Saturday, December 31, 2022

மோடியின் அனுதாப அசிங்க அரசியல்

 


மோடியின் தாய் இறந்து விட்டார். மோடிக்கு அனுதாபங்கள்.

மோடியின் தாய் இறந்ததை வைத்து சங்கிகள் செய்யும் ஆரவாரத்தை சுட்டிக் காட்டாமல்  இருக்க முடியவில்லை.

"இறுதிச்சடங்கு முடிந்த நான்கு மணி நேரத்தில் வேலைக்கு வந்து விட்டார். அரசு மரியாதை கேட்கவில்லை, எந்த இடமும் கேட்கவில்லை, கலவரமெல்லாம் ஏதுமில்லை"

என்றெல்லாம் சங்கிகள் அளப்பதைப் பார்த்தால் அந்தம்மா உயிரோடே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

போட்டோகிராபர் துணையில்லாமல் அம்மாவை பார்த்தது கிடையாது, மயில், கிளி, பாறை போல வெறும் செட் ப்ராப்பர்டியாகவே  அம்மாவை பயன்படுத்திய ஜந்து மோடி. 

இனிமேல் அந்த செட் ப்ராப்பர்டிக்கு வேலை கிடையாது என்பதால் அம்மாவை வைத்து கடைசியாக ஒரு ஈவண்டை நடத்தி விட்டார். 

அம்மா மரணத்தை வைத்து அனுதாபம் தேடிக்கொள்ளும் அற்ப அரசியல்வாதி மோடி. அதற்கு பில்ட் அப் கொடுக்கும் சங்கிகள் அடி முட்டள்கள் அல்லது அயோக்கியர்கள்                                                                                                                                                                    

சாவே கிடையாது

 



தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய பதிவு கீழே உள்ளது. இப்படி அனைவரும் கேட்டால் உலகில் மரண தண்டனையே கிடையாது. 





Friday, December 30, 2022

ஆட்டுக்காரா, அடுத்தவர் உயிரோடு விளையாடாதே!

 


அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்வீட் கீழே உள்ளது.

 


ஆட்டுக்காரனுக்கு பொறுப்பெல்லாம் கிடையாது என்பது ஏற்கனவே தெரிந்த விஜயம்தான். அதற்காக இப்படி பயணிகளின் உயிரோடு விளையாடும் அளவுக்கு பொறுப்பில்லாமல் தற்குறித்தனமாகவா இருப்பது.

 பிகு1 : அதெப்படி ஒரு மந்திரி பெயரை குறிப்பிடாமல் கிசுகிசு பாணியில் எழுதுவது என்று “மத்யமர் ஆட்டுக்காரன்” குழுவில் சங்கிகள் அமைச்சரை கண்டித்துக் கொள்கிறார். ஆட்டுக்காரன் இப்படி செய்யலாமா என்று கேட்க அங்கே ஒரு சங்கி கூட தயாரில்லை. 

 பிகு 2 : மேலேயுள்ள படத்தையும்  அதே ஆட்டுக்காரன் குழுவில்தான் போட்டு “வருங்கால தமிழக முதல்வரும் வருங்கால கர்னாடக முதல்வரும் என்று எழுதியிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் ஒரிஜினல் லட்சணம் என்பதை அந்த படத்தில்  இணைத்தேன்

முன்னோடி நாயகனுக்கு . . .

 


கால்பந்து விளையாட்டின் முதல் சூப்பர் ஸ்டாரான பிரேசிலின் பீலேவிற்கு மனமார்ந்த அஞ்சலி.

இரண்டு காணொளிகள் இங்கே.

ஒன்று அவர் ஒரு போட்டியில் கோலடிக்கும் தருணம்.



இரண்டாவது போட்டி "எஸ்கேப் டு விக்டரி" என்ற திரைப்படத்தின் காட்சி. இன்றைய கால்பந்து திரைப்படங்களுக்கும் இக்காட்சிதான் முன்னோடி. 




Thursday, December 29, 2022

மோடி நேருவாக முடியாது . .

 


மோடி தன் அம்மாவுக்கு ஈழுதிய கடிதங்கள் என்றொரு நூல் வெளி வந்திருப்பதாக அறிந்தேன். மனம் விட்டு சிரித்தேன்.

 


“உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது” என்ற பழமொழி மோடிக்குத்தான் பொருந்தும்.

 என்னத்தான் மோடி எப்போதும் நேருவை திட்டினாலும் அவர் நேரு போல தன்னை காண்பித்துக் கொள்ள முயல்கிறார். நேரு சிறையிலிருந்து தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் நூலாகி உலகப் புகழ் பெற்றது போல தானும் ஒரு நூல் எழுதி புகழ் பெற நினைக்கிறார் போல. . .

 எதுவும் தெரியாத முட்டாள் என்று நிரூபணமான மோடிக்கு புத்தகம் எழுதிக் கொடுத்த  பிசாசு எழுத்தாளர் (Ghost Writer)  யாரோ?

 அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் என்று நூல் வெளியிடுவதற்குப் பதில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொகுத்து நூலாக்குங்கள் மோடி. அதுதான் உங்கள் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நூலாக இருக்கும்.

 

Wednesday, December 28, 2022

அவங்களுக்கு இடமளிக்கலாமா முதல்வரே!

 


பொங்கல் தொகுப்போடு கரும்பு வழங்குவதென்ற முடிவு தாமதமானாலும் வரவேற்கத்தக்கது.

 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பி.சண்முகம் எழுதிய பதிவுதான் நினைவுக்கு வந்தது.

 

 


இந்த முடிவை நீங்கள் முன்னரே எடுத்திருக்கலாம். இப்போது என்ன ஆயிற்று பாருங்கள்.

 ஏதோ ஆட்டுக்காரன் கோரிக்கை வைத்ததால்தான் நீங்கள் முடிவெடுத்ததாக முட்டாள் சங்கிகள் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 சங்கிகள் பேச இடம் கொடுக்கலாமா முதல்வரே ????

நல்லது. உறுதியாய் தொடரட்டும்

 



புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்த இரண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

அதிலே வேங்கை வயல் கிராமத்து கோயிலுக்கு தலித் மக்களை மாவட்ட ஆட்சியரே அழைத்துச் சென்றுள்ளார். சாமி வந்தது போன்ற போர்வையில் தலித் மக்களை இழிவாக பேசிய பூசாரியும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சிறப்பு. இன்னொரு பிரச்சினையிலும் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்று நம்புவோம்.

இது போன்ற தீண்டாமைக் குற்றங்களில் அரசு எடுக்கிற உறுதியான நடவடிக்கைகள்தான் இனியொரு குற்றம் நிகழாமல் தடுக்கும். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் சொல்வது போல குற்றவாளிகளின் சொத்துக்களை பறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.

ஆனால் அது எந்த அளவு சாத்தியமென்று தெரியவில்லை. ஆண்ட பரம்பரை என்று பீற்றிக் கொண்டாலும் குற்றங்களை நிகழ்த்துபவர்களும் பாதிக்கப் பட்டவர்கள் போல அன்றாடங்காய்ச்சிகளே. வெட்டி ஜாதிப் பெருமைதான் அவர்களின் சொத்து. 

Tuesday, December 27, 2022

அற்பன் ஜெமோவும் கலை இரவுகளும்

 



 மாதம் ஒரு அசிங்கப்படுவது என்பதை ஒரு விரதம் போல ஜெயமோகன் கடைபிடிக்கிறார் என்று சில நாட்கள் முன்பாகத்தான் எழுத்தாளர் தோழர் இரா.முருகவேளின் ஆஜான் பற்றிய முகநூல் பதிவிற்கு பின்னூட்டம் எழுதியிருந்தேன். மாதம் ஒருமுறை என்பதை ஆஜான் வாரம் ஒரு முறை என்று மாற்றி விட்டார்.

 தமுஎகச தமிழகமெங்கும் தொடர்ச்சியாக வீரியத்தோடு நடத்தி வரும் கலை இரவுகளைப் பற்றி ஆஜான் எழுதியிருப்பது கீழே.

 


 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பு முன்னெடுத்த ஒரு நிகழ்வை அன்று அந்த அமைப்பின் திருவண்ணாமலை பொறுப்பாளராக இருந்த ஒருவரோடு மட்டும் சுருக்கப் பார்க்கும் விஷமத்தனம். ஆஜான் குறிப்பிட்டவரோடு மட்டுமல்லாமல் மறைந்த தோழர் கருப்பு கருணா, ஓவியர் பல்லவன் ஆகியோரும் இணைந்து துவக்கிய நிகழ்வு கலை இரவு. தமுஎச என்ற அமைப்பின் சார்பில் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட  நிகழ்வு அது.

 ஒற்றை பத்தியில் எத்தனை பாட்டில் விஷத்தை கக்குகிறார் ஜெமோ என்று பார்ப்போமா!

 

தனி நபர் முன்னெடுத்த நிகழ்வு.

அரசியல் புகுந்தது,

அரசியலால் அழிந்தது.

திருவண்ணாமலையில் மட்டும் முதலில் முன்னெடுத்தவரால் மட்டும் உயிர்ப்போடு உள்ளது.

 தனி நபர் மட்டும் முன்னெடுத்தது அல்ல. தனி நபருக்கான பாத்திரம் இருப்பினும் அமைப்பின், அமைப்பின் மற்ற பொறுப்பாளர்களின் பங்களிப்பும் சற்றும் குறைந்தது அல்ல.

 அரசியல் என்பது புகவில்லை. உழைக்கும் மக்களுக்கான அரசியலோடுதான் தொடங்கியது. உழைக்கும் மக்களுக்கான செய்தியை கலை வடிவில் எடுத்துச் செல்வது என்பதுதான் நோக்கம்.  கலை கலைக்காகவே என்று அதனை புனிதப்படுத்துவது ஜெயமோகனின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் கலை மக்களுக்காக என்பதை கோட்பாடாகக் கொண்ட தமுஎச அமைப்பு எப்படி அரசியல் பார்வை இல்லாமல் ஒரு நிகழ்வை நடத்தும்! கட்சி அரசியல் அல்ல, வர்க்க அரசியல், பாட்டாளி வர்க்க அரசியல்

 கலை இரவு நிகழ்ச்சி அரசியலால் அழிந்தது என்பது அவருடைய அடுத்த குற்றச்சாட்டு.  

 திருவண்ணாமலை கலை இரவைத் தொடர்ந்து சென்னையில் கலை இரவு நடைபெறுகிறது. அந்த நிகழ்வின் பொறுப்பாளர்களில் ஒருவர் மறைந்த எங்கள் இன்சூரன்ஸ் தோழர் டி.ஏ.விஸ்வநாதன். ஒரு நீண்ட ரயில் பயணத்தில் (கான்பூர் முதல் சென்னை வரை மூன்றே தோழர்கள் ஒரு அகில இந்திய செயற்குழு முடிந்து திரும்பி வந்தோம்) சென்னை கலை இரவு முடிந்ததும் கட்சியிலிருந்து கலை இரவு வடிவம் மிகவும் அதிகமான மக்களை சென்றடைவதால் அனைத்து மாவட்டங்களும் முயற்சிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பினார்கள் என்று சொன்னது நினைவில் உள்ளது.

 தமுஎகச தாண்டி தொழிற்சங்கங்களும் கலை இரவு நடத்தத் தொடங்கினார்கள். இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு வேலூரில் நடைபெற்ற போது அதனால் ஈர்க்கப்பட்ட நாங்களும் 1998 ல் புதுவையில் நடைபெற்ற எங்கள் கோட்ட மாநாட்டில் முதல் முறையாக கலை இரவு நடத்தினோம். எங்கள் கோட்டத்தில் பிரிக்க முடியாத அங்கமாக கலை இரவு மாறி விட்டது. 1999 ம் ஆண்டு எங்கள் மாநாடு திருவண்ணாமலையில் கோட்ட மாநாடு நடைபெற்ற போது வரவேற்புக்குழுக் கூட்டத்தில் தமுஎகச  பொறுப்பாளர் தோழர் கருப்பு கருணாதான் “மக்கள் ஒற்றுமை கலை விழா” என்று பெயர் சூட்டுங்கள் என்ற ஆலோசனைப்படி இப்போதும் நாங்கள் “மக்கள் ஒற்றுமை கலை விழா” என்றுதான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

 


கலை இரவுகள் எப்போதும் போல இப்போதும் கொண்டாட்டமாக உயிர்ப்போடு தமிழகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வடிவம் அழிந்து விட்டது என்று சொல்வது ஜெயமோகனின் வக்கிர புத்தி. அந்த வடிவம் அழிய வேண்டும் என்ற அவரின் விருப்பத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார். ஜெயமோகனின் பார்வைக் கோளாறு என்பதைத் தாண்டி இக்குற்றச்சாட்டில் ஏதுமில்லை.

 திருவண்ணாமலையில் அந்த கனவை அவர் உயிர்ப்போடு வைத்திருக்கிறார் என்பது ஆஜானின் அடுத்த ஸ்டேட்மெண்ட்.

 ஆஜான் குறிப்பிடும் பவா செல்லத்துரைக்கு அவருடைய முகநூல் பதிவு ஒன்றில் “உங்களை முன்னிறுத்தி ஜெயமோகன் தமுஎகச அமைப்பை சிறுமைப்படுவது தொடர்பாக உங்களின் மௌனத்தை கலையுங்கள் தோழர்” என்று பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த நிமிடம் வரை அவர் மௌனம் கலையவில்லை. சுயமோகன் சொல்வதை அவர் ரசிக்கிறார் என்றுதான் அந்த கள்ள மௌனம் தெரிவிக்கிறது. அதனால் அவருடைய முந்தைய பதிவொன்றி ஏற்பட்ட நெருடலையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 

தோழர் கருப்பு கருணா மறைந்த போது அவர் நீண்ட பதிவொன்றை எழுதி இருந்தார். தமுஎகச அமைப்பின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்ற போது அதற்கான நிதியை திரட்டும் பொறுப்பு அவர் தலையில் சுமத்தப்பட்டு விட்டது என்பது அதில் ஒரு குற்றச்சாட்டு. எந்த ஒரு பெரிய நிகழ்விற்கான நிதியை தனி ஒருவரால் திரட்ட முடியும் என்பதெல்லாம் எந்த காலத்திலும் சாத்தியமானதில்லை.

  திருவண்ணாமலையில் ஒரு குறிப்பிட்ட நாளன்று வீடு வீடாக மக்களை சந்தித்து நிதி திரட்டினார்கள் என்பதை நான் அறிவேன். அதற்காக ஏராளமான சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியிருநார்கள். நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களும் மற்ற வெகு ஜன அமைப்புக்களின் தோழர்களும் அந்த பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

 அன்றைய தினம் எங்களின் கோட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில்தான் நடந்து கொண்டிருந்தது. வெங்கடேசன் என்ற கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமையிலான குழு எங்கள் செயற்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திடிரென உள்ளே நுழைந்து எங்களிடம் நிதி திரட்டினார்கள். இப்படி கூட்டத்தின் நடுவில் ஒரு தகவல் கூட சொல்லாமல் வந்து விட்டார்களே என்று ஒரு சிறு எரிச்சல் கூட வந்தது. அப்படிப்பட்ட தோழர்களின் உழைப்பை சிறுமைப்படுத்தியது ஜெயமோகனின் சகவாசத்தினால்தானோ என்று கூட தோன்றியது.

 இட்லி வேகவில்லை என்ற புகாரைக் கூட என்னிடம் தெரிவித்தார்கள் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டு. மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளரிடம்தான் மாநாட்டு பங்கேற்பாளர்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முடியும். இது சொந்த அனுபவமும் கூட, மாநாட்டு பங்கேற்பாளனாகவும் அமைப்பாளராகவும்.

 நான் ஒரு படைப்பாளி, எழுத்தாளன், என்னிடமா இதையெல்லாம் சொல்வது என்ற புலம்பல் எல்லாம் அமைப்பை விட தான் மிகவும் மேலானவன் என்ற கொம்பு முளைத்த சிந்தனையின்றி எதுவுமில்லை.

 கலை இரவு கனவை, தமுஎகச அமைப்பை அதன் பொறுப்பாளர்கள் இன்றளவும் உயிர்ப்போடுதான் வைத்திருக்கிறார்கள். ஆஜானின் சிந்தனைதான் எப்போதும் போல புளித்த தோசை மாவு.

 அவர் நண்பர் கனவை எப்படி உயிர்ப்போடு வைத்திருக்கிறார்! உண்டாட்டு என்ற நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம். அது என்ன உண்டாட்டு? கறி சோறுடன் கூடிய மது பான விருந்து.

 ஜெயமோகனின் பொய்களை, அராஜகங்களை அம்பலப்படுத்தக் கூடிய பலரும் இருப்பது தமுஎகச அமைப்பு என்பதால் அதனை சிறுமைப்படுத்த முயற்சித்து இன்பம் காணுகிறார் ஆஜான். எந்த ஒரு மன நல மருத்துவரும் குணப்படுத்த முடியாத அளவிற்கு அவரது மன வியாதி முற்றி விட்டது என்பதுதான் உண்மை.

 







பிகு: தமுஎகச அமைப்பின் வேலூர் மாவட்டத்தின் காட்பாடி கிளை வரும் 31.12.2022 அன்று கலை இரவு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். ஜெயமோகனுக்கு அந்த நிகழ்வின் அழைப்பிதழ் சமர்ப்பணம் ( எங்கள் அழைப்பிதழ் ஒரு அற்பனுக்கு சமர்ப்பணமா என்று தோழர் ஸ்ரீராம் கோபித்துக் கொள்ளாதீர்கள்)

கயவர்களை கைது செய்

 




இன்று காலையில் பார்த்த இரண்டு செய்திகள் மிகவும் கோபத்தைக் கொடுத்த்து

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற கிராமத்தில் தலித் மக்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய மேல்நிலை குடிநீர் தொட்டியில் சில கயவர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளனர். சில குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அதற்கு காரணம் மாசுபட்ட தண்ணீர் என்று மருத்துவர் கூறியதால் இந்த அராஜகம் தெரிய வந்துள்ளது. . 

சேலம் மாவட்டம் விருதசம்பட்டி என்ற கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆதிக்க சக்திகள் பேச்சு வார்த்தைக்கு ஒத்து வராததால் கோயில் இப்போது சீலிடப்பட்டுள்ளது.

இந்தியாவை காட்டுமிராண்டிக் காலத்திற்கு கொண்டு போக முயற்சிக்கும் இக்கயவர்களை கைது செய்ய வேண்டும், கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

தமிழக அரசு ஊசலாட்டம் இல்லாமல் செயல்பட வேண்டும். 

Monday, December 26, 2022

வெண்மணியில் எங்களின் . . .

 


ஆகஸ்ட் மாதம் எங்களின் தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநாட்டுப் பணிகள் தொடர்பாக திட்டமிட்டுக் கொண்டிருந்த போது எங்கள் கோட்டத் தலைவர் தோழர் எஸ்.பழனிராஜ் ஒரு ஆலோசனையை முன்வைத்தார்.

 “மாநாட்டு வளாகத்தில் அனைவரையும் ஈர்ப்பது போன்ற ஒரு கலை வடிவை அமைக்க வேண்டும். மாநாட்டிற்கு வருகிற அனைத்து தோழர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள தூண்டும் விதத்தில் அந்த வடிவம் அமைய வேண்டும். வேலூர் மாநாட்டின் நினைவாக அந்த புகைப்படம் இருக்கும்”

 என்பதுதான் அந்த ஆலோசனை.

 பல சகோதர அமைப்புக்களின் நிகழ்வுகளுக்கு சிலை வடித்துக் கொடுத்திருக்கிற சிற்பி தோழர் கா.பிரபாகரன் அவர்களை அணுகினோம். அவர் வடித்திருந்த ஒரு மாதிரி ஸ்தூபியைக் காண்பித்தார். இதை எந்த அமைப்பாவது ஃபைபரில் அமைத்துக் கொடுத்தால் கீழ்வெண்மணியில் அமைந்துள்ள புதிய வெண்மணி நினைவாலயத்தில் வைக்கலாம் என்று சி.ஐ,.டி.யு சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் அ.சவுந்தரராஜன் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார். நீங்கள் ஏன் இதனை மாநாட்டில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பயன்படுத்திக் கொண்டு பின்பு வெண்மணிக்கு அளித்து விடலாமே என்ற முன்மொழிவை வழங்கினார்.

 தலைமையகத்தில் உள்ள பொறுப்பாளர்கள் விவாதித்த போது அந்த முன்மொழிவு முழு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கியது.

 மாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகவே தியாகிகள் நினைவுச் சின்னம் அமைந்தது. அனைவராலும் பாராட்டப்பட்ட படைப்பு அது.  அவ்வளவு அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் தோழர் பிரபாகரன் வடிவமைத்துக் கொடுத்திருந்தார். 

 நேற்று வெண்மணி தினத்தன்று அந்த தியாகிகள் ஸ்தூபி வெண்மணி நினைவாலயத்தில் எங்களால் அர்ப்பணிக்கப்பட்டது.

 


வெண்மணிக்கு வந்த தோழர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாகவே அமைந்திருந்தது. வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சுலி செலுத்த வந்த எங்கள் வேலூர் கோட்டத் தோழர்கள் அனைவரோடும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி ஒரு அரை மணி நேரம் போல காத்திருந்தோம். அந்த நேரத்தில் மட்டும் குறைந்த பட்சம் 500 தோழர்கள் தனியாகவோ குழுவாகவோ படமெடுத்துக் கொண்டதை பார்க்க முடிந்தது. நிறைவாகவும் இருந்தது.

 




வெண்மணித் தீயில் மடிந்த 44 தியாகிகளின் நினைவைப் போற்ற எங்களால் முடிந்த சிறிய பணி என்ற உணர்வோடு வெண்மணியிலிருந்து புறப்பட்டோம்.

 

 

 

Sunday, December 25, 2022

காவிக்கு களங்கம் எதனாலே?

 


 
காவியுடை அணிந்துதான் . . .
 
ஆலய வாசல்கள் முன்னே
பிச்சையெடுப்பது
காவியுடை அணிந்துதான்.
 
காசியில் கஞ்சா பிடிப்பது
காவியுடை அணிந்துதான். .
 
பாலியல் பலாத்காரம் செய்த
பாவிகள் சிலருக்கு
பாதுகாப்புக் கவசம்
 காவியுடைகள்தான்.
 
மிருகக் கொழுப்பை ஆயுர்வேத மருந்தென்று
ஏமாற்றி விற்பவன் அணிவதும் காவியுடைதான்.
 
அரசு நிலங்களை ஆக்கிரமித்து
கோயில் கட்டி கல்லா கட்டுபவர்
அணிவது காவியுடைதான்.
 
ஊழல்களை அம்பலப்படுத்தியவரை
வெட்டிச்சாய்க்க கொலையாளிகளை
அனுப்பியவர் அணிந்திருந்ததும்
காவியுடைதான்.
 
எல்லா குற்றங்களும் செய்து
தனி நாடு கண்டவர் பறந்ததும்
காவியுடையில்தான்.
 
காவிக்கு களங்கம் இதனாலா?
கால் நிமிட நடனத்தாலா

விருது நாவல் பற்றி எழுத்தாளர் எழுதியது . . .

 இந்த வருடம் சாகித்ய அகாடமி விருது பெற்ற "காலா பாணி" நாவல் பற்றி தீவிர வாசிப்பாளரும் முன்னணி எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ் ஐந்தாண்டுகள் முன்பு எழுதிய நூல் அறிமுகத்தை பகிர்ந்து கொள்கிறேன். அவரது அறிமுகமே சொல்கிறது விருதுக்கு தகுதியான நூல் என்று. இந்த வருட புத்தக விழாவில் வாங்கி படித்து விட்டு என் கருத்தையும் எழுதுவேன்.




பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்றால் மருத்துவர் வெளியூர் சென்றீர்களா? கடந்த 2- 3 நாட்களில் வெளியில் சாப்பிட்டீர்களா? என்ன சாப்பிட்டீர்கள் ? என்று கேட்கிறார். இன்னும் சில நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்குப் போனால் கடந்த சில வருடங்களாக உங்கள் வேலை, உணவுப் பழக்கம், தூக்கம் போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன. சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிக்கு இந்த நோய் இருந்ததா என்ற பழைய கதை தேவை. எனவே தனி மனிதனின் நோயைத் தீர்க்க அவனது பழைய வரலாறு அவசியம். சமூகத்தின் நோயைத் தீர்க்க சமூகத்தின் பழைய வரலாறு அவசியம் என்று அந்த நூலாசிரியர் சொல்லியிருப்பார். நான் அதற்கு முன்பிருந்தே வரலாற்று நூல்களை மிக ஆர்வமாகப் படிப்பேன் என்றாலும், மேற்சொன்ன கருத்தைப் படித்த பிறகு கூடுதல் அக்கறையோடும், கவனத்தோடும் வரலாற்று நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியான தேடலில் சமீபத்தில் கிடைத்தது தான் டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் காலா பாணி என்ற வரலாற்று நாவல்.

இந்திய விடுதலை இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது கட்டபொம்மன், மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த எதிர்ப்பியக்கங்கள்தான். ஏற்கனவே டாக்டர் ராஜேந்திரன் அந்த வீர வரலாற்றை 1801 என்ற நாவலாக எழுதியிருக்கிறார். அது பரவலான கவனத்தையும் பெற்றது. மருது சகோதரர்களுடம் 512 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட கிழக்கிந்தியக் கம்பெனி சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவன், சின்ன மருதுவின் புதல்வன் 12 வயது சிறுவன் துரைசாமி உட்பட 73 பேரை நாடு கடத்தியது. பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் நாடுகடத்தப்பட்ட முதல் அரசர் னஉடையணத் தேவன்தான். இப்படி நாடு கடத்தப்பட்டவர்களை கம்பெனி காலா பாணி என்ற குறிப்பிட்டது. காலா பாணிகள் 11.02.1802 அன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பி 66 நாட்கள் பயணத்தில் பினாங்கு வந்து சேர்கிறார்கள். இதில் உடையணத் தேவன் மட்டும் பிரி்ககப் பட்டு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார். 19.09.1802 தனது முப்பத்திநான்காவது வயதில் தனிமைச் சிறையில் இறந்து போகிறார் உடையணத் தேவன். அந்தக் கண்ணீர்க் கதைதான் காலா பாணி. இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழகத்திலிருந்து தான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவும் படைப்பு. படைப்பிற்கு உதவிய துணைநூல்களின் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏராளமான ஆவணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இன்று வந்து கொண்டிருக்கும் பல டாக்கு ஃபிக்ஷன் போல் கூகுள் செய்து உட்கார்ந்த இடத்திலிருந்து எழுதப்பட்டதல்ல. உடையணத் தேவனின் மதுரை சக்கந்தி அரண்மனையிலிருந்து, பினாங்கு, பென்கோலன் என்று உடையணத் தேவனின் அந்த இறுதிப்பயண இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். கட்டபொம்மன், உடையணத் தேவன் போன்றோரின் இன்றைய வாரிசுகளிடம் நேர்காணல் செய்திருக்கிறார். உடையணத்தேவனின் வாளைக் கையில் ஏந்திப் பார்த்திருக்கிறார். கள ஆய்வு ஒரு நாவலுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை, அதுதான் நாவலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டும் நாவல்.

காலா பாணி அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து தமிழகம், தமிழகம் மட்டுமல்ல, அன்றைய உலகம் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தைத் தருகிறது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சியின் சிறைத் தகர்ப்பை அறிந்து அதைப் போல கோயம்புத்தூரில் ஒரு சிறை உடைப்பை போராளிகள் நடத்துகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. சோஸ் லெப்டினென்ட், ஆப்காரி காண்ட்ராக்டர், மிஸ்தீஸ், பேஷ்குஷ் கலெக்டர், இஸ்திமிரார் என்று எத்தனை எத்தனை புதுப் புது வார்த்தைகள் ! கம்பெனி பதவிகள், அதிகாரப் படிநிலைகள், அலுவலக நடைமுறைகள், எந்தப் பதவியில் உள்ளவர் வரும் போது எத்தனை குண்டு முழங்க வரவேற்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்கள், அன்றைய மருத்துவ முறைகள், பானர்மேனின் சமாதி பினாங்கில் இருப்பது, என்று ஏராளம் ஏராளமான தகவல்கள். துலுக்கப் பெண்ணை சாகிபா என்றும், மலாயா பெண்ணை நயோன்யா என்றும், மராட்டிய பெண்ணை மாதுஸ்ரீ அல்லது பாயி சாகேப் என்றும். வெள்ளைக்காரியை மேம் சாகிபா என்றும், பிரெஞ்சுக்காரியை மதான் என்றும் தமிழ் பெண்ணை நாச்சியார் என்றும் அழைக்க வேண்டும் என்ற ஓரிடத்தில் ஒரு படை வீரன் சொல்கிறான். இந்தியாவைச் சுற்றியுள்ள சின்னச் சின்னத் தீவுகளில் கம்பெனியின் ஆட்சி, அங்கு அடிமையாகவும், கைதியாகவும் போய் வாழ்நாள் முழுதும் துன்பத்தில் உழலும் தமிழர்கள், சந்தர்ப்பவசத்தால் சற்றே வசதியான வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள், அவர்கள் தம் சக தமிழர்களுக்குச் செய்யும் மிகச் சிறிய உதவிகள் எல்லாமே மிகையின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

ஆனால் நாவலில் ஆடம்பரமான மொழிநடை, வர்ணனைகள் எதுவும் கிடையாது. இயல்பான மொழி. ஆசிரியர் தனது மொழித் திறமையைக் காட்ட வேண்டும் என்று எந்த இடத்திலும் வலிந்து மிகையாக எதையும் எழுதவில்லை. ஆனாலும், பெரிய உடையணத் தேவன் தன் சகாக்களோடும், கம்பெனி அதிகாரிகளோடும் கையறு நிலையில் பேசும் போது எனக்கு கண் கலங்குகிறது. அதுவும் அந்த கடைசி மூன்று பக்கங்கள்....

அன்றாடம் நான் பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே மதுரையின் கோட்டையின் மிச்சத்தைப் பார்ப்பேன். என் மதுரைக் கோட்டை என்று என்னையறியாமல் பெருமிதம் கொள்வேன். நாவலைப் படித்து முடித்த அன்று அந்தக் கோட்டை மதிலைப் பார்த்த போது அந்த பெருமிதம் இல்லை. நாடு கடத்தப்பட்ட உடையணத் தேவனைக் கடைசியாகப் பார்ப்பதற்காக அந்தக் கோட்டை வாசலில் நின்று அவரது மனைவி மருதாத்தாள் கெஞ்சிக் கதறியதும், காவலன் அவளை விரட்டி விட்டு கோட்டைக் கதவை இழுத்து மூடியதும் தான் கண்முன் நின்றன. முதன் முறையாக என் மதுரைக் கோட்டை மதிலைப் பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.

பழைய வரலாற்றைச் சொல்வதன் வழியே, இன்றும் நாம் கைவிடக் கூடாத ஏகாதிபத்திய எதிர்ப்பை ரத்தமும், சதையுமாகச் சொல்லிய டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ. ப அவர்களின் கரம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.

Saturday, December 24, 2022

பேட்டரி ரீசார்ஜ் செய்ய இவ்வருடமும்

 


வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செய்ய இந்த வருடமும் வெண்மணி நோக்கி புறப்பட்டு விட்டோம்.

வெண்மணி தரும் உணர்வுகளை விவரிக்க எப்போதுமே எனக்கு வார்த்தைகள் கிடைத்ததில்லை.  தொடர்ந்து பணியாற்ற பேட்டரியை ரீசார்ஜ் செய்வதாகவே உணர்வேன்.

44 உயிர்கள் கொளுத்தப்பட்ட ராமையாவின் குடிசை இப்போது புனரமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காட்சியளிக்கிறது.

எங்கள் கோட்டத்திற்கு இந்த வருட வெண்மணி பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது என்னவென்று பயணம் முடிந்து எழுதுகிறேன்.  

 


இதிலென்னய்யா கஷ்டம்?

 


மாறு வேடப் போட்டியின் முதல் பரிசை தேர்ந்தெடுக்க சிரமமாக இருந்ததாம்.

என்னய்யா அபத்தமா பேசுறீங்க!

மோடியை விட சிறந்த நடிகன், வித விதமா வேஷம் கட்டற ஆளு இந்தியாவில வேறு யாராவது இருக்காங்களா என்ன!

சிரமமா இருந்துதாமே சிரமமா!

Friday, December 23, 2022

விஷ்ணுபுரத்தில் ஒரு விவாதம்.

 


ஆஜானின் குண்டர் படை தளபதி : அண்ணே இந்த வருஷம் சாகித்ய அகாடமி விருதை யாரோ ராஜேந்திரனுக்கு அறிவிச்சிருக்காங்க.

ஆஜான் : யாருப்பா அந்தாளு, நம்ம விஷ்ணுபுரம் க்ரூப்பு மாதிரி தெரியலையே!

ஆகுபத: இதுதான் இரண்டாவது நாவலாம்.

ஆஜான்: தப்பாச்சே, கம்யூனிஸ்ட் லாபியா இருக்கும்!

ஆகுபத: தெரியலைன்னே

ஆஜான்: சரி, நம்ம ஆசீர்வாதம் வாங்காத ஆளுக்கு விருது கிடைச்சப்போ தாக்கி எழுதினதை எடுத்து பட்டி, டிங்கரிங் பார்த்து தளத்துல போட்டுடலாம்.

ஆஜான் ரசிகர் மன்ற தலைவி: தலைவா, புக்கை வெளியிட்ட பதிப்பாளரைத்தான் இந்த வருஷம் விழாவுக்கு கூப்பிட்டிருந்தோம், இடதுசாரி எழுத்தாளர்கள் கூட என்னை மதிக்கறாங்கன்னு எழுதியிருந்தீங்களே, அவங்க!

ஆஜான்: என்னம்மா இப்படி சொல்ற! தர்ம சங்கடமா இருக்கே. இடதுசாரின்னு சொல்லிக்கற ஒத்தரை வளைச்சிப்போட்ட மாதிரி இவங்களையும் வளைச்சு போட்டாகனும். அப்ப தாக்கி எழுத முடியாதே!

ஆகுபத : விருது வாங்கறவரு ஐ.ஏ.எஸ் ஆபிஸராம்.

ஆஜான்: ஐய்யோ, அதிகாரிகளை பகைச்சுக்கவே கூடாது. சரி வாழ்த்து சொல்லியே எழுதிடலாம்.

பிகு: கற்பனை உரையாடல்தான். ஆனாலும் நடந்திருக்காது என்று உங்களால் சொல்ல முடியுமா?

பிகு 2 : விருது பெற்ற நாவலைப் பற்றி தீவிர வாசிப்பாளருமான முன்னணி எழுத்தாளர் ஐந்து ஆண்டுகள் முன்பே எழுதியது நாளை.

 

பிகு 3    : ஆஜானுக்கான ஒரு ஸ்பெஷல் பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது. திங்களன்று எதிர்பார்க்கலாம்.

 

 

ஆட்டுக்காரன் ரீல் அறுந்து போச்சு

 


ஆட்டுக்காரன் தினமும் கண்டெண்ட் தருகிறான்.

செவித்திறன் குறைந்தவர்களுக்கு 10,000 ரூபாய் மதிப்பில் இயந்திரம் தருவதாய் அறிவித்தான்.



அது வெறும் 345 ரூபாய் என்று அம்பலமாகி விட்டது.

அதனால் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பு இயந்திரமே தருவேன் என்று அறிவித்துள்ளான். 



அது கொடுக்கும் போதுதான் தெரியும். இப்படி பல வாக்குறுதி கொடுத்து கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் ஆட்டுக்காரன் வரலாறு.

ஆட்டுக்காரன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னும் கூட ஆட்டுக்காரனை அவதூறு செய்யாதீர் என பொங்கும் சங்கிகளை என்ன சொல்வீர்?



முட்டாள், முட்டாள், முட்டாள்.

Thursday, December 22, 2022

அயோக்கியர்களின் புகலிடம் – கொரோனா அச்சுறுத்தல்

 

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர், கொரோனா பரவலை தடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் பாரத் ஜோடா யாத்திரையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

 கொரோனா அச்சுறுத்தல் என்பது வெறும் வெட்டிச்சாக்கு. பாஜகவிற்கும் மோடிக்கும் ராகுல்காந்தியின் நடைப்பயணம் எரிச்சலையும் அச்சத்தையும் கொடுத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். அதை தடுத்து நிறுத்த அவர்கள் கையிலெடுத்துள்ள ஆயுதம் கொரோனா அச்சுறுத்தல். மோடியின் அற்ப புத்தியைத்தான் சுகாதாரத்துறை அமைச்சரின் கடிதம் வெளிப்படுத்துகிறது.

 தங்களுக்கு பிடிக்காத, எரிச்சலூட்டும் நிகழ்வை தடுத்து நிறுத்த இந்த கொரோனா அச்சுறுத்தல் என்ற கீழ்த்தர உத்தியை பயன்படுத்தியதை கண்ணுற்ற அனுபவம் எங்களுக்கும் உண்டு.

 அந்த அனுபவத்தை பொது வெளியில் பகிர்வதா, வேண்டாமா என்று நீண்ட நேரம் மனதுக்குள் ஒரு போராட்டம் நடத்திய பின்பே இதை எழுதுகிறேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கடிதம் அந்த சம்பவத்தை  நினைவு படுத்தி விட்டது.

 ஒரு வரலாற்று நிகழ்வுக்குப் பின் இருந்த சதி ஏற்படுத்திய எரிச்சலை இப்பதிவின் மூலமாக ஆற்றிக் கொள்ளலாம் என்ற முயற்சியே.

 மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் எங்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாட்டை எங்கள் வேலூர் கோட்டச்சங்கம் பொறுப்பேற்று 13.08.2022 முதல் 15.08.2022 வரை மிகச் சிறப்பாக நடத்தினோம். 26 வருடங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதால் எங்கள் தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு, அர்ப்பணிப்போடு செயலாற்றினார்கள், நிதியை வாரி வாரி வழங்கினார்கள். நாங்கள் நிர்ணயித்த தொகையைக் காட்டிலும் அதிகமாக கொடுத்தவர்கள் ஏராளம்.

 ஒரு புறம் மாநாட்டுப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது, தோழர்களின் உற்சாகத்தை, மாநாட்டுப் பணிகள் வெற்றிகரமாக நடப்பதை பொறுக்க இயலா சில தீய சக்திகள் அரசின் அதிகார மையங்கள், ஊடகங்கள் ஆகியோருக்கு மொட்டைக் கடிதங்களையும் போலி பெயர்களில் மின்னஞ்சல்களையும் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

 மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள், அஞ்சல் ஊழியர் அணுகுகிறார், நீங்கள் அனுப்பிய சில கடிதங்களில் ஸ்டாம்ப் ஒட்ட தவறி விட்டதால் திரும்பி விட்டது, ட்யூ கட்ட வேண்டும் என்று சொல்கிறார். ஏதோ வில்லங்கம் இருப்பது போல உணர்ந்ததால் பணத்தை கொடுத்து வாங்கிக் கொண்டோம்.

 இரண்டு நாளிதழ்களுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் அனுப்பப்பட்ட கடிதங்கள். சாதாரண கவரில் அனுப்புனர் முகவரி “எல்.ஐ.சி ஊழியர் சங்கம்” என்று கையால் எழுதப்பட்டு இருந்ததால்தான் அஞ்சல் ஊழியர் எங்களிடம் வந்திருந்தார்.

 அந்த கடிதம் வெவ்வேறு ஆட்களால் எழுதப்பட்ட தோற்றத்தில் இருந்தாலும் ஒரே மாதிரி தட்டச்சு செய்யப்பட்ட கடிதம்தான்.

  “கொரோனா காலத்தில் மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது. கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பரவுவதால் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருவதால் தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் பரவி  தமிழ்நாட்டில் பெரும் உயிரிழப்பு நடக்கும். டெல்லியில் இஸ்லாமியர் மாநாடு உருவாக்கிய விளைவுகள் போல தமிழ்நாட்டில் இம்மாநாட்டின் மூலம் நிகழும்”

 இதுதான் அக்கடிதத்தின் சாராம்சம். எங்கள் கைகளுக்கு அக்கடிதங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்காததால் மண்டையை மறைத்தாலும் மண்டைக்கு வெளியே இருந்த கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள்.

 பாவம் அவர்கள் வேறு யாருக்கெல்லாம் கடிதம் அனுப்பினார்களோ, அவர்கள் எல்லாம் அதனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள் போல.

 “இன்று போய் நாளை வா” திரைப்படத்தில் ராதிகாவை காரில் வைத்து துபாய்க்கு கடத்திப் போக காமெடி வில்லன் கூட்டம் திட்டம் போடும். புறப்பட்ட கொஞ்ச நேரத்துலயே பெட்ரோல்  இல்லாமல் கார் நின்று போகும். ஏண்டா  பெட்ரோல் போடலியா என்று மெயின் வில்லன் அடியாளை கேட்க துபாயில பரோட்டா கிடைக்குமான்னு தெரியாததால் அந்த காசுல பரோட்டா தின்னுட்டோம் என்பார். அது போல ஸ்டாம்ப் வாங்கி கவரை அனுப்ப பணிக்கப்பட்டவர் அந்த காசை எதற்கு பயன்படுத்தினாரோ, சதியின் ஆதாரம் எங்களிடம் சிக்கியது.

 “எவ்வளவோ பாத்தாச்சு, இதையும் பார்ப்போம்” என்று அதை அலட்சியப் படுத்தி விட்டு மாநாட்டை நடத்தினோம். பங்கேற்ற அனைவராலும் பாராட்டப் பட்ட மாநாடு என்ற மன நிறைவைப் பெற்றோம். வேலூர் கோட்டத்தின் ஒவ்வொரு தோழரின் பெருமிதமாக தென் மண்டல மாநாடு அமைந்தது. 















































 இப்பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் மாநாட்டின் பிரம்மாணடத்தைச் சொல்லும்.

 தீய சக்திகளின் வயிறு பொசுங்கியது.  தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக அவதூறுகளோடு அடுத்த மொட்டைக் கடிதாசி பறந்தது. இம்முறை அவர்கள் ஸ்டாம்ப் ஒட்டியிருந்தார்கள். ஆனாலும் யாருக்கெல்லாம் அனுப்பியிருந்தார்களோ, அவர்களே அதை எங்களுக்கு கொடுத்து விட்டார்கள்.

 கொரோனா அச்சுறுத்தல் என்று அற்பத்தனமாக செயல்படும் ஒன்றிய அரசும் அசிங்கப்படப் போகிறது.