Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Thursday, January 12, 2017

இடையில் யார் இந்த மோடி?




பொங்கல் விடுமுறை பிரச்சினை தீர்ந்து விட்டது. ஒரு வேளை ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குக் கூட தீர்வு வரலாம்.

ஆனால் பணப் பிரச்சினை?

மூடப்பட்ட ஏ.டி.எம் களும் அபூர்வமாய் திறந்து இருக்கும் ஏ.டி.எம் முன்பான நீண்ட வரிசைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ செலவுகள் காத்துக் கிடந்தாலும் அதற்கான பணம், உழைத்துச் சேர்த்த பணம், ஒரு மூடனின் மூர்க்கத்தால் வங்கிக் கணக்கில் உறங்கிக் கொண்டிருக்கிறது. 

பொங்கலைக் கொண்டாட பணம் வேண்டும். அதை கொடுக்கச் சொல்லுங்கள். 

அது மோடியின் அப்பன் வீட்டு சொத்தா? ஒரு வாரத்துக்கு எவ்வளவு எடுக்க வேண்டும் என அவர் நிபந்தனை போட.

என் பொங்கல், என் பணம், என் உரிமை.

இடையில் மோடிக்கென்ன வேலை?  

Sunday, June 21, 2015

சும்மா ஒரு தகவலுக்காக

கீழேயுள்ள படங்களையும் அது பற்றிய செய்திகளையும் ஒரு தகவலுக்காக என்று ஒரு தோழர் வாட்ஸப்பில் அனுப்பி வைத்தார். நானும் ஒரு தகவலுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.





நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்த வேனின் விலை இருபத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு மேலாம். இதற்கான பதிவுக் கட்டணமாக ஒரு கோடியே எண்பத்தி இரண்டு லட்சம் கட்டப்பட்டதாம்.

சகல வசதிகளும் நிரம்பிய இந்த நவீன வேனின் சொந்தக்காரர் யார் என்று தெரியுமல்லவா?

சும்மா ஒரு தகவலுக்காக நானும் சொல்லி வைக்கிறேன்.

வேறு யாருடையதாக இருக்க முடியும்?

ஆம், உங்கள் ஊகம் சரி.

முகேஷ் அம்பானியுடையதுதான்.