சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, February 18, 2026
அழிவை அழைக்கும் அழகிய நிக்கோபார் தீவுகள்
Saturday, April 26, 2025
எல்.ஐ.சி யால் மட்டுமே முடியும்
பஹல்காம் தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் இருந்தால் அவர்களின் பட்டுவாடா கேட்புரிமங்கள் உடனடியாக செய்யப் படும் என்றும் அதற்காக சில சிறப்பு தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் எல்.ஐ.சி அறிவித்துள்ளது. அரசின் பட்டியலில் பெயர் இருந்தால் போது இறப்புச் சான்றிதழ் கூட அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
24.04.2025 அன்றே நெல்லூர் கோட்டம் ஒரு கேட்புரிமத்தை பட்டுவாடா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இது போல துயரில் தவிப்பவருக்கு வேகமாக எந்த ஒரு தனியார் நிறுவனமும் சேவை செய்யாது என்றும் பொதுத்துறை எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம் என்று எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.
இது புதிதல்ல.
சுனாமி தாக்கிய போது கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் 24 மணி நேர சேவை செய்தோம்.
காட்பாடி தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் இறந்த போது வேலூர் மையத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் 24 மணி நேர உதவி மையம் செயல்பட்டது.
இது எல்.ஐ.சி யின் பாரம்பரியம்.
சுனாமி சமயத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அவ்வளவாக இந்தியாவில் கால் பதிக்கவில்லை (இப்போதும் கூட அவர்களால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை). ஆனால் சுனாமி தாக்கிய வேறு சில நாடுகளில் அங்கே இருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , "சுனாமி என்பது கடவுளின் செயல். அதனால் பாலிசி பணத்தை தர முடியாது" என்று மறுத்து விட்டன. பாலிசிதாரர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
மும்பை தாக்குதலின் போது வீர மரணம் அடைந்திட்ட காவல்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரேவின் இறப்புக் கேட்புரிமத்தை எல்.ஐ.சி மறுநாளே வழங்கியது. அவர் இன்னொரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கார்கரே மீட்பு நடவடிக்கைக்குச் சென்றார் என்று சொல்லி பணம் கொடுக்க மறுத்து விட்டது.
இப்படிப்பட்ட தனியார் கம்பெனிகள் கொழிக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசு எல்.ஐ.சி யின் செயல்பாடுகளை, வணிகத்தை சீர்குலைக்க சில சதிகளை செய்து கொண்டிருக்கிறது.
அதை எந்நாளும் நாங்கள் அனுமதியோம்.
Wednesday, October 23, 2024
காவியடிச்சா பி.எஸ்.என்.எல் ஓடாது
காலி செய்து விட்டு காவியா?
உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி அரசு வெற்று, வெட்டி நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் குறைச்சல் கிடையாது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லோகோவிற்கு காவிச்சாயம் பூசி விட்டு “கனெக்டிங் இந்தியா” என்ற வாசகத்தை “கனெக்டிங் பாரத்” என்று மாற்றியுள்ளது.
அப்படி லோகோவைற்கு காவி அடித்துள்ள மோடி அரசு,
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை இழப்பின் பிடியிலிருந்து விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய பாக்கித் தொகையை வசூலித்துக் கொடுக்க எந்த முயற்சியும் எடுத்தது இல்லை.
பி.எஸ்.என்.எல் தனது கட்டமைப்பை மேம்படுத்த தேவைப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.
பி.எஸ்.என்.எல் மீட்பிற்காக அறிவிக்கப்பட்ட தொகையை கொடுக்கவும் இல்லை.
4 ஜி சேவை வருகிறது, வருகிறது என்ற சொல்லப் படுகிறதே தவிர, இன்னும் வந்த பாடில்லை.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் ஒழுங்காக கொடுக்கப்படுவதில்லை.
“கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடாது” என்பது எந்த அளவு உண்மையோ அது போல லோகாவுக்கு காவிச்சாயம் பூசுவதன் மூலம் பி.எஸ்.என்.எல் நிலைக்காது, முன்னேறாது.
தான் வளர்த்த நாய் இறந்து விட்டது என்பதை நாகேஷிடம் வருத்தமாக சொல்லும் நண்பர் தான் அதற்கு பெயரெல்லாம் வைத்ததாக சொல்வார். அதற்கு நாகேஷ், “நாய்க்கு பேர் வச்சியே நாயே, சோறு வச்சியா?” என்று கேட்பார்.
“லோகோவுக்கு காவிச்சாயம் பூசினியே, பி.எஸ்.என்.எல் பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்தாய்” என்று நாம் கேட்க வேண்டும்.
Saturday, January 20, 2024
கார்ப்பரேட்டிடம் சொன்னால் டிமோவுக்கு???
வரும் 22 ம் தேதி டிமோ நடத்தும் அயோத்தி கோயில் திறப்பு எனும் அரசியல் கேலிக்கூத்து நாடகத்திற்காக அன்று மதியம் 2.30 மணி வரை அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள்.
இவரு பெருமையை டி.வி ல பார்க்க லீவு விடறாரு. மதியம் மூன்று மணி நேரம் மட்டும் எதற்கு அலுவலகம் போகனும், அரை நாள் லீவ் எடுக்கலாம் என்றால் எழவு ஒரு நாள் லீவ் பிடிக்கப்படுமாம். அயோக்கியத்தனமான அதிகார துஷ்பிரயோகம் இது. உன் பவுசை பார்க்க எனக்கு எதுக்கய்யா லீவு?
பொதுத்துறையெல்லாம் இறப்பதற்காக பிறந்தவை என்று அவற்றை அழித்துக் கொண்டிருக்கும் டிமோவே, யாரிடம் தரகுக்கூலி வாங்கிக் கொண்டு, இந்தியாவின் செல்வங்களை எல்லாம் தாரை வார்க்கிறேயே, அந்த கார்ப்பரேட் கம்பெனிகளை லீவ் விடச்சொல்லும் தைரியம் இருக்கிறதா உனக்கு?
சொன்னால் என்ன ஆகும்? யாருக்கு கோயில் திறப்பதாக அரசியல் செய்கிறாரோ, அந்த ராமர் காட்டுக்கு போன போது ராமரின் பிரதிநிதியாக எதை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி செய்தானோ, அதைக் கொண்டே அடி கிடைக்கும்.
எதைக் கொண்டு?
மேலே உள்ள படத்தை பார்க்கவும் . . ..
Wednesday, August 16, 2023
இதற்கு மட்டும் நாங்களா டிமோ ?
“பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காக பிறந்தவை”.
“யாருக்கோ செல்லப்பிள்ளை என்பதற்காக நாங்கள் பொதுத்துறை நிறுவனங்களை நடத்திட வேண்டுமா?”
இந்த இரண்டு முத்துக்களையும் உதிர்த்தவர் அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்கும் டிமோ.
அதிகமான பசுமை வாயு வெளியிட நாங்கள் முயற்சி செய்வோம் என்று அமெரிக்காவில் டிமோ கொடுத்த உறுதி மொழிக்காக லட்சகக்கணக்கில் மரங்களை நட வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனங்கள் மீது அநியாயமான அழுத்தம் தரப்படுகிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்ட “பிரிவினை கோர நாள்” என்ற பெயரில் கண்காட்சிகள் நடத்தும்படி பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படுகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட்டால் அதனை தனியாருக்கு விற்றிடுவீர், பங்குகளை விற்பீர், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டீர்கள்.
ஆனால் உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக உங்களின் அஜெண்டாவை நிறைவேற்ற மட்டும் உங்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டுமா?
இப்படியெல்லாம் உங்கள் அதிகாரத்தை மோசமாக பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களை உங்கள் கருவியாக மாற்ற உங்களுக்கு வெட்கமே இல்லையா?
Thursday, February 16, 2023
மோடிதான் கெடுத்தார்
ஹிந்துஸ்தான் ஏரோனெடிக்கல்
லிமிட்டெட் நிறுவனம் தயாரிக்கும் “தேஜஸ்” போர்
விமானத்தை அர்ஜெண்டினாவும் எகிப்தும் வாங்க உள்ளார்கள்.
வெளி நாடுகள் நம்பிக்கையோடு
அணுகிய ஒரு நிறுவனத்திற்கான வாய்ப்பை மோடி கெடுத்ததை இத்தருணத்தில் மறக்கக் கூடாது.
ரபேல் விமானங்களை
பிரான்ஸ் நிறுவனத்திடம் வாங்க முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முதல் தவணை விமானங்களை
டஸ்ஸால்ட் நிறுவனம் நேரடியாக தயாரித்து அனுப்பும். அதன் பின்பு அவற்றை ஹிந்துஸ்தான்
ஏரொனெடிக்கல் நிறுவனம் தயாரிக்கும்.
இந்த ஒப்பந்தத்தை
மோடி மாற்றினார். ஹெச்.ஏ.எல் க்கு பதிலாக பொம்மை ப்ளேன் கூட தயாரிக்காத தம்பி அம்பானி
கம்பெனிக்கு மாற்றி விட்டார்.
பெற்ற குழந்தையை பட்டினி
போட்டு ஊரார் குழந்தைக்கு விருந்து வைத்த கேவலமான ஜென்மம்தான் மோடி.
Monday, November 14, 2022
நேரு எனும் சிற்பி
*நாளொரு கேள்வி: 14.11.2022*
Saturday, October 22, 2022
மானங்கெட்ட பிழைப்பு ஏன் மோடி?
பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காக பிறந்தவை என்று சொன்னவர் மோடி. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம்தான் மோடியின் ஊதாரிச் செலவுகள் செய்யப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான எல்.ஐ.சி யின் மூன்றரை சதவிகித பங்குகள் விற்கப்பட்டன. இரண்டு பொதுத்துறை வங்கிகளும் ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமும் விற்பனைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏர் இந்தியா அடிமாட்டு விலைக்கு டாடாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டது.
விமான நிலையங்களின் பராமரிப்பு அதானிக்கு கொடுக்கப்பட்டது. எச்.ஏ.எல். நிறுவனத்திற்குப் பதிலாக பொம்மை ப்ளேன் கூட தயாரித்த அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் கம்பெனிக்கு ரபேல் விமான ஒப்பந்தம் தரப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அதானிகளும் அம்பானிகளும் அவர்தம் கூட்டத்தாரும் வாங்கிய கடனெல்லாம் கோடிக்கணக்கில் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இப்படி பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்த படுபாவி மோடி.
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று வாக்குறுதி கொடுத்து நாற்காலியைப் பிடித்த மனிதனின் ஆட்சியில்தான் நாற்பது ஆண்டுகளில் காணாத அளவிற்கு வேலையின்மை விகிதம் உயர்ந்தது. இப்பிரச்சினைக்கு இந்த அற்ப மனிதன் கொடுத்த அற்புதமான தீர்வுதான் “பக்கோடா கடை வைப்பது”
இதெல்லாம் பழசுதானே, இப்போ எதுக்கு மறுபடியும் என்று கேட்கிறீர்களா?
இல்லை. புதிதாக ஒரு அராஜகம் நடக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் புதிதாக பணி நியமனம் பெற்ற ஊழியர்களிடம் இன்று மோடி உரையாற்ற உள்ளார்,
நிர்வாகங்களும் “யெஸ் பாஸ்” என்று தங்கள் விசுவாசத்தைக் காண்பித்து ஊழியர்கள் மோடி பேசுவதை கேட்கும் தண்டனையை கட்டாயமாக்கி உள்ளன, துரதிர்ஷ்டவசமாக எங்கள் நிறுவனம், எங்கள் கோட்டம் உட்பட. எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம் என்பது வேறு விஷயம்.
பொதுத்துறையை அழிக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு மனிதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களோடு என்ன பேச முடியும்? பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது?
புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் எல்லாம் பட்டதாரிகள். மோடி போல இல்லாத “எம்.ஏ என்டயர் பொலிட்டிக்கல் சைன்ஸ்” படித்ததாக கதை விடும் தற்குறிகள் அல்ல,
அவர்கள் அனைவரும் இரண்டு தேர்வுகள் எழுதி பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள். குஜராத்தில் ரத்த ஆற்றை ஓட வைத்து மக்களை பிளவு படுத்தி 15 லட்சம், 2 கோடி வேலை என்றெல்லாம் ஜூம்லா வாக்குறுதி கொடுத்து அதானியின் ஓசி ப்ளேனில் பறந்து பிரச்சாரம் செய்து வேலையில் சேர்ந்தவர்கள் அல்ல..
மோடியால் அவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல முடியும்?
உங்கள் நிறுவனத்துக்கு கடுமையாக உழைத்து லாபத்தை பெருக்குங்கள். அப்போதுதான் நான் அவற்றை அடிமாட்டு விலைக்கு என் எஜமானர்களான முதலாளிகளுக்கு விற்பேன் என்று உண்மையை பேச முடியுமா? அவரின் குரங்குக் குளியல் (மன்கி பாத்) தான் நமக்கு தெரியுமே!
பொதுத்துறை நிறுவனங்களை கட்டாயுப்படுத்துவது போல இவரால் எந்த தனியார் நிறுவன ஊழியர்களிடமாவது பேச முடியுமா? இவரின் யோக்கியதை அறிந்த அவர்கள் இவரை கிட்டவே சேர்க்க மாட்டார்கள்.
பின் ஏன் இந்த மானங்கெட்ட பிழைப்பு மோடி?
உங்களால் சீரழிக்கப்படுகிற பொதுத்துறை நிறுவனங்களை உங்களது விளம்பர மோகத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது அயோக்கியத்தனம் இல்லையா? அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?
யாரோ தயாரித்த உரையை இவர் டெலிப்ராம்ப்டரில் படிப்பதை காணும் அந்த ஊழியர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள். பிரதமரே எங்களோடு பேசினார் என்ற மாயையில் பலர் மயங்குவார்கள் என்பதும் யதார்த்தம்.
என்ன செய்ய வேண்டும்?
பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே என்று உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் “அந்த இடங்களில் பள்ளிக் கூடங்களை அதிகரிப்பேன்” என்று கூறினார்.
அது போலத்தான் மோடியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொழிற்சங்க வகுப்புக்களை விரைவில் எடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. போராடாமல் எதுவும் கிடைக்காது என்ற உண்மையை சமீபத்திய யமஹா தொழிலாளர்களின் இரண்டாவது போராட்டத்தின் (முதல் போராட்டம் குறித்த
"மறக்க முடியாத மாலை அது" என்ற எனது அனுபவப் பதிவை இணைப்பின் மூலம் படியுங்கள்
வெற்றியோடு சேர்த்து சொல்லித்தர வேண்டும்.
Friday, October 7, 2022
மோடி கொடியசைச்சா
Saturday, March 26, 2022
அவசியம் பாருங்க. அனுபவத்தை கேளுங்க
எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பாக "காம்ரேட் டாக்கீஸ்" தயாரித்துள்ள ஆவணப்படம்.
பங்கு விற்பனை தொடர்பான ஒன்றிய அரசின் வாதங்களை எங்கள் தலைவர்கள் சுக்கு நூறாக தகர்ப்பது மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் பலன் பெற்ற பாலிசிதாரர்களின் அனுபவப் பகிர்வும் உண்டு.
அவசியம் பாருங்கள்
யூட்யூப் இணைப்பு இங்கே
Saturday, March 5, 2022
இன்று ஏன் போராட்டம்?
எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. அதற்கு எதிராக இன்று தேசத்தின் தலைநகரில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.
தலைநகர் போராட்டத்தை ஒட்டி தென் மண்டலம் முழுதும் தர்ணா இயக்கங்கள் நடைபெறவுள்ளது.
எங்கள் கோட்டத்தில் வேலூரிலும் புதுவையிலும் . . .
பங்கு விற்பனையின் மூலம் பாலிசிதாரர்களுக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் குறித்து பொருளாதார நிபுணரும் கேரள முன்னாள் நிதியமைச்சருமான தோழர் தாமஸ் ஐசக் எழுதியுள்ளதை படியுங்கள்.
உண்மையான தேச பக்தர் என்றால் எங்களோடு நில்லுங்கள். எல்.ஐ.சி பங்கு விற்பனையை ஆதரிப்பவர் எவராயினும் அவர்கள்தான் நிஜமான தேச விரோதிகள், மக்கள் விரோதிகள்,
Friday, January 28, 2022
டாடாவுக்கு மட்டும் சொந்தமா?
தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் நேற்று முதல் ஒரே தலைப்பை முழங்கிக் கொண்டிருக்கின்றன.
அந்த தலைப்புச் செய்தி
"ஏர் இந்தியா மீண்டும் டாடாவிடமே சென்றது"
அப்படியா? நிஜமா? அரசுடமையாக்கப்படுவதற்கு முன்பாக ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் மட்டும்தான் இருந்ததா?
அப்படித்தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம். நானும்தான்.
ஆனால் ஒரு பிரசுரம் எழுதுவதற்காக தகவல்களை தேடும் போதுதான் உண்மை புரிந்தது. (வேறு வேலைகள் வந்த காரணத்தால் அந்த பிரசுரம் எழுதும் பணியை அம்போவென்று நிறுத்தி விட்டது வேறு விஷயம்) ஆனாலும் பாதியில் நிறுத்திய அந்த பணியில் எழுதிய விஷயங்கள் இன்றைய பதிவுக்கு போதுமானது.
டாடா நிறுவனம்தான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் விமான நிறுவனமா? அதைத்தான் அப்படியே ஏர் இந்தியாவாக பொதுத்துறை நிறுவனமாக மாற்றி விட்டார்களா? டாடாவிடம் பெற்றதுதான் அப்படியே டாடாவிற்கு சென்றுள்ளதா? என்ற வினாக்களுக்கு விடை சொல்வதும் முக்கியம்.
இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது.
"மாப்பிள்ளை இவர்தான். ஆனால் சட்டை என்னுடையது" என்பது போல அரசு நிறுவனமாக இருந்தாலும் ஏர் இந்தியா நிஜத்தில் யார் கைகளில் இருந்தது?
அதைப் பற்றியும் எழுதியிருந்தேன்.
அரசு
நிறுவனமானது. ஆனால் ஆதிக்கம்?
1953 ல் துவக்கப்பட்ட பொதுத்துறை ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் யார் தெரியுமா? டாடா ஏர்லைன்ஸாக துவங்கி ஏர் இந்தியாவாக பெயர் மாற்றம் அடைந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி.டாடாதான். நிறுவனம் தேசியமயமான பின்பும் தலைவராக நியமிக்கப்பட்டார். 1978 ல் ஜனதா ஆட்சி வருகிற வரையில் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகள் அவர் அந்த பதவியில் நீடித்தார். ஜனதா ஆட்சியில் ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா சேர்மன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு டாடா நிறுவன வாரிசு ரத்தன் டாடா ராஜீவ் காந்தி காலத்தில் 1986 லிருந்து 1989 வரை சேர்மனாக செயல்பட்டார். நிறுவனம் என்னமோ அரசுடையதுதான். ஆனால் அதில் ஆதிக்கம் செலுத்தியது டாடாக்கள்.
மீண்டும் டாடாவிடம் சென்றது ஏர் இந்தியா என்று தலைப்புச் செய்திகள் போடுபவர்களுக்கு இந்த உண்மை வரலாறு தெரியுமா என்று எனக்கு தெரியாது.
நாமாவது தெரிந்து கொள்வோம்.
Tuesday, September 7, 2021
நாசரின் கேள்வி மீண்டும் . . .
உளுத்துப் போன உதவாத வாதம்
பொதுத்துறை
நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சதிச்செயலை, தேசத்தின் செல்வாதாரம்
நாட்டின் கைகளிலிருந்து சில பெரிய மனிதர்களின் கைகளுக்கு மாறுவதை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி
வெட்கம் கெட்டு முட்டு கொடுக்கிற பல மூடர்கள் மீண்டும் மீண்டும் முன் வைக்கிற ஒரே வாதம்
ரயில்
விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே இருந்த போது, கட்டுப்படுத்தும் வழி தெரியாத போது
“Too much of Privatization, Too much of Privatization”
என்று புலம்பினார் டோனி ப்ளேய்ர். தனியார்மயத்தை ஊக்குவித்த மார்க்கரெட் தாட்சருக்கு பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்.



















