Monday, February 28, 2022

சார் லட்டூடூ

 


போன வாரம் வியாழனறு அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. அலுவலகம் செல்லும் வழியில் ஒரு இடத்தில் ஏ1 பிறந்த நாளை கொண்டாடிய அதிமுகவினர், சாலையில் சென்ற கார், லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டி என  அனைத்து வாகனங்களையும்,   நிறுத்தி லட்டு கொடுக்க, போக்குவரத்து நெரிசல் வந்து விட்டது. (அந்த லட்டை நான் வாங்கவில்லை என்பது வேறு விஷயம்.)  இவர்கள் தலைவியின் பிறந்த நாளை கொண்டாட வாகனங்களை நிறுத்துவதும் போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதும் என்ன நியாயம்?

 பிகு: அந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்பார்களே, அது போல அந்த எரிச்சல் நேரத்திலும் கூட “அரங்கேற்ற வேளை” படத்தில் வரும் “சார் லட்டூடூ” என்ற காட்சி நினைவுக்கு வந்து விட்டது. அதனால் அக்காட்சி இந்த பதிவிலும்.

 பிகு: அன்றே எழுதி ட்ராப்டில் இருந்ததுதான். உக்ரைன் பிரச்சினை காரணமாக பதிவிடத்தான் தாமதமாகி விட்டது.

 

ரங்கசாமியையும் நக்கலடிப்பீர்களா மூடச்சங்கிகளா?

 


மோடி தரகு வேலை பார்க்கும் விமான நிறுவனங்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கான கட்டணத்தை மும்மடங்கு உயர்த்தியுள்ள நிலையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக பயணச் செலவை மாநில அரசு ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

முட்டாள் சங்கிகளுக்கு அது பொறுக்கவில்லை. அது எப்படி முடியும்! மீட்பு நடவடிக்கை ராணுவம்தானே செய்ய முடியும்! இவரால் எப்படி முடியும்! காமன் சென்ஸ் வேண்டாமா என்றெல்லாம் பிதற்றினார்கள். ஸ்டாலின் சொன்னது பயணச் செலவைப் பற்றி மட்டும்தான். அதைப் பற்றிக் கூட சிந்திக்காமல் ஐ.டி விங் கொடுத்த செய்தியை பரப்பி தாங்கள் எப்போதும் முட்டாள்கள் என்று நிரூபித்துக் கொண்டார்கள்.

உத்தர்கண்ட் வெள்ளத்தின் போது 60,000 குஜராத்திகளை 20 இன்னோவா கார்களில் மோடியே நேரடியாக மீட்டார் என்று நம்பி பரப்பிய முட்டாள் ஜென்மங்களும் இவர்கள்தான் என்பது வேறு விஷயம்.

இதோ இப்போது

புதுச்சேரி மாணவர்களின் பயணச் செலவை புதுவை அரசு ஏற்கும் என்று புதுவை முதல்வர் திரு என்.ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவை அரசு பாஜகவின் கூட்டணி அரசு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நக்கல் அடித்த மூடச்சங்கிகள், ரங்கசாமியையும் அதே போல் நக்கலடிப்பார்களா?

ஆம். 

ஏனென்றால் எடப்பாடிக்குப் பிறகு சிக்கிய அடிமையல்லவா அவர் !!!!

Sunday, February 27, 2022

மூடச்சங்கிகள் எச்சரிக்கையாய் இருக்கட்டும்

 


Zee தமிழ் நிகழ்ச்சியில் தந்தை பெரியார் பற்றிய நிகழ்வை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அண்ணாமலையும் முருகனும் மிரட்டியும் கூட போங்கடா புண்ணாக்குகளா என்று சொன்ன நிகழ்ச்சி அது.

அந்த நிகழ்வில் பெரியாராக நடித்த குழந்தையை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று ஒரு சங்கி ஜந்து கொக்கரித்த போது  அனைத்து குழந்தைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட போது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த ஜந்துவை ஒன்றும் செய்யவில்லையே என்று தோன்றியது.



அவனை கைது செய்து உள்ளே தள்ளிய பின்புதான் மனம் நிறைவானது.



இந்த சம்பவம் மூடச்சங்கிகளுக்கு ஒரு எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் மத வெறியை தூண்டி விடக் கூடிய விதத்தில் பொய்ப் பிரச்சாரம் செய்து வன்மத்தை வெளிப்படுத்தினால் நீங்களும் உள்ளே போக வேண்டும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.

அண்ணாமலை, மாரிதாஸ் போன்ற ஒரு சில சங்கிகள் வேண்டுமானால் மதுரையில் நிழல் பெறலாம். அது மற்ற உதிரி சங்கிகளுக்கெல்லாம் பொருந்தாது. 

பல எழுத்து வியாபாரிகளின் பொய்களை நம்பி அந்த வக்கிரத்தை பகிர்ந்து கொள்ளும் மூடசங்கிகளே, உங்களை உசுப்பேத்தி விடுபவன் தப்பித்துக் கொள்வான். நீங்கள்தான் களி திங்க வேண்டியிருக்கும். 

ஒழுங்காக உங்கள் வேலையைப் பார்த்து பிள்ளை குட்டிகளை படிக்க வைங்க, 

முதலாளிகளுக்கு மோடியின் சிக்னல்

 


"இந்திய மாணவர்கள் ஏன் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்க வேண்டும்? நம் தனியார் துறை இதனை கையிலெடுக்க வேண்டும்"

இது நேற்று மோடி உதிர்த்த முத்து.

இது முட்டாள்தனமான கருத்து என்பதை நேற்றைய

 அவர்களுக்கு தவிப்பு புரியாது என்ற பதிவில் வரும்

உக்ரைன், ரஷ்யா என்று பல நாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் எல்லா மாநிலத்திலிருந்தும்தான் செல்கிறார்கள். அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒன்றும் செல்லவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியாமல்தான் செல்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கோட்டாவிற்கான கோடிக்கணக்கான கட்டணத்தை கட்ட முடியாமல் குறைந்த கட்டணத்தில் படிக்க கடன் வாங்கிச் செல்பவர்கள்தான்.

வரிகளைப் படித்தவர்களுக்குப் புரியும்.

ஆனால் மோடியின் முன்னெடுப்பு முட்டாள்தனமில்லை.

"நீங்கள் எவ்வளவு மருத்துவக் கல்லூரிகளை வேண்டுமானால் திறந்து கொள்ளுங்கள். கேதன் தேசாய், அன்புமணி போன்றவர்கள்தான் எங்கள் ஆட்சியில் உள்ளார்கள். அதனால் கோடிக்கணக்கில் பணம் பார்க்கலாம். தேர்தல் பத்திரம் மூலம் எங்களையும் கவனித்து விடுங்கள்" 

என்பதுதான் மோடி முதலாளிகளுக்கு கொடுத்துள்ள சிக்னல்.

ஆம். மோடி அவராகத்தான் மனதில் உள்ள உண்மையைச் சொல்லி மாட்டிக்கொண்டார்.

Saturday, February 26, 2022

புஷ்பா பட "ஸ்ரீவள்ளி" பாடல்

 


புஷ்பா படத்தின் "ஸ்ரீவள்ளி" பாடல், வயலினில் என் மகனின் கைவண்ணத்தில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது

அவர்களுக்கு தவிப்பு புரியாது.

 


உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கிற வேலையை மட்டும் மோடி செய்தால் போதும் என்று எழுதியதற்கு

"உக்ரைன் வரை போய் படிக்கும் அளவிற்கு வசதி உள்ளவனால் விமானக் கட்டணம் செலுத்த முடியாதா?"

என்று ஒரு கேள்வி வந்தது.

இந்த கேள்வியை இப்போது சங்கிகள் பரவலாக கேட்கத் தொடங்கி விட்டார்கள். அதிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் பயணச்செலவை மாநில அரசு ஏற்கும் என்று முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்பு எரிச்சல் அதிகமாகி விட்டது. 

நீட் எழுதாமல் கோடிக்கணக்கில் செலவு செய்பவனுக்கு எதற்கு தண்டச் செலவு செய்ய  வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் போன்ற வெறியன் வெளிப்படையாகவே பேசுகிறான்.

மேலோட்டமாக பார்த்தால் நியாயமாகவே தோன்றும்.  ஒரு சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.

மதுரையில் கல்லூரியில் படித்த காலம். விடுதியில் இருந்த நேரம். மாதத்தின் கடைசி வாரம். மெஸ் கட்டணத்தோடு செலவுக்கான பணம் (கொஞ்சமாகத்தான்)  மாதத்தின் முதல் வாரம் வரும். மாதக் கடைசியில் சொற்பமாகத்தான் கையிருப்பு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடக்கிறது. மாநிலம் முழுதும் போராட்டம் பரவியதும் அரசு அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடியது. விடுதிகளை விட்டு மாணவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மதிய உணவு தயார் செய்திருந்ததால் அதை சாப்பிட்டு விட்டு செல்ல பெருந்தன்மையோடு கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது. 

அப்போது என் கையில் பேருந்து கட்டணத்துக்கு மேலாக ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது. யாரிடமும் கேட்க கூச்சம். என் அக்காவின் மாமியார் வீடு மதுரையில் இருந்தது. அவர்களிடம் சென்று பணம் கேட்டிருக்கலாம். ஆனால் இப்படி கல்லூரி மாணவர்கள் பொறுப்பில்லாமல் போராடலாமா என்று என் அக்கா மாமனார் கொஞ்சம் வகுப்பெடுப்பார். ஊருக்கு போனதும் இதே வகுப்பு உக்கிரமாக நடக்கும். அதற்கு முன்பாக இன்னொரு வகுப்பு வேண்டாமென்று புறப்பட்டு விட்டேன்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அனைத்து கல்லூரி மாணவர்களால் நிரம்பி வழிந்தது. பேருந்துகளில் செம கூட்டம். ஒரு மணி நேரம் கழித்தே நின்று செல்ல இடம் கிடைத்தது. இடைப்பட்ட நேரத்தில் தேநீருக்கு ஒரு ஐம்பது காசு செலவழிந்து விட்டது.

திருச்சியிலும் இதே நிலைதான். ஒரு ஏழரை மணி அளவில் வந்திருப்பேன். இரண்டு இட்லியும் ஒரு தோசையும் சாப்பிட்டதில் ஒன்றரை ரூபாய் செலவு.  மீண்டும் திருச்சியிலிருந்து நெய்வேலி வரை நின்ற கோலத்தில் பயணம். திருவள்ளுவர் பேருந்து என்பதால் கூடுதல் கட்டணம் இரண்டு ரூபாய். ஆக கையில் இருந்தது ஒரு ரூபாய்தான். விருத்தாச்சலத்தில்தான் உட்கார இடம் கிடைத்தது.

மதியத்திலிருந்து நின்று கொண்டே வந்ததில் ஏற்பட்ட களைப்பு, ஜன்னல் சீட்டில் வந்து மோதிய குளிர் காற்று இரண்டுமே தூக்கம் என் கண்களை தழுவச்செய்து விட்டது. 

அதன் விளைவு???

நான் இறங்க வேண்டிய மந்தாரக்குப்பம் நிறுத்தத்தை தவறவிட்டு விட்டேன். மத்தியப் பேருந்து நிலையத்தில் நடத்துனர்தான் எழுப்பி விட்டார். 

மந்தாரக்குப்பத்திற்கு செல்ல என்.எல்.சி  டவுன் பஸ் எப்போது என்று கேட்டால் அமராவதி தியேட்டர் செகண்ட் ஷோ முடிந்து பனிரெண்டு மணிக்கு மேல்தான்  என்று சொல்கிறார்கள். ஆட்டோக்காரர்கள் நாங்கள் கொண்டு விடுகிறோம் என்று சொலிகிறார்கள். அவர்கள் கேட்ட பத்து ரூபாய் என்னிடம் இல்லை என்கிறேன். வீட்டுக்கு போய் வாங்கிக் கொடு என்று சொல்கிறார்கள். பொறுப்பில்லாமல் தூங்கி விட்டு ஆட்டோவில் வந்தாயா என்று நள்ளிரவில் திட்டு வாங்க தயாராக இல்லை. 

பனிரெண்டு மணிக்கு மேல் டவுன் பஸ்ஸில் இருபத்தி ஐந்து பைசா கட்டணத்தில் சென்று எழுபத்தி ஐந்து பைசா கையிருப்போடு வீட்டுக்குப் போன சொந்தக்கதை, சோகக்கதை இது.

எதிர்பாராத பயணத்தால் ஒரே மாநிலத்தில் பட்ட அவதி இது.

படிக்கச் சென்ற உக்ரைன் மாணவர்களால் திடிரென விமானச் செலவுக்கான கட்டணத்தை எப்படி திரட்ட முடியும் என்று சிந்தித்தால் இந்த கேள்வி வராது.

உக்ரைன், ரஷ்யா என்று பல நாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் எல்லா மாநிலத்திலிருந்தும்தான் செல்கிறார்கள். அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒன்றும் செல்லவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியாமல்தான் செல்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கோட்டாவிற்கான கோடிக்கணக்கான கட்டணத்தை கட்ட முடியாமல் குறைந்த கட்டணத்தில் படிக்க கடன் வாங்கிச் செல்பவர்கள்தான்.

இந்தியாவிற்கான அரசு விமான நிறுவனம் இல்லாத நிலைமையில் தனியார் விமானக் கம்பெனிகள் சூழலைப் பயன்படுத்தி மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதால் அவர்கள் கதி அதோகதியாக மாறி விட்டது.

இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.

அரசு நிறுவனமாக ஏர் இந்தியா இருந்திருந்தால் மூன்று மடங்கு கட்டணக் கொள்ளை நடக்காது. அதனால் அந்த கட்டணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது ஏர் இந்தியாவை விற்றுத் தின்ற அரசின் கடமைதான்.

எல்லாமும் இலவசமாக இருக்க முடியாது என்பதெல்லாம் விளக்கெண்ணெய் உபதேசம். முதலாளிகளுக்கு கொடுக்கும் வரிச்சலுகை, தள்ளுபடி உள்ளிட்ட எல்லா எழவுகளும் கூட இலவசம்தான். சொற்றொடர் வேறு.

உக்ரைனில் தவிப்பவர்கள் நம்மவர்கள் என்ற உணர்வுள்ளவர்கள் இப்போது செலவுக்கணக்கு பார்க்க மாட்டார்கள். நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொகுசாக இருப்பவர்கள்தான் பொருளாதார மேதைகளாக வியாக்யானம் செய்து கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு மாணவர்களின் தவிப்பு புரியாது. அவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்ளும் வாய்ப்பை காலம் நமக்கு கொடுத்துள்ளது.

என்ன இவர்கள்தான் தங்களை தேச பக்தர்கள் என்று பீற்றிக் கொள்வார்கள்.


Friday, February 25, 2022

நிறுத்தனும் . எல்லாரும் நிறுத்தனும் .

 


ரஷ்யா போரை நிறுத்தனும்.. அவங்களும் . . .

 ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து விட்டது. நீண்ட நாளாக புகைந்து கொண்டிருந்த விஷயம் இப்போது நிஜமாகி விட்டது.

 போருக்கான காரணங்களும் நியாயங்களும் ஆயிரம் இருந்தாலும் பாதிக்கப் படுபவர்கள் என்னமோ அந்த காரணங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள்தான். அதனால் போர் நிறுத்தப்பட வேண்டும். ஐ.நா சபை தலையிட வேண்டும்.  மற்ற நாடுகளுக்கு இனே வேலை இல்லை. ஏனென்றால் அவைகள் எல்லாமே அப்பத்தை பகிர்ந்து அளிக்கும் குரங்குகளைப் போன்றவையே. (மோடிக்காக இதை நான் எழுதவில்லை. மோடி ஒரு டம்மி, வேஸ்ட் பீஸ்.)

 சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார் என்று பொய் சொல்லி இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது நியாயமென்றால் அதே நியாயம் நேடோ ராணுவ தளம் உக்ரைனில் அமைவது எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுவதும் நியாயம்தானே!

 முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் நேடோ கூட்டணியில் இணையக் கூடாது என்ற ஒப்பந்தத்தை மீறுவதுதானே இந்த பதற்றத்திற்கு முக்கியக் காரணம்!

 ஆக இப்போதைய போருக்கு முக்கியமான காரணம் உக்ரைனும் உக்ரைனை உசுப்பேத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் இதர நேடோ நாடுகள்தான்.

 ஆனாலும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும்.

 ஏனென்றால் இந்த போரில் உக்ரைன் தலைவர்களோ அல்லது இதர நேடோ நாடுகளின் தலைவர்களோ கொஞ்சம் கூட பாதிக்கப்பட மாட்டார்கள். உக்ரைன் தலைவர்கள் பதுங்கு குழிகளிலோ அல்லது குண்டு துளைக்காத வசதியான், உறுதியான மாளிகைகளிலோ பாதுகாப்பாக இருப்பார்கள். இறப்பதும், காயப்படுவதும், வாழ்வாதாரத்தை இழப்பதும் சாதாரண மக்களே. அவர்களுக்காக போர் நிறுத்தப்பட வேண்டும்.

 அதே நேரம் ரஷ்யாவை ஏதோ பழைய சோவியத் சோஷலிச நாடு என்று நினைத்து அதனை அழிக்க அல்லது அதனை மடக்க உக்ரைனை பயன்படுத்தும் அற்பத்தனத்தை அமெரிக்காவும் இதர நேடோ நாடுகளும் நிறுத்த வேண்டும். அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அருகாமை நாட்டை  வெறுப்பேற்றுவதை உக்ரைனும் நிறுத்த வேண்டும்.

 இதோடு இன்னும் சில விஷயங்களையும் பேசிட வேண்டும்.

 நேற்று முக நூலில் பார்த்தது இது.

 


"ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு அழைப்பேதும் இல்லாமல்  டாங்கிகளை, வீரர்களை அனுப்பினால் அதன் பெயர் என்ற கேள்விக்கு பதில் மிகவும் நச்சென்று இருந்தது.

 இதற்கு பதில் சொல்வது மிகவும் எளிது. எந்த நாடு என்பதைப் பொருத்தது. ரஷ்யாவாக இருந்தால் உக்ரைன், ஜியார்ஜியா நாடுகள் மீது அது நடத்தியது படையெடுப்பு, போர்."

 அதுவே அமெரிக்காவாக இருந்தால் அது இராக், சிரியா, லிபியா, பனாமா, க்யூபா, வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் மீது நடத்தியது விடுதலைக்கான வேள்வி.  

 இன்று மனித உரிமைகளுக்காகவும் உக்ரைனின் இறையாண்மைக்காகவும் குரல் கொடுக்கும் எத்தனை மகான்கள், அமெரிக்கா இராக், லிபியா, வியட்னாம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்த போது அமெரிக்காவிற்கு எதிராக வாய் திறந்தார்கள்?

 கியூபா, வெனிசுலா, பனாமா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகளின் சோஷலிச அரசுகளைக் கவிழ்க்க உள் நாட்டுக் கலவரங்களை தூண்டி ஆயுதங்களும் பணமும் அளித்த போது இவர்கள் எல்லாம் எந்த பங்கரில் பதுங்கி இருந்தார்கள்?

 பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸா திட்டின் மீது இஸ்ரேல் அன்றாடம் தாக்குதல் நடத்தி பாலஸ்தீன மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்களே, எப்போதாவது சிறிய முணுமுணுப்பாவது செய்துள்ளார்களா?

 இது நாள் வரை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டிக்க துணிவில்லாத எந்த கையாலாகாதவர்களுக்கும் இன்று ரஷ்யாவுக்கு உபதேசிக்க அருகதை கிடையாது.

 ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். போருக்கான சூழலை உருவாக்கியவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

 

அந்த ஆணியெல்லாம் வேண்டாம் மோடி

 


ரஷ்யா - உக்ரைன் போரால் பதற்றம் நிலவும் சூழலில் ஒரே ஒரு கூட்டம் மட்டும் உற்சாகமடைந்துள்ளது. (போர் பற்றி விரிவாக மாலையில் எழுத வேண்டும்)

இன்னமும் 56 இஞ்ச் மார்பன், வல்லவன், நல்லவன், திறமையானவன், உலகத் தலைவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் முட்டாள் சங்கிகள் கூட்டம்தான் அது.

மோடி தலையிட்டு போரை நிறுத்திடுவார் என்று அந்த கூட்டம் நிஜமாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. 

அந்த கூட்டத்திடமும் மோடியிடமும் நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான்.

இந்த சமாதான தூதுவர் ஆணியெல்லாம் அவசியமில்லை. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் 25,000 பேரை பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டு வந்தால் போதுமானது. 

தனக்கு மட்டும் ஒரு விமானத்தை அரசு நிதியில் வாங்கிக்கொண்டு அரசின் விமானநிறுவனத்தை விற்றுத்தின்ற ஊதாரியால் உக்ரைனில் தவிக்குது நம் பிள்ளைகள்.

என்ற தோழர் ஆதவன் தீட்சண்யாவின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சரியானது. அதனால் ரத்தன் டாடாவின் காலில் விழுந்தாவது மாணவர்கள் திரும்ப வருவதை உத்தரவாதம் செய்யவும். அப்படி கட்டணம் செலுத்த அரசிடம் பணமோ, மனமோ இல்லையென்றால் சொல்லவும். ஒன்றிய அரசுக்கு நாங்கள் பிச்சையெடுத்தாவது பணம் தருகிறோம். 



Thursday, February 24, 2022

மோடிக்கு தெரிந்ததெல்லாம் . . .

 


மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி மோடிக்கு எவையெல்லாம் தெரியாது என்று ஒரு நீண்ட பட்டியலை அளித்ததை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

 அவரது பதிவை படிக்க இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்

 மோடிக்கு தெரிந்ததெல்லாம் என்னவென்று ஒரு பட்டியலை அளிக்க நான் முயற்சி செய்துள்ளேன். (இதை எழுதி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலான போதிலும் தொடர்ந்து கிடைத்து வந்த செய்திகள், இதனை பகிர்ந்து கொள்ள தாமதிக்கும் சூழலை உருவாக்கி விட்டது.)


 

கனவுக் காட்சிகளில் கதாநாயகர்கள் அணிவது போல விதம் விதமாக பல்வேறு வண்ணங்களில் பல கெட்டப்புகளில் ஆடை அணிய மோடிக்கு தெரியும்.

 

போட்டோவிற்கு போஸ் அளிக்க நன்றாக தெரியும். போட்டோ நன்றாக வர மயில், வாத்து, நாய் மற்றும் தன்னுடைய அம்மா போன்ற செட் ப்ராப்பர்டிகளை நன்கு பயன்படுத்த மோடிக்கு தெரியும்.

 

சொகுசு விமானத்தில் நாடு நாடாக பயணிக்க மோடிக்கு தெரியும்.

 

தேசத்தின் சொத்துக்களை எல்லாம் தன் எஜமானர்கள் அம்பானி, அதானிக்கு மடை மாற்றி விட தரகு வேலை பார்க்க மோடிக்கு தெரியும்.

 

நாடாளுமன்ற கட்டிடத்தின் படிக்கட்டுக்களை வணங்கிக் கொண்டே நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற மரபுகளையும் சீரழிக்க மோடிக்குத்தான் தெரியும்.

 

தேர்தல் வரும் நேரத்தில் மத உணர்வுகளை உசுப்பி விடவும் ராணுவ வீரர்களை பலி கொடுத்து போலி தேச பக்தியை உசுப்பி விடவுமான கீழ்த்தர உத்திகள் மோடிக்கு நன்றாகவே தெரியும்.

 

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, தன் செல்வாக்கு சரியும் நேரத்தில் எல்லாம் தன் உயிருக்கு ஆபத்து என்றொரு கட்டுக்கதையை பரப்பவும் மோடிக்கு மிக நன்றாகத் தெரியும்.

 

மொத்தத்தில் மோடிக்கு தெரிந்தது எல்லாமே இந்த நாட்டிற்கு கொஞ்சமும் தேவை இல்லாத ஆணிகள்தான்.

 

ஏழு தடவை பேசியும் ????????


 *நாளொரு கேள்வி: 23.02.2022*


தொடர் எண் : *633*

இன்று நம்மோடு டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் சோசியல் சயின்சாஸ் *பேரா இராமகுமார்*
########################

*ஏழு முறை பேசிய பட்ஜெட் எதுவும் செய்யவில்லை*

கேள்வி: பட்ஜெட் 2022 விவசாயம் பற்றி என்ன பேசி இருக்கிறது? 

*பேரா இராமகுமார்*

ஒன்றிய அரசின் பட்ஜெட் உரையில் "விவசாயம்" என்ற வார்த்தை *ஏழு முறை* பேசப்பட்டுள்ளது. அதில் ஒன்று, பகுதிக்கான  தலைப்பு (Section Heading). இன்னொன்று இணைப்பு அட்டவணை (Annexure) ஒன்றிற்கான தலைப்பு. ஆக இந்த *இரண்டையும் கழித்து விட்டால்* ஐந்து முறை விவசாயம் பற்றி பேசி இருக்கிறது. 

ஐந்தில் ஒன்று *கஸ்டம்ஸ் வரிகள்* பற்றி பேசப்பட்டுள்ள இடம். இரண்டாவது *நபார்டு வங்கி* பற்றி பேசுகிற இடம். மூன்றாவது *வைக்கோல் எரிப்பு* பற்றி வருகிற இடம். 

மீதம் இரண்டு முறைகளும் *இயற்கை விவசாயம்* பற்றி பேசியுள்ள இடங்களில்தான். இதுதான் விவசாயம் பற்றி இந்த பட்ஜெட் காட்டியுள்ள அக்கறை. 

அரசு இயற்கை விவசாயம் பற்றி அக்கறை காண்பிக்க  காரணம் *உர மானியத்தை வெட்டுவதுதான்.* அரசு உர மானியம் கொடுக்க விரும்பாததால் உரமே போடாதீர்கள் என்று விவசாயிகளைப் பார்த்து சொல்கிறது. இதனால் 20 முதல் 30 சதவீதம் வரை விளைச்சல் குறையும். *இலங்கையில்* திடீர் என எல்லா இரசாயன உரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் இலங்கை விவசாயம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆகவே விவசாய விஞ்ஞானிகள் இந்த முடிவை ஏற்க மாட்டார்கள். 

ஆகவே பட்ஜெட் விவசாயிகளுக்கு குறிப்பிடத் தக்க வகையில் ஏதும் செய்யவில்லை. 

*செவ்வானம்*

Wednesday, February 23, 2022

முன்பு அதிமுக கழுதையா?

 


அதிமுக கட்டெறும்பானது என்று தலைப்பு கொடுத்துள்ளது தினமலர்.

 


“கழுதை தேய்ந்து கட்டெறும்பானது” என்பதுதான் சொலவடை.  இப்போது அதிமுக கட்டெறும்பாகி விட்டதென்று என்று சொன்னால் அக்கட்சி இதற்கு முன்பு  கழுதையாக இருந்தது என்றுதானே அர்த்தம்!

 இதுவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அப்போது இவர்கள் மொழியே வேறு மாதிரி இருந்திருக்கும்!

 

Tuesday, February 22, 2022

உள்ளாட்சித் தேர்தல்கள் – நிறைவும் நெருடலும்

 


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும் சிறப்பான வெற்றியை திமுக கூட்டணி பெற்றுள்ளது மகிழ்வைத் தருகிறது.

 கூட்டணியிலும் உடன்பாடு எட்டப்படாத சில மாவட்டங்களில் தனித்தும் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள வெற்றி மகிழ்ச்சியோடு மன நிறைவையும் அளிக்கிறது. சென்னை மாநகராட்சியில் எல்லாம் இம்முறை நிறைய தோழர்கள் மாமன்றத்துக்கு செல்கிறார்கள்.

 கோட்சேவின் புகழ் பாடும் காந்தி கொலையை போற்றும் ஒரு நிஜமான தேச விரோதப் பெண்மணி சென்னையில் வெற்றி பெற்றது மிகவும் நெருடலாக உள்ளது. இப்படிப்பட்ட மோசமானவர்களை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு மாம்பலம் மக்களின் தரம் கீழிறங்கி உள்ளது.

 எச்சரிக்கை அதிகமாக வேண்டிய தருணம் இது.

 சரி, சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்ப்போம்.

 வாக்காளப் பெருமக்கள், பல ஊர்களில்  பல வார்டுகளில் 1,2,5,10 என்ற அளவில் பாஜகவிற்கு  வாக்கு அளித்துள்ளனர். ஒற்றை ஓட்டு பாஜக என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டு விட்டது.

 எடப்பாடி, ஓ.பி.எஸ், வானதி ஆகியோரின் சொந்த வார்டுகள் அவர்களின் கட்சி வேட்பாளர்கள் பரிதாபமாக தோற்றுள்ளனர். அநேகமாக ரோஷமுள்ள வானதி அம்மையார் இந்நேரம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பார்.



 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான கொங்கு நாடு (அண்ணன் மாலன் மொழியில் கொங்ககம்) கோரிக்கைக்கு இத்தேர்தல் முடிவுரை எழுதி விட்டது.

 பாஜக முகவர் ஒரு இஸ்லாமியப் பெண்ணை ஹிஜாபை அகற்றச் சொல்லி பிரச்சினை செய்து பின்பு அவரே  வெளியேற்றப் பட்ட வார்டில் அந்த முகவரின் அம்மாவும் பாஜக வேட்பாளருமான பெண்மணிக்கு கிடைத்தது ஜஸ்ட் பத்து வாக்குகளே!

 அதே நேரம் வேறு ஒரு ஊரில் வேறு ஒரு வார்டில் வெற்றி பெற்ற ஒரு பாஜக வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழை அளித்தது ஹிஜாப் அணிந்த ஒரு அதிகாரி.



 ஒரு வோட்டு கூட பெறாத வேட்பாளர் என்ற பெருமை சிவகங்கையில் மக்கள் நீதி மைய வேட்பாளருக்கு கிட்டியுள்ளது.

 வேலூர் மாநகராட்சியில் முதல் முறையாக ஒரு திருநங்கை வெற்றி பெற்றுள்ளார் என்பது ஒரு நல்ல விஷயம்.

 

மோடியின் இன்றைய வேடம்

 


போன வாரம் புடவை + நாமம்

இந்த வாரம் விபூதிப் பட்டை + ருத்ராக்சக் கொட்டை

அகோரிகள் கூட்டத்திற்கு போனால் மோடி என்ன உடை அணிவார் 

😜😜😜😜😜

கிழிந்து தொங்குகிற இரண்டு முகமூடிகள்

 



 

*நாளொரு கேள்வி: 21.02.2022*

 

தொடர் எண்: *630*

 

இன்று நம்மோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் *கே.கனகராஜ்*

########################

 

*கிழிந்து தொங்குகிற இரண்டு முகமூடிகள்*

 

கேள்வி: உலகமயம் வேலைகளை உருவாக்கும் என்று சொல்லப்பட்டது. அதை தீவிரமாக பின்பற்றும் மோடி காலத்து வேலை உருவாக்கம், வாக்குறுதிகள் நிலைமை என்ன

 

*கே.கனகராஜ்:*

 

2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி என்கிற புதிய முதலாளிகளின் பிரதிநிதியை ஆளும் வர்க்கம் முன்னிறுத்தியது. அவர்  மிகப் பிரம்மாண்டமான வாக்குறுதிகளை முன்வைத்தார். *ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை* என்பதை அவர் சொன்னது மட்டுமின்றி முதலாளித்துவ ஊடகங்கள் அவர் கையில் அதற்கான *மந்திரகோல்* இருப்பது போன்று ஊதிப் பெரிதாக்கின. இடதுசாரிகள் அப்போது உலகம் முழுவதும் இருந்த அனுபவத்தை கணக்கில் கொண்டு *தாராளமயம் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியையே* உருவாக்கும். இதனால் ஏற்கனவே உள்ள  வேலைவாய்ப்புகளும் நீடித்து நிற்க முடியாது என்று உறுதிபட கூறினர். இதற்காக அவர்கள் எள்ளி நகையாடப்பட்டார்கள்.

 

இப்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் தலைவராக உள்ள *பிபேக் தேப்ராய்* வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியாகத்தானே இருக்கிறதுஎன்று கேள்வி எழுப்பினால் வளர்ச்சியற்ற வேலைவாய்ப்புகள் உருவாகுமா? என்று *எதிர்க்கேள்வி* கேட்கிறார். ஆண்டுக்கு 2 கோடிபேருக்கு வேலை என்று சொன்னவர்கள் தற்போது அடுத்த *ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை* உருவாக்குவதற்கான முறையில்தான் திட்டங்கள் அமைந்திருப்பதாக இந்த பட்ஜெட்டில் கூறுகிறார்கள்.

 

சமீபத்தில் வடக்கு ரயில்வேயில் 35 ஆயிரம் பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஆரம்பத்தில் மோடி *ஸ்வட்ச் பாரத், ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா* ஆகியவற்றின் மூலம் மிகப் பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் தற்போது தான் வேலையின்மை விகிதம் உச்சத்தில் இருக்கிறது. *2011-12ல் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக வேலையின்மை* உயர்ந்துள்ளது. 2021 டிசம்பர் கணக்கு படி *சுமார் 5.25 கோடி பேர் வேலையில்லாத இளைஞர்கள் இந்தியாவில்* இருக்கிறார்கள். இவர்களில் 3.50 கோடி பேர் ஏதாவது வேலை கிடைக்காதா? என்று தொடர்ச்சியாக வேலை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். மீதமுள்ள 2 கோடி பேர் இனி வேலை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று நம்பிக்கையிழந்து அந்த முயற்சியை கைவிட்டு விட்டார்கள்

 

2014 இல் தந்த 10 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி சந்தித்த அவலம் இதுதான்

 

உண்மை என்னவென்றால், *2016-17ல் 5.1 கோடி பேர் உற்பத்தி துறையில்* பணியாற்றிக் கொண்டிருந்தனர். 2022ம் ஆண்டை நெருங்குகிற போது இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட *46.5 சதவிகிதம் குறைந்து 2.73 கோடி பேர் மட்டுமே வேலை* பார்க்கிறார்கள். மோடி சொன்னது போல உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் 5 கோடியிலிருந்து 10 கோடி என்று இரண்டு மடங்காக உயர்வதற்கு பதிலாக 5 கோடியிலிருந்து 2.73 கோடியாக குறைந்து விட்டது. ஒவ்வொரு துறையிலும் இதுதான் நிலைமை. *ரியல் எஸ்டேட், கட்டுமானம், சுரங்கம், ஊடகம், பதிப்புத்துறை, பொதுநிர்வாகம் என்று அனைத்திலும் 2016-17ல் இருந்ததை விட 2020-21ல் வேலைவாய்ப்புகள் அகலபாதாளத்திற்கு* சரிந்து விட்டன. 2021-22 கணக்கைச் சொன்னால் கொரோனா பாதிப்பை கணக்கில் எடுக்காமல் சொன்னதாக சங்பரிவார் ஆதரவாளர்கள் ஊளையிடக் கூடும்.

 

எனவே, தான் 2021 மார்ச் வரையிலான கணக்கு இங்கே முன்வைக்கப்படுகிறது. *ஊடகம் மற்றும் பதிப்புத்துறையில் 10.43 லட்சமாக இருந்த வேலைவாய்ப்புகள் 2.92 லட்சமாக குறைந்து விட்டதாக* தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ஏறத்தாழ 72 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் பறிபோய் விட்டன. அதாவது, 2016-17ல் ஊடகம் மற்றும் பதிப்புத்துறையில் 100 பேர் வேலை செய்தார்கள் என்றால் இப்போது வெறும் 28 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 2016-17ல் அனைத்து துறைகளும் சேர்ந்து 40.7 கோடி பேர் பணியிலிருந்தார்கள். ஆனால், 2020-21ல் இந்த எண்ணிக்கை 37.8 சதவிகிதமாக சரிந்து விட்டது. மோடி சொன்னது போல நடந்திருந்தால் 2020-21ல் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகள் 50 கோடியை தாண்டியிருக்க வேண்டும். மாறாக, உள்ளதும் போச்சு என்று சொல்லும் வகையில் 7.13 கோடி வேலைவாய்ப்புகள் இந்த காலத்தில் இல்லாமல் போய்விட்டன.

 

*எல்லையில் வீரர்கள்* என்று சங்பரிவார் கும்பல் எப்போதும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றம் செய்வதற்காக கூக்குரலிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் *பாதுகாப்புத்துறையில் 1.90 கோடி பேர் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வெறும் 71 லட்சம் பேர் மட்டுமே* பணியிலிருக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் மிகக்கடுமையாக குறைந்திருக்கிறது. இப்போது மோடியின் கையில்மந்திரகோல்ஏதுமில்லை என்பது தெளிவாகியிருக்கும். *வேலைவாய்ப்பு தனி மனிதனின் திறமையினால் மட்டும் உருவாக்கப்பட்டு விடுவது அல்ல.* ஒரு அரசு கடைபிடிக்கும் கொள்கைகளால் உருவாக்கப்படுவது தான். அரசே அனைவருக்கும் வேலைகள் கொடுத்து விட முடியும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், *அரசின் கொள்கைகள் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்* என்பது தான் இதன் அடிப்படையான அம்சம்.

 

நவீன தாராளமயக் கொள்கை வளர்ச்சி என்று வேடமிட்டு வந்தாலும் அடிப்படையில் அது லாபத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்தோடு தான் வருகிறது. *லாப அதிகரிப்பு மிக முக்கியமான அம்சமாக இருப்பது தொழிலாளர்களுடைய ஊதியத்தை குறைப்பதும், பணி நேரத்தை அதிகப்படுத்தவும், அவர்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை வெட்டிச் சுருக்குவதாகும்.* சிக்கன நடவடிக்கை, வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள், நாடு வளர வேண்டுமென்றால் நாம் கொஞ்சம் துயரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நவீன தாராளமயத்தை, உலகமயத்தை ஆதரிக்கும் எல்லோரும் ஏழை, எளிய மக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், *எப்போது சிக்கனத்தை கைவிட முடியும்?, எப்போது இறுக்கி கட்டிய வயிறை சற்று நெகிழ்வாக்கிக் கொள்ள முடியும்?, நாடு வளர ஏற்றுக் கொண்ட துயரம் எப்போது குறையும்?. நாடு எப்போது நிறைவான வளர்ச்சி பெறும்? என்பதை பற்றி எவரும் எழுதுவதில்லை.*

 

தேசத்தின் பொருளாதாரம் கீழ்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்புகள் ஏற்கனவே இருந்த நிலையை விட மிக கடுமையாக குறைந்திருக்கிறது. இத்தகைய அனுபவத்தில் இனிமேலும் நவீன தாராளமயக் கொள்கை என்னும் *வெள்ளை யானையை சுமந்து கொண்டு திரிய வேண்டுமா”?.*

 

உலகமே ஒரு திசையில் ஓடுகிற போது இடதுசாரிகள் மட்டும் மாற்றுக் கருத்தைச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று சிலர் அப்பாவித்தனமாகவும், சிலர் நரித்தனத்தோடும் பேசக் கூடும். ஆனால், இடதுசாரிகள் சொன்னது தான் இப்போது உண்மையாகி இருக்கிறது.

 

எனவே, இந்தியாவில் சமூகப் பொருளாதார யதார்த்தத்தை கணக்கில் கொள்ளாத *உலகமே ஒரு பக்கம் ஓடுகிறது என்கிற வாதமும், அதனால் நாமும் சேர்ந்து ஓட வேண்டும் என்கிற வாதமும் முட்டாள்தனமானது.*

 

*******************

*செவ்வானம்*