காரர்களைத் தவிர வேறு யாரும் வந்ததாகத் தெரியவில்லை.

ஆமாம்.

அப்படி வந்திருந்தால் அலைகடலாக திரண்டிருந்த தொண்டர்களின் புகைப்படங்களை போட்டிருப்பார்களே!

தமிழகம் நிஜமாகவே தேச பக்தர்களின் மண்தான்.

உண்மையான தேச பக்தர்களின் மண்.

காவி சங்கிகள் போன்ற போலிகளை துரத்தியடிக்கும் மண்

Thursday, December 19, 2019

ரோஜாவின் ஊடே ஒரு வரலாறுதாக்குதலைத் தொடங்க எப்போது ஆணை கிடைக்கும் என்று வெறியோடு, கையில் தடியோடும் துப்பாக்கியோடும், உடலெங்கும் கவசத்தோடு காத்திருக்கும் சீருடை அணிந்த நவீன மிருகங்கள், ரோஜா மலரை புன்னகையோடு நீட்டும் பெண்ணின் செயல் கண்டு திகைத்து நிற்கின்றன.

ஆனாலும் அவர்களை நம்ப முடியாது. அழிவுக்கான ப்ரொக்ராம் மட்டும் எழுதப்பட்ட அந்த தாக்குதல்கள் இயந்திரங்களுக்கு நேசமும் நியாயமும் என்றைக்கும் புரியாது.

ஆனாலும் இப்படங்கள் கலவரங்களுக்கு காரணம் யார் என்பதை உலகிற்கு என்றென்றும் உணர்த்திக் கொண்டிருக்கும்.

அப்பெண்ணின் கையில் உள்ள அட்டையில்

"நான் வரலாறு படிப்பதாக 
என் தந்தை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவருக்குத் தெரியாது,
"நான் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று

ஆம் பெண்ணே,
நிஜம்தான்.
அடக்குமுறைக்கு அஞ்சாமல்
நேர் கொண்ட பார்வையோடு
ரோஜாக்களின் ஊடே 
நீ
வரலாறு படைத்துக் கொண்டுதான் இருக்கிறாய்!

மோடி, கரடியே . .ஜெயமோகனே . .குடியுரிமை மசோதா தொடர்பாக ஜெயமோகன் எழுதியுள்ளது என்பது மோடியைப் பொறுத்தவரை கரடியே காரித்துப்பிய மொமெண்ட்தான்.

அவரது கட்டுரையின் இறுதிப்பகுதிதான் மேலே உள்ள படத்தில் உள்ளது. இப்படி ஜெயமோகனையே புலம்ப வச்சுட்டீங்களே மோடி !!!!

ஆனால் ஜெமோ தன் நிலையில் உறுதியாக இருப்பாரா? அல்லது பல்டி அடிப்பாரா?

எதற்கும் இருக்கட்டும் என்று ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளேன்.