Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Tuesday, April 7, 2026

மம்தா அண்ணன் மகன் செஞ்சதுதான் விஜய்

 


தன்னைப் போன்ற உருவச்சிலைகளை செய்து அவற்றை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுதான் விஜய் இன்று கொடுத்துள்ள கண்டெண்ட்.


எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ க்கள் வரிசையாக நிற்பது போல விஜய் சிலைகள் நிற்பதைப் பார்த்தால் காமெடியாகத்தான் இருக்கிறது.


ஆனால் இது ரொம்பவே பழைய டெக்னிக்.

2019 மக்களவைத் தேர்தலின் போதே மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி கடைபிடித்த டெக்னிக்தான். 

அப்போது எழுதிய பதிவு உங்கள் தகவலுக்காக.

Monday, April 29, 2019

பிரச்சாரத்துக்கே இப்படி! ஜெயிச்சா எப்படி?



அபிஷேக் பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர். டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடும் இவர் மம்தா பானர்ஜியின் சொந்தக் காரரும் கூட.

பிரச்சாரத்தில் வெயிலில் அலைய முடியவில்லை என்பதற்காக அவருடைய சிலை ஒன்றை ப்ளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்து, அந்த சிலையை ஜீப்பில் வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

பிரச்சாரத்தின் போது ஓட்டு கேட்பதற்காகக் கூட மக்களை சந்திக்க வராத இந்த சொகுசுப் பேர்வழி எல்லாம் ஜெயிச்சால் மட்டும் என்ன பிரயோஜனம்?

அந்த தொகுதி மக்களுக்கு இதையெல்லாம் யோசிக்கிற அளவுக்கு சொரணை இருக்குமா?

விஜய் அவருடைய லெவலுக்கு இன்னும் புதுமையாய் ஏதாவது யோசித்திருக்கலாம்.

பிகு: அதே 2019 தேர்தலின் போது டெல்லியில் ஒரு வேட்பாளர், அவருக்கு பதிலாக டூப் ஒருவரை வேனில் நிற்க வைத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அது டூப்பெல்லாம் இல்லை, நான் ஜீப்பிற்குள் ஓய்வு எடுத்த போது அவர் சும்மா மேலே நின்று வாக்காளர்களைப் பார்த்து சும்மா வேட்பாளர் போல சும்மா கை காட்டினார் என்று அந்த ஒரிஜினல் வேட்பாளர் சமாளித்தார். 

அவர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சங்கி கௌதம் கம்பீர் . . . .

Tuesday, March 31, 2026

மீண்டும் கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம்

 


பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை முதலில் படியுங்கள்.


Tuesday, December 22, 2015

கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம் - ஜெய்ட்லி அவுட்


கிரிக்கெட் வாழ்க்கையில் அவ்வளவாக பிரகாசிக்காதவர் கீர்த்தி ஆஸாத். அரசியலில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவ்வளவு பிரபலமான அரசியல்வாதி என்றும் சொல்ல முடியாது.

கிரிக்கெட்டில் அவர் கையாண்ட அதிரடி பாணியை இப்போது அவர் தனது சொந்தக்கட்சி பிரபலம் மீதே கையாள எப்படி மீள்வது என்று தெரியாமல் பாஜக தடுமாறுகிறது.

அசிங்கப்படுத்த முயல்பவர்களே அசிங்கப் படுவார்கள்  என்று சில தினங்கள் முன்பு நான் எழுதிய பதிவு நிஜமாகிக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக மோடி வகையறாக்கள் செய்த முயற்சி இப்போது அருண் ஜெய்ட்லிக்கு எதிராகவே திரும்பி விட்டது. 

டெல்லி கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக அருண் ஜெய்ட்லி இருந்த போது கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டிற்கு எதிராக அவதூறு வழக்கு போட்ட ஜெய்ட்லி அதே குற்றச்சாட்டுக்களை கீர்த்தி ஆஸாத் சொல்கிற போது வாய் திறக்க மறுக்கிறார்.

முடிந்தால் என் மீதும் வழக்கு தொடுங்கள் என்று கீர்த்தி ஆஸாத் சொல்லும் போது இந்தியாவின் மிகப் பெரிய சட்ட நிபுணர் அருண் ஜெய்ட்லி ஏன் பதில் பேசவில்லை?

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்றவர்களை ஒதுக்கித் தள்ளிய அமித் ஷா, மோடி கும்பல் ஏன் இப்போது மௌனமாக உள்ளது?

மொத்தத்தில் கீர்த்தி ஆஸாத்தின் அதிரடி ஆட்டத்தில் அருண் ஜெய்ட்லி இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த பந்தில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பி விடுவார் போல!

**********************************************************************************************

இப்போது தற்போதைய பிரச்சினைக்கு வருவோம்.

பீகாடின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பகவத் ஜா ஆசாதின் மகனும் மூன்று முறை பாஜக எம்.பி ஆக இருந்து பின் காங்கிரஸ் சென்று தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி யாக உள்ள கீர்த்தி ஆஸாத், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக அமித்ஷாவின் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷா மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்.

இந்தியா டி-20 உலகக் கோப்பையை வென்றதும் ஜெய்ஷா, பயிற்சியாளர்  சங்கி கவுதம் கம்பீர் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவோடு அகமதாபாத்தில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு கோப்பையுடன் சென்று வழிபட்டுள்ளார்.

"இந்திய வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனால் அந்த கோப்பையுடன் சர்ச்சிற்கு செல்ல முடியுமா? முகமது சிராஜால் அந்த கோப்பையை ஒரு மசூதிக்கு எடுத்துச் செல்ல முடியுமா இல்லை அர்ஷ்தீப் சிங்கால் ஒரு குருத்வாராவுக்கு கோப்பையை கொண்டு போக முடியுமா? இந்த உலகக் கோப்பை என்பது பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றும் நூற்றி நாற்பது கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது. அதை ஒரு நம்பிக்கையை பின்பற்றுபவர்களோடு சுருக்குவது மோசமான செயல். விளையாட்டில் மதத்தை கொண்டு வராதீர்கள்."

கீர்த்தி ஆசாதின் கேள்வி மிகவும் சரியானது என்பதற்கு அக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் "யார் இந்த கீர்த்தி ஆசாத்" என்று கேட்டு கம்பீரும் வேறு சிலரும் திசை திருப்பியதே சான்று. 

பிகு: இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் மோடி என்பதை ஏன் யாருமே சொல்லவில்லை என்பது புதிராக உள்ளது. மோடி போட்டியை பார்க்க வந்திருந்தால் அதுவே இந்திய வீரர்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து அவர்களின் விளையாட்டை பாதித்திருக்கும். 

50 ஓவர்கள் உலகக் கோப்பையில் இந்தியா தோற்க மோடியின் வருகைதானே முக்கியக் காரணம்!

பிகு 2 : டெல்லியில் உள்ள ஃபெரோட்ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜெய்ட்லி ஸ்டேடியம் என்று பெயர் வைத்ததையும் கீர்த்தி ஆசாத் கண்டித்தார். அவரை விட மிகக் கடுமையாக கண்டித்தவர் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. அப்படி அருண் ஜெய்ட்லி பெயரை வைக்க வேண்டுமென்றால் ஒரு ஸ்டாண்டிற்கு வைக்கப்பட்டிருந்த தன் பெயரை நீக்கி விடுங்கள் என்றார். டெல்லி கிரிக்கெட் வாரியம் பேடியின் பெயரை நீக்கி விட்டது.


புதிய பின் குறிப்பு : எழுதி நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே இருந்த பதிவு இது. 

Monday, March 30, 2026

நினைவுக்கு வந்த சண்டை

 நேற்று  நீதா அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான ஐ.பி.எல் போட்டியை என் மகன் பார்த்துக் கொண்டிருந்த போது எட்டாண்டுகள் முன்பாக  30, மே, 2018 அன்று எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. "முற்றுகை" எழுத தரவுகள் சேகரிக்க கொல்கத்தா போயிருந்த போது பார்த்த சம்பவத்தை பதிவாக எழுதியிருந்தேன்.

இரு அணிகளிலும் முதலாளிகள் அப்படியே தொடர்கிறார்கள். ரசிகர்களும் தங்கள் மாநிலத்து அணி என்ற விசுவாசத்தோடுதான் உள்ளனர். கொல்கத்தா போல மும்பையில் சண்டை நடந்ததா என்று தெரியவில்லை. 

இதோ பதிவுக்கு செல்கிறேன்.


என்ன தைரியம் இருந்தா அந்த கொடியை?





ஸ்டெரிலைட் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொல்கத்தா பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது அதனை தொடரலாம் என்று உள்ளேன்.

எங்கள் விருந்தினர் இல்லத்துக்கு அருகில்தான் ஈடன் கார்டன் மைதானம் உள்ளது.  நான் அங்கே இருந்த நாள் ஒன்றில்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே  ஒரு போட்டி இருந்தது.

அன்று மாலை ஏழு மணி அளவில் ஈடன் கார்டன் மைதானத்துக்குச் செல்லும் சாலை வழியாக நான் எங்கள் விருந்தினர் இல்லத்திற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக மைதானத்தை நோக்கி ரசிகர்கள் சென்று கொண்டிருக்க எதிர் திசையில் நடந்து செல்வதே சிரமமாக இருந்தது.

பல சாலையோர வியாபாரிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கொடியையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். விறுவிறுப்பாகவே வணிகம் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளைஞர் கூட்டத்திடம் ஒரு வியாபாரி, மும்பை இந்தியன்ஸ் அணி கொடியை  வேண்டுமா என்று கேட்க அவர்களுக்கு கோபம் வந்து விட்டது.

அந்த வியாபாரியிடம் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். நான் புரிந்து கொண்ட வரை அவர்கள் கேட்டது

“எங்கே வந்து எந்த கொடியை விற்கிறாய்?  கொல்கத்தாகாரனிடம் மும்பை கொடியை வாங்கச் சொல்வதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்?”

அடிதடி என்று முற்றுவதற்கு முன்பாக மற்ற வியாபாரிகள் வந்து விலக்கி விட்டார்கள்.

அந்த இளைஞர்களை நினைத்தால் பாவமாக இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற அணி

கொல்கத்தா நகரத்தின் அணியும் கிடையாது,
மேற்கு வங்க மாநிலத்தின் அணியும் கிடையாது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தார்களா என்ற விபரம் எனக்கு தெரியாது.

அது ஷாருக்கானின் அணி.

அது போல மும்பை இந்தியன்ஸ் அணி முகேஷ்  அம்பானியின் அணி.

முதலாளிகளின் அணிக்காக நீங்கள் ஏனப்பா தேவையே இல்லாமல் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பின் குறிப்பு

மேலே உள்ள படம், எங்கள் விருந்தினர் இல்லத்திலிருந்து ஈடன் கார்டன் மைதானத்தை எடுத்த படம். ஒளி விளக்குகள் மட்டும்தான் தெரிகிறது.

பிகு: இன்னொரு கிரிக்கெட் பதிவு நீண்ட காலமாக ட்ராப்டிலேயே உள்ளது. முடிந்தால் மாலையில் இல்லை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

Wednesday, March 4, 2026

சஞ்சு சாம்சனும் சங்கி கம்பீரும்

 


இந்தியாவும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் விளையாடிய டி-20 போட்டியை என் மக்னோடு நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கேரளாவின் சஞ்சு சாம்சன் போட்டியில் வென்ற பின் மண்டியிட்டு சிலுவை போட்டு கடவுளை வணங்கினார்.   மத வெறி கிரிக்கெட்டிலும் ஊடுறுவிய காலத்தில் இப்படி செய்கிறாரே என்று எனக்கு தோன்றியது. போச்சு அவரை ட்ரால் பண்ணி நோகடிச்சுடுவாங்க என்று மகனும் சொன்னான்.

அன்றை போட்டியின் வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எப்படி சிறுமைப்படுத்துகிறார் பாருங்கள்.


பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தசங்கி கம்பீரால் எப்படி அவருக்கு பிடிக்காத செயலை செய்த சாம்சனை எப்படி பிடிக்கும்!

நல்ல வேளை இந்த போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடக்கவில்லை. மத வெறியர்கள் இந்த ஸ்டேடியத்தில் ஏற்கனவே இந்தியாவிற்கு இழிவை தேடிக்கொடுத்துள்ளார்.

விளையாட்டும் சங்கிகளுக்கு அரசியல் . . .

Tuesday, February 17, 2026

இதுதான் கிரிக்கெட் உணர்வு

 


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் சிறையில் இருப்பது நாம் அறிந்ததே. அவருடைய பார்வைத் திறனில் 85 % ஐ இழந்து விட்டார் என்றும் சிறையில் அவருக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில்லை என்றும் காலையில்தான் படித்தேன்.

இப்போது வந்த ஒரு செய்தி நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த . ஒரு மகளிர் அணி கேப்டன் உட்பட முன்னாள் கேப்டன்கள்  பாகிஸ்தான் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு பெருமை சேர்த்த இம்ரான் கானுக்கு சட்டத்திற்கு உட்பட்ட நியாயமான, கௌரவமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அந்த கடிதத்தின் சாராம்சம்.

நம் இந்திய அணியின் அடையாளங்களாக திகழும் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோர் கையெழுத்திட்ட இக்கடிதத்தில் உலகப் புகழ் பிரபலங்கள் கிளைவ் லாயிட், கிரேக் சேப்பல், ஆலன் பார்டர், உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

அந்த கடிதம் இங்கே

We, the undersigned former captains of our national cricket teams, write with deep concern regarding the reported treatment and incarceration conditions of Imran Khan, the distinguished former Captain of Pakistan and a legendary figure in world cricket. Imran Khan’s contributions to the game are universally admired. As captain, he led Pakistan to their historic 1992 Cricket World Cup victory—a triumph built on skill, resilience, leadership, and sportsmanship that inspired generations across borders.

 

Many of us competed against him, shared the field with him, or grew up idolising his all-round brilliance, charisma, and competitive spirit. He remains one of the finest all-rounders and captains the sport has ever seen, earning respect from players, fans, and administrators alike. Beyond cricket, Imran Khan served as Prime Minister of Pakistan, leading his nation during a challenging period. Regardless of political perspectives, he holds the honour of having been democratically elected to the highest office in his country.

 

recent reports concerning his health – particularly the alarming deterioration of his vision while in custody and the conditions of his imprisonment over the past two and a half years have caused us profound concern. As fellow cricketers who understand the values of fair play, honour, and respect that transcend the boundary rope, we believe that a person of Imran Khan’s stature deserves to be treated with the dignity and basic human consideration befitting a former national leader and a global sporting icon.

 

We respectfully urge the Government of Pakistan to ensure that Imran Khan receives: Immediate, adequate and ongoing medical attention from qualified specialists of his choosing to address his reported health issues. Humane and dignified conditions of detention in line with international standards, including regular visits by close family members. Fair and transparent access to legal processes without undue delay or hindrance.

 

Cricket has long been a bridge between nations. Our shared history on the field reminds us that rivalry ends when the stumps are drawn – and respect endures. Imran Khan embodied that spirit throughout his career. We call on authorities to honour it now by upholding the principles of decency and justice. This appeal is made in the spirit of sportsmanship and common humanity, without prejudice to any legal proceedings.

இரண்டு அம்சங்களில் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது.

காலமெல்லாம் தங்களோடு விளையாட்டில் மோதிய ஒருவருக்கு பிரச்சினை என்று வருகிற போது நாடு மறந்து அவருக்காக குரல் கொடுக்க ஒன்று சேர்ந்தது முக்கியமான ஒன்று.

அடுத்த அணி வீரர்களுக்கு கை கொடுக்கக்கூடாது என்று வெறுப்பரசியலை இந்திய கிரிக்கெட்டை நிர்வாகம் செய்யும் பாஜகவினர் புகுத்தியுள்ள சூழலில் இம்ரான் கானிற்காக கவாஸ்கரும் கபில்தேவும் குரல் கொடுத்துள்ளது இன்றைய கிரிக்கெட் அணியினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

நேர்மையாக, நாகரீகமாக, நட்புணர்வோடு நடந்து கொள்வதைத்தான் கிரிக்கெட்  உணர்வு என்பார்கள்.

அது இன்று அருகி வரும் நிலையில் இந்த கடிதம் கிரிக்கெட் உணர்வை புதுப்பித்துள்ளது. 


Monday, November 10, 2025

"கனா" வெற்றி நிஜத்திலும் . . .

 


பெண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றுள்ளது.

இரண்டாவது முறையாகவா? 

இதுதானே முதல் முறை என்று புருவம் உயர்த்துகிறீர்கள் அல்லவா!

சிவ கார்த்திகேயன் தயாரித்து நடித்த "கனா" திரைப்படம் நினைவில் உள்ளதல்லவா!

எனக்கு பிடித்த படம் அது. அப்போது எழுதிய பதிவு கீழே . . .

கனா (சினிமா) காணலாம் . . .


அந்த  திரைப்படத்திற்கும் கோப்பையை நிஜத்தில் வென்ற இந்திய அணிக்கும் சில ஒற்றுமை இருக்கிறது.

இரண்டிலும் இந்தியா ஆஸ்திரேலிய அணியைத்தான் அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும்.

திரைப்படத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை வெல்ல முக்கியமான காரணமாக இருந்த கௌசல்யா முருகேசன் அந்த அணியில் இடம் பெறக் கூடாது என்று சதிகள் நடந்தது.

அது போலவே நிஜப் போட்டியில் இந்தியா வெல்ல காரணமாக இருந்த ஜெமிமா விற்கு எதிராக சங்கிகள் சதி செய்தனர். இப்போதும் அந்த சதியை தொடர்கிறார்கள்.

இந்தியப் பெண்களால் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று முதன் முதலில் நம்பக்கூடிய விதத்தில் "கனா" காண்பித்தது.

அந்த "கனா" இன்று நிஜமாகி விட்டது. 

வெற்றியை சாத்தியமாக்கிய வீரர்கள், பயிற்சியாளர்கள், இந்திய பெண்கள் கிரிக்கெட் முன்னேற அடித்தளம் அமைத்துக் கொடுத்த முந்தைய காலத்தின் வீரர்கள் ஆகியோர் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

பிகு: எழுதி சில நாட்களானதுதான். . .



Monday, October 20, 2025

முன்னுதாரணமாய் விராத் கோலி . . .

 


ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியம் அசிங்கமாக நடந்து கொண்டது பற்றி என் மகனோடு பேசிக் கொண்டிருக்கையில் அவன் ஒரு காணொளியைக் காண்பித்தான். 

அதனை நீங்களும் பாருங்கள்


பாகிஸ்தான் வீரரின் ஷூ லேஸை விராத் கோலி கட்டி விடுகிறார். பார்க்க எவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இதுதான் விளையாட்டின் நோக்கம்!

சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதுதானே விளையாட்டின் உன்னதத்தைச் சொல்லும்!

83 திரைப்படத்தில் ஒரு காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகக் கோப்பை துவங்கும் முன்பாக அணிகள் வரிசையில் நிற்கையில் கபில்தேவ், பாகிஸ்தான் கேப்டன் இம்ரான்கானை  சென்று பார்த்து நலம் விசாரிப்பார். இருவருக்கும் உள்ள தோழமையை அந்த காட்சி உணர்த்தும்.



இவையெல்லாம்  நல்ல உதாரணங்கள். எல்லோரும் பின்பற்ற வேண்டிய உதாரணங்கள் . . .

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 



Wednesday, October 15, 2025

அசிங்கப்பட்டது இந்திய கிரிக்கெட்தான்

 


அசிங்கத்துக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது இந்தியாவின் துரதிர்ஷ்டமான நரேந்திர மோடிதான்.

ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தானை வென்றது. அந்த வெற்றியை ட்ரம்ப் நிறுத்தியதாக சொல்லிக் கொண்டிருக்கிற ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டு தான் ஒரு பொறுப்பற்ற போர் வெறியன் என்பதை நிரூபித்துக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணியின் தலைவராக இருந்த சூரியகுமார் யாதவ் மறுத்து விட்டார்.

பாகிஸ்தானியர் கையிலிருந்து கோப்பையை பெற முடியாது என்று சொல்லியுள்ளார்கள், பாஜக சங்கி கவுதம் கம்பீர் பயிற்சியாளராக உள்ள வீரர்கள் இப்படிப்பட்ட நிலை எடுத்ததை தேச பக்தி என்று கூட முட்டாள்தனமாக வர்ணிக்கிறார்கள் மூடச்சங்கிகள்.

பாகிஸ்தானியரிடமிருந்து கோப்பையை பெறுவது தேச பக்தி என்றால் பாகிஸ்தானோடு விளையாடுவதை தேசத்துரோகம் என்றுதான் அழைக்க வேண்டும்.

இவ்வளவு தேசப்பற்று உள்ளதாக காண்பித்துக் கொள்ளும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே!

பாகிஸ்தானுடன் விளையாடினால் நெறய டிக்கெட் விற்கும், நெறய ஸ்பான்ஸர் கிடைக்கும்,  டிவி களுக்கும் நெறய விளம்பரம் கிடைக்கும். பாகிஸ்தானுடன் விளையாடினால் கோடி கோடியாய் துட்டு கிடைக்கும். கொலை செய்வதற்காக பெறப்பட்ட கூலிப் பணத்தில் ரத்தக்கறை இருக்காதல்லவா! அது போல துட்டுக்கு முன்பு தேசப்பற்று எல்லாம் ஜூம்லா.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கையிலிருந்து கோப்பையை பெற முடியாது என்று நிலை எடுத்து இந்திய கிரிக்கெட்டை அசிங்கப்படுத்தி உள்ளார்கள் இந்திய அணி வீரர்களும் அவர்களின் பின் புலத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியமும்.

நியாயப்படி பார்த்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

ஆனால் 

அது நடக்காது.

அமித்ஷா மகன் ஜெய்ஷா சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கையில் அது சாத்தியமற்றது.

எதுவாக இருப்பினும் 

நடந்த சம்பவம் இந்தியாவிற்கு இழிவுதான்.

பிகு 1 : எழுதி பல நாளாகி விட்டது. கரூர் நெரிசல் மரணங்கள் இந்த பிரச்சினையை பின்னுக்கு தள்ளி விட்டது.

பிகு 2 : இன்னும் இரண்டு கிரிக்கெட் பதிவுகள் இருக்கிறது. 

Thursday, April 10, 2025

சங்கிகள் மட்டுமல்ல அதிமுகவினரும் கூட . . .

 


சங்கிகள் மூடர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதிமுக உறுப்பினர்கள் கூட அப்படித்தான் இருந்திருக்கின்றனர் என்பதை பழைய பதிவு ஒன்று சொன்னது.

ஒரு தகவலை சரி பார்க்க பழைய பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்ட பழைய பதிவு கீழே உள்ளது.

பதிவுக்கு செல்வதற்கு முன்பாக ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

காங்கிரஸ் ஆட்சியில் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தார்கள். அவருக்கு அந்த விருது அவசியமில்லை என்று ஒரு நீண்ட, நெடிய பதிவு ஒன்றை எழுதினேன். அதிகமான பின்னூட்டங்கள், ஆனால் அனைத்தும் நாகரீகமாக வந்த பதிவு அது.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அவசியமில்லை - சுட்டெரிக்கும் உண்மைகள்  என்ற அந்த பதிவை இணைப்பின் மூலம் அதனை படித்து விடுங்கள்.

 அந்த பதிவை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் மூன்று பக்கத்திற்கு வெளியிட்டார்கள். அதற்கு வந்த வாசகர் கடிதம்தான் அதிமுகவினர் பற்றிய மதிப்பீட்டிற்குக் காரணம்.

 

Friday, November 29, 2013

எம்.ஜி.ஆர் "பாரத ரத்னா" வை திருப்பி அனுப்பினாரா? சொர்க்கத்திலிருந்தா? 

 

சச்சினுக்கு பாரத ரத்னா அவசியமில்லை என்று நான் எழுதியிருந்தது     கடந்த வெள்ளியன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்
பிரசுரமாகி இருந்தது. அக்கட்டுரைக்கான வாசகர் கடிதங்கள் இன்று
வெளியான குமுதம் ரிப்போர்ட்டர்  இதழில் பிரசுரமாகியுள்ளது.

மொத்தம் ஏழு கடிதங்கள். அதிலே நான்கு கடிதங்கள் எனது கருத்திற்கு
ஆதரவாகவும் மூன்று கடிதங்கள் மாற்றுக் கருத்துக்களோடும் 
வெளியாகியுள்ளது. 

பொது வெளியில் எழுதும் போது விமர்சனங்கள் கண்டிப்பாக வரும்  என்ற புரிதலோடுதான் எழுதுகிறோம். அது வாசகர்களுக்கான  கருத்துச் சுதந்திரம். இது வலைப்பக்கத்திற்கும் பொருந்தும். என்ன வரும் பின்னூட்டங்கள் கொஞ்சம் வன்மத்தோடோ, வக்கிரத்தோடோ இல்லை அபத்தமாகவோ, இல்லை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இடப்பட்டால் கொஞ்சம் கடுமையாக எதிர் வினை ஆற்ற வேண்டியுள்ளது.

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.மாற்றுக் கருத்தோடு வந்த மூன்று கடிதங்களும் எம்.ஜி.ஆர் பற்றி   நான் எழுதியிருந்ததை சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதப்  பட்டவை. அதற்கும் விளக்கமளிக்க முடியும். ஆனாலும் நான்  எழுதப் போவதில்லை. மிகவும் போரடித்து விட்டது.

ஆனாலும் கூட

சிவகாசியைச் சேர்ந்த  ரெய்கி செ.வேதமூர்த்தி அவர்கள் எழுதிய
கடிதத்தை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

இதோ அந்த கடிதம்.

"பாரத ரத்னா விருது குறித்து எஸ்.ராமன் அநாவசியமாக     எம்.ஜி.ஆரையும்  அவரது  தொண்டர்களையும் வம்புக்கு இழுக்கிறார். இதை அப்போதே கருணாநிதி செய்து எம்.ஜி.ஆர் திருப்பி அனுப்ப,  ' இல்லை. உங்களுக்கு தகுதியின் அடிப்படையில்தான்   தரப்பட்டதாக மத்திய அரசும் விளக்கமும் தந்தது""

நான் எனது கட்டுரையில் எம்.ஜி.ஆருக்கு அவர் இறந்ததற்குப்   பின்பே பாரத ரத்னா அளிக்கப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக  எழுதியிருந்தேன். மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட    பாரத ரத்னா விருதை திருமதி ஜானகி ராமச்சந்திரன் பெற்றுக்  கொள்ள, அதை எம்.ஜி.ஆர் எப்படி திருப்பி அனுப்பினார்? 


மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு எப்படி விளக்கம் அளித்தது?   யார் எங்கே சென்று விளக்கம் அளித்தார்கள்? யார் எம்.ஜி.ஆருக்கு   விளக்கம் அளிக்க சொர்க்கம்/நரகம் சென்றார்கள்? 

இதற்குத்தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியில்  வடிவேலு மிகவும் தெளிவாக, ஆணித்தரமாக சொன்னார்.

" வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே"

 

 

Monday, March 10, 2025

பெருமையில்லை, ஆணவம், திமிர்


 நேற்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றுள்ளது. 

அது தொடர்பாக சங்கிகள் பலரும் பகிர்ந்து கொண்டுள்ளது கீழே உள்ளது. 

கடந்த ஆண்டு இந்தியா நடத்திய உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் இந்தியா வந்தது. அதிலும் முதல் போட்டி மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. குஜராத் சங்கிகள் பாகிஸ்தான் வீரர்களை வெறுப்பேற்ற கீழ்த்தரமாக நடந்து கொண்டதையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது பாகிஸ்தான் நடத்தும் போட்டியில் விளையாட இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுக்கிறது. அதனை கண்டிக்க யாரும் தயாரில்லை, பாகிஸ்தான் உட்பட. பல நாடுகள் பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்து இந்தியாவோடு விளையாடி விட்டு சென்றன.

சேர்த்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை ஆட்டி வைப்பது பல ஆண்டுகளாக நடக்கும் கதை. போதாக்குறைக்கு  கிரிமினல் ஷா மகன் ஜெய்ஷா இப்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.

அதனால் இந்தியா என்ன அராஜகம் செய்தாலும் எல்லா நாடுகளும் அமைதியாகத்தான் இருக்கும்.

இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாமல் இருந்தது என்பது பெருமைக்குரிய விஷயம் இல்லை. ஆணவம், திமிர். அவ்வளவுதான்.

 ஒரிஜினலாக இவர்கள் பீற்றிக் கொண்ட துல்லிய தாக்குதலே ஒரு ஏமாற்று வேலை என்கிற போது, இந்த திமிரை துல்லிய தாக்குதல் என்று வர்ணிப்பது அசிங்கத்தின் உச்சம். 

Thursday, August 29, 2024

செம நக்கல் செல்லம் . . .

 அமித்ஷாவின் மகன் என்பதைத் தாண்டி வேறெந்த தகுதியும் இல்லாத ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராவது என்பதெல்லாம் கேவலம் அன்றி வேறில்லை. அடுத்தவர்களை வாரிசுகள் என்று வசை பாட இனி மோடிக்கு அருகதை கிடையாது. பணத்தை கொட்டிக் கொடுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கைகளில்தான் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் இருக்கிறது. அது இப்போது அதிகாரபூர்வாகியுள்ளது. அவ்வளவுதான். 

அதை திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் செமயாக நக்கலடித்துள்ளார். 




Friday, December 15, 2023

முற்றிய வெறியின் உச்சம்

 


தென் ஆப்பிரிக்கா அரை இறுதி ஆட்டத்தில் தோற்றதும் சங்கிகள் பகிர்ந்து கொண்ட படம் இது.

 


இட ஒதுக்கீட்டின் மூலம் டெம்பா பவுமா தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் பொறுப்பிற்கு வந்த காரணத்தால்தான் தென் ஆப்பிரிக்கா அரை இறுதியில் தோற்றுப் போனது என்று வசை பாடுகிறார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் கூச்சல் அதிகமாகவே உள்ளது. மகன் தொலைக்காட்சியில் ஆட்டத்தை பார்க்கையில் காதில் விழுந்த வர்ணனையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் பவுமாவை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

 தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு உள்ளதா?

 ஆம். இருக்கிறது.

 ஏன்?

 நெல்சன் மாண்டேலா ஜனாதிபதியாகும் வரை தென் ஆப்பிரிக்க நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு  அனைத்து நாடுகளும் தடை விதித்திருந்தது. அவர் பதவிக்கு வந்து வேண்டுகோள் விடுத்த பின்பே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மற்ற நாடுகளுக்கு செல்லத் தொடங்கியது. ஆனால் அந்த அணியின் வீரர்கள் என்னமோ வெள்ளை இனத்தவர்களாக மட்டுமே இருந்தார்களே தவிர கருப்பின மக்கள் ஒதுக்கித்தான் வைக்கப்பட்டனர். அவர்களின் திறமைகள் முடக்கப்பட்டன.

 மக்கள் இயக்கங்களுக்குப் பின்பே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மற்றவர்களும் பங்கேற்க தொடங்கினர். வெள்ளையர் இல்லாதவர்களும் அணியில் இணைக்க்கப்படுவார்கள், போட்டியில் விளையாடும் பதினோரு பேரில் கருப்பின வீரர்கள் இருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி உருவானது.

 இட ஒதுக்கீடு வந்ததன் பின்னணி இதுதான். ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் முன்னேறி மேலே வர செய்யப்பட்ட ஏற்பாடு அது.

 டெம்போ பவுமா அரை இறுதியில் தோற்றுப் போனதுக்காக வசை பாடப்படுகின்றார். அவரை தென் ஆப்பிரிக்காவில் யாரும் வசை பாடுவதாகவோ, கோட்டா என்று இழிவு படுத்தவோ இல்லை. செய்வதெல்லாம் நம்ம ஊரு சங்கிகள்தான்.

 பவுமா கேப்டனாவதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா தான் பங்கேற்ற அனைத்து உலகக் கோப்பைகளையும் வென்று விட்டதா அல்லது இறுதிப் போட்டிக்காவது தகுதியானதா?

 இல்லை. நிச்சயமாக இல்லை.

 அரை இறுதியில் தோற்றுப் போவதை தங்களின் பாரம்பரியமாகவே மாற்றிக் கொண்டுவ்ளது, அப்படி தோற்றுப் போன போட்டிகளை கேப்டனாக வழி நடத்தியவர்கள் எல்லோருமே கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள்தானா?

 இல்லை என்பதை அழுத்தமாக சொல்ல முடியும்.

 ஆக சங்கிகளுக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்  அணியை பவுமா எனும் கருப்பினத்தைச் சேர்ந்தவர் கேப்டனாக வழி நடத்துவது மட்டுமே பிரச்சினை. எந்த திறமையும் இல்லாமலா அவர் தன் அணியை அரை இறுதி வரை கொண்டு வந்தார்! போன வருடம் கோப்பையை வென்ற இங்கிலாந்து மிக மோசமாக ஆடி பட்டியலில் கீழே எங்கேயோ போய் விட்டதே! அதற்கு என்ன காரணம்?

 சங்கிகளின் இன வெறி, ஜாதி வெறி, மத வெறி மற்றும் ஜாதி வெறிதான் காரணம், வேறொன்றுமில்லை. அதை அடுத்த நாட்டுக்காரர்கள் மேலும் காண்பிக்கிறார்கள் என்பது  அவர்களின் நோய் முற்றி விட்டதையே காண்பிக்கிறது.

 பிகு: இது ரொம்பவே பழைய பதிவுதான். பகிரத்தான் தாமதமாகி விட்டது.

Friday, November 24, 2023

பொறாமையா சச்சின்?

 



விராத் கோலி ஐம்பதாவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததற்கு ஒரு வாழ்த்து ட்வீட் ஒன்று போட்டுள்ளார்.

 


அந்த செய்தியில் நெருடல் என்னவென்றால்

 கோலியுடனான தன் முதல் சந்திப்பை விவரித்துள்ளதுதான்.

 “என்னுடைய காலை தொட்டு நீ வணங்கியதைக் கண்டு உன் சகாக்கள் உன்னை கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். நான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன். என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. நீ அன்று கால்களை தொட்டாய், பின்பு இதயத்தை தொட்டாய்”

 உங்கள் கால்களை கோலி தொட்டதெல்லாம் வாழ்த்துச் செய்தியில் ரொம்ப முக்கியமா என்ன?

 “நான் பார்த்து வளர்ந்த பையன், இப்போ என்னை விட பெரிசா போயிட்டான்” என்ற பொறாமையைத் தவிர வேறொன்றுமில்லை.

 இப்படி பொறாமையை இதே போல பொது வெளியில் இன்னொரு பெரியவரும் இரு முறை வெளிப்படுத்தியுள்ளார்.

 அவர் இளையராஜா.

 ஏ.ஆ.ர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றதற்காக நடைபெற்ற விழாவிலும் பிறகு இளையராஜா 75 நிகழ்விலும்.

 எல்லாம் வயதின் கோலம்!

பிகு: கிரிக்கெட்டின் தெய்வத்தை நிந்தித்து விட்டேன் என்று எத்தனை பேர் என்னை கண்டிக்கப் போகிறார்களோ! அது போலவே இளையராஜாவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட இசைக்கடவுள். கொஞ்ச நேரம் தலைமறைவாகச் செல்வது நல்லதென்று நினைக்கிறேன்.

Thursday, November 23, 2023

வடை போச்சா டிமோ?

 


இந்திய கிரிக்கெட் வாரிய அணி வெற்றி பெற்றிருந்தால் கீழே உள்ள படத்தை பரப்பி வைரலாக்க பாஜக ஐ.டி விங் தயாரித்து வைத்திருந்தது எப்படியோ கசிந்து விட்டது.

 


எப்படியெல்லாம் சீன் போட்டிருப்பார்! எல்லாத்தையும் நாசமாக்கிட்டீங்களே படுபாவிகளா! மகிழ்ச்சியா போட்டோ ஷூட் நடத்த வேண்டிய நேரத்தில எழவு விழுந்த மாதிரி முகத்தை வச்சுக்க வச்சுட்டீங்க! இதை விமர்சனம் வேற செய்யறீங்க! விஜயேந்திரர் சால்வையை தமிழிசை கிட்ட தூக்கி வீசின மாதிரி இல்லாம கப்பை கையில கொடுத்ததுக்கு சந்தோஷப்படுங்கடா லகுட பாண்டிகளா!

 பிகு: இது கொஞ்சம் பழசுதான். நேரமின்மை காரணமாகவும் புது புது விஷயங்கள் வந்ததாலும் ட்ராப்டிலேயே இருந்தது. இது மட்டுமல்ல, இன்னும் இரண்டு கிரிக்கெட்  பதிவுகளும் மிக முக்கியமாக மூத்த்த்த்த்தவர் பற்றிய பதிவொன்றும் உள்ளது. அவையும் ஒவ்வொன்றாக வரும்.

 

Wednesday, November 22, 2023

இதே எழவுதானா சங்கிகளா?

 


ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வென்ற போது ஆப்கானிஸ்தான் அணியை தலையில் தூக்கி வைத்து ஆடிய சங்கிகள், அதே ஆப்கானிஸ்தானை தனி நபராக ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் வென்ற போது இந்தியாவின் பெருமை மிகு மருமகன், மைலாப்பூர் மாப்பிள்ளை என்றெல்லாம் கொண்டாடினார்கள்.

அதுவே ஆஸ்திரேலியா, இந்தியாவை வென்ற பின்பு அதே மேக்ஸ்வெல்லின் இந்திய வம்சாவளி மனைவிக்கும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனான ட்ரெவிஸ் ஹெட்டின் மனைவிக்கும் ஆபாச மிரட்டல்களை விடுத்துள்ளனர்.

அவர்களை பாலியல் வன்புணர்ச்சி செய்வோம் என்பதுதான் அந்த செய்திகளின் சாராம்சம்.

சங்கிகளுக்கு எப்போதும் பாலியல் சிந்தனைதான் போல. அவர்கள் மிரட்டல்கள் கூட அதே அடிப்படையில்தான் இருந்துள்ளது.

பெண்ணை வேவு பார்க்கச்சொன்னவரை பிரதமராகவும் வேவு பார்த்தவரை உள்துறை அமைச்சராகவும் கொடுத்த கட்சி ஆட்கள் மட்டும் வேறெப்படி இருப்பார்கள்! 

Monday, November 20, 2023

சங்கிக் கரடிக்கே சந்தேகம்

 


கீழே உள்ள பதிவு சங்கிகளின் குழுவான மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் முக்கியமான மாடரேட்டருடையது.

 


பாஜகவை விமர்சிக்கும் பதிவுகளை ஆதாரம் கிடையாது என்று நிராகரிப்பவர் இவர். அதிகமாக கேள்வி கேட்டால் சஸ்பெண்ட் செய்பவரும் இவர்தான்.

 இவரே இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் வீரர்கள் மீது குற்றம் சுமத்துகிறார். 60,000 கோடி ரூபாய் வரை பெட்டிங் நடந்துள்ளது என்று தினமலர் செய்தியை வைத்து  சொல்கிறார்.



 இதை டிமோ அரசின் அமலாக்கப்பிரிவிற்கு புகாராக அளிக்காமல் ஏன் முகநூலில் பதிவு செய்துள்ளார் என்று தெரியவில்லை.

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியின் சிறப்பான ஆட்டத்தின் மதிப்பை குறைக்கும் எண்ணமா அல்லது டிமோவை நக்கல் செய்வதிலிருந்து திசை திருப்பும் நோக்கமா என்று தெரியவில்லை. ஆனால் இழிவு என்னமோ இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் வீரர்களுக்குத்தான்.

 சங்கி அடித்த சேம் சைட் கோல் இது.

 பிகு: இன்னும் மூன்று கிரிக்கெட் பதிவுகள் இருக்கிறது.