Showing posts with label கரூர் நெரிசல் மரணங்கள். Show all posts
Showing posts with label கரூர் நெரிசல் மரணங்கள். Show all posts

Wednesday, April 22, 2026

விஜய் ரசிகர்கள் -திருத்தப்பட வேண்டியவர்கள்

 


கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்.


என்ன?

மிகவும் எரிச்சலாக இருக்கிறதா?

இவர்களையெல்லாம் போட்டு வெளுக்க வேண்டுமென்று கோபம் வருகிறதா?

ஆம்.

எனக்கும் அப்படித்தான் வந்தது.

ஆனால்

அது அவர்களின் குற்றமா?

அவர்களை உரிய முறையில் நெறிப்படுத்தாத அந்த கட்சித் தலைமையின் குற்றம்.

41 உயிர்கள் பறி போவதற்கு தன் சோம்பேறித்தனமும் தேவையின்றி செய்த தாமதமும்தான் காரணம் என்பதைப் பற்றிய குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாத விஜய், ஆணவமும் பொறுக்கித்தனமுமே குணாம்சமாக கொண்ட ஆதவ் அர்ஜுனா, சுயநலமே வடிவான புஸ்ஸி ஆனந்த், இந்த மடம் இல்லையென்றால் அடுத்த மடம் என்று தாவும் வாச்சாத்தி குற்ற பிரபலம் செங்கோட்டையன் இன்னும் பல உதிரித்தலைவர்கள் ஆகியோரைப் பார்த்து வளரும் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்!

விஜய்யின் பொறுப்பற்ற திரைப்பட வசன பாணி பேச்சுக்களைத்தைத்தான் அரசியல் என்று கருதிக் கொள்பவர்களும் அது போலத்தானே இருப்பார்கள்!

இவர்கள் எதிர்பார்ப்பது போல விஜய் நிச்சயமாக பெரிய வெற்றி எல்லாம் பெற்று முதலமைச்சர் எல்லாம் ஆகப் போவதில்லை.

அப்படிப்பட்ட சூழலில் இவர்களின் மன நிலை என்ன ஆகும்? இவர்கள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

தற்குறிகள், பைத்தியங்கள் என்று ஒதுக்கித் தள்ளிப் போவதை விட இவர்களோடு பேசுவதும் உண்மைகளை உணர வைப்பது, சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதுமே முக்கியமான பணியாகும்.

அந்த பணியை செய்யும் தார்மீகத் தகுதி இடதுசாரிகளுக்கு மட்டுமே இருக்கிறது.

அவர்களால் மட்டுமே இது சாத்தியம்.

Thursday, January 29, 2026

எது உமது வாய் எடப்பாடி?


 
கரூர் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த போது தவெக தற்குறிகள் போல செந்தில் பாலாஜி மீது பழி போட்டு, அதையே சட்டப்பேரவையிலும் பேசி, சி.பி.ஐ விசாரணை கேட்டு, ஏதோஒரு கூட்டத்தில் தவெக கொடியை ஒருவர் (அவர் அதிமுக ஆள் என்பது பிறகு தெரிந்த உண்மை) காண்பித்த போது புளகாங்கிதம் அடைந்த எடப்பாடி அவர்கள் இன்று தவெக வை தாக்கியுள்ளார்.



இரண்டில் உமது நிஜ வாய் எது எடப்பாடி அவர்களே?

யாருங்க அது! இரண்டுமே நாற வாய் என்று சொல்வது 😜😜😜😜😜😜😜

Thursday, January 8, 2026

ஜனநாயகன்-சென்சார்-சி.பி.ஐ-நாடகம்???????


 பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று வஜனம் பேசிய விஜய், ஒன்றிய அரசை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. 

பாஜகவின் ஏற்பாடே விஜய் கட்சி என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பது போலத்தான் விஜயின் மௌனம் காண்பித்தது.

கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பாக விஜய்யை டெல்லிக்கு வருமாறு சி.பி,ஐ அழைத்துள்ளது.

விஜயின் கடைசிப் படம் என்று தற்காலிகமாக சொல்லப்படுகிற "ஜனநாயகன்" திரைப்படத்திற்கு  சென்சார் சான்றிதழ் கொடுக்கவில்லை. 

இந்த இரண்டு சம்பவங்களால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னதால் விஜய் பழி வாங்கப்படுகிறார் என்ற தோற்றத்தை இப்போது உருவாக்கப் பார்க்கிறார்கள்.

பாஜக கூட்டணியில் நேரடியாக இணைவதற்கு பதிலாக வேறு வழியில்லாத காரணத்தால் விஜய் கூட்டணியில் இணைந்து விட்டார் என்ற அனுதாபத் தோற்றத்தை உருவாக்க நடத்தப்படுகிற நாடகம் இந்த இரண்டு சம்பவங்கள் என்று நான் கருதுகிறேன்.

ஏனென்றால் பாஜக, அதிமுக, விஜய் என எல்லோருமே எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடியவர்கள்தான். 

Thursday, December 18, 2025

கிறுக்கர்கள் சூழ் தவெக . . .

 


ஒரு குறுகிய காலத்திலேயே விஜய் ரசிகர்கள், தற்குறிகள் என்று பெயர் வாங்கி விட்டார்கள். அப்படி சொல்வதால் அவர்களுக்கு கோபம். ஆனால் அது சரிதான் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கீழே உள்ள காணொளியை பாருங்கள்.



கிறுக்கத்தனமாக ஏதாவது செய்தால் விஜயின் முத்தம் கிடைக்கும் என்று ஈரோட்டுக் கூட்டத்தில் விஜய் காண்பித்துள்ளார்.

இனி வரும் கூட்டங்களில் தவெக தற்குறிகள் என்னவெல்லாம் கிறுக்குத்தனங்கள் செய்வார்களோ!

கரூர் போல நடக்காமல் இருந்தால் சரி. . .

Sunday, November 30, 2025

என்ன ரங்கசாமி அங்கிள் பயமா? - விஜய்???

 


புதுச்சேரியில் விஜய் நடத்த திட்டமிட்டிருந்த சாலைக் காட்சி (ROAD SHOW) க்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்து விட்டது.

கரூர் போல சம்பவம் நடக்கக்கூடாது என்ற அச்சத்தால் அனுமதியை மறுத்துள்ளார்கள்.

அதனால்

விஜய் அடுத்த காணொளியில் "என்ன ரங்கசாமி அங்கிள், என்னைப் பார்த்து பயமா? " என்று கேட்பார் என்று நம்புகிறேன்.

கேட்டாலும் கேட்கலாம்.

ஆனால்

காவல்துறையை கவனிக்கிற புதுவை உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு கோஷ்டியோடு பாஜகவிற்கு தாவி அதிகாரத்தை தொடர்ந்து ருசிக்கும் நமச்சிவாயத்தை கேட்பாரா?

அதெப்படி கேட்பார்?

என்ன இருந்தாலும் பாஜகவின் அங்கம்தானே தவெக!!!!

Thursday, November 27, 2025

விஜய் - செங்கோட்டையன் கொலைகாரக் கூட்டாளிகள்

 


நேற்று ஊடகங்கள் எதிர்பார்த்தபடி இன்று செங்கோட்டையன் தவெக வில் சேர்ந்து விட்டார். 

இது மிகவும் பொருத்தமான கூட்டணிதான்.

பொறுப்பற்ற அணுகுமுறையால் 41 பேர் மரணத்திற்கு காரணமானவர் விஜய்.

வனத்துறை, காவல்துறை யால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளான வாச்சாத்திப் பெண்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளரும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அன்றைய மாநிலப் பொதுச்செயலாளருமான தோழர் பெ.சண்முகத்தை கொலை செய்ய திட்டமிட்டவர் செங்கோட்டையன்.

என்ன சந்தேகமாக இருக்கிறதா?

கீழே உள்ள காணொளியை பாருங்கள்


இப்போது  சொல்லுங்கள்.

இந்த கொலைகாரக் கூட்டணி பொருத்தம்தானே !!!!

பிகு: மேலே உள்ள படம் சிங்கம் 2 படத்தில் இரண்டு போதை மருந்து கடத்தல் கூட்டாளிகள் சந்திக்கையில் எடுக்கப்பட்டது. . .

Wednesday, November 26, 2025

கவுண்டமணி பிடித்த திமிங்கலமும் தவெக ......

 


சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணியின் வலைக்குள் ஏதோ பெரிதாக சிக்கிக் கொள்ளும். அது என்னவென்று தெரியும் முன்பே அது திமிங்கலம் என்றும் பல் பல லட்சம், தோல் ஒரு கோடி, மாமிசம் சில கோடி என்று சக மீனவர்கள் சொல்ல, இவரும் தன் எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யப் போகிறேன் என்றும் அளப்பார். 

கிட்டத்தட்ட கவுண்டமணி போல தவெக ஆட்கள் கனவு கொண்டிருக்கிறார்கள். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக வந்தால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதா இல்லை துணை முதல்வர் பதவி கொடுப்பதா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.



கவுண்டமணியின் வலையில் சிக்கியது என்ன?

அவரின் முறைப்பெண் கோவை சரளாவை காதலிக்கும் செந்தில். 

கடைசியில் கவுண்டமணியின் வலைதான் கிழிந்து போகும்.


Tuesday, November 25, 2025

கோர்ட்டால் அசிங்கப்படுத்தப்பட்ட தவெக நிர்வாகி

 


கரூர் நெரிசல் மரணங்களுக்குப் பிறகு ஓடி ஒளிந்து கொண்ட விஜய் கட்சியின் கொ.ப.செ ஆதவ் அர்ஜூனா, உசுப்பேத்தும்படி ஒரு ட்வீட் போட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அதை பயந்து நடுங்கி நீக்கியது நினைவில் உள்ளதல்லவா?

அந்த ட்வீட்டிற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

என்ன காரணம் தெரியுமா?



எஸ்,வி.சேகர் பல வருட அனுபவம் கொண்ட, மாநிலம் முழுதும் அறியப் பட்ட ஒரு கலைஞர். அவரது பதிவுகள் தாக்கத்தை உருவாக்கும்.

ஆனால் இந்த ஆதவ் அர்ஜூனா அரசியலுக்கு புதியவர். அவர் சொல்வதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. ஆகவே வழக்கெல்லாம் தொடுக்க (வேண்டிய அளவு வொர்த்தில்லாத டம்மி பீஸ்) வேண்டாம் என்று காரணமும் சொல்லி விட்டார். (அடைப்புக்குள் இருந்தது மட்டும் என் வார்த்தைகள்). 

"ஆதவ் அர்ஜூனா ஒரு கத்துக்குட்டி, அந்தாள் பேச்சையெல்லாம் எவனும் மதிக்க மாட்டான்"  என்பதுதான் நீதிபதி சொன்னது.

Monday, November 24, 2025

விஜய் செல்லம் அது என் டயலாக் -பிரகாஷ்ராஜ்

 


நேற்று விஜய் காஞ்சிபுரத்தில் பேசிய வஜனம் அவருடைய பூத எழுத்தாளர் GHOST WRITER , சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசியதை காப்பி அடித்து எழுதிக் கொடுத்தது. சந்தேகமாக இருக்கிறதா? 

கீழே உள்ள காணொளியை பாருங்கள்



அப்பறம் மேலே உள்ள படத்தில் விஜயைத்தான் சொல்லி உள்ளார்கள் என்று தவெக தற்குறிகள் நியூஸ் 7 சேனலிடம் சண்டைக்கு போக வேண்டாம். அது ?நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா" படத்தில் வரும் காட்சி.

41 பேருடைய மரணத்துக்கு காரணமாக இருந்து கொண்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் ஆளுங்கட்சி மீது பழி போடும் தற்குறிகளின் தலைவனுக்கு அது பொருத்தமாக உள்ளதால் நான்தான் எடுத்துப் போட்டேன். 

Thursday, November 20, 2025

பத்திரிக்கையாளர் மன்றமா? பாஜக மன்றமா?

 


சில நாட்கள் முன்பாகத்தான் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தை பாராட்டியிருந்தேன். திரைக்கலைஞர் கௌரி கிஷனிடம் அநாகரீகமான நடந்து கொண்ட யூட்யூபரை கண்டித்தமைக்காக அந்த பாராட்டு. அந்த யூட்யூபரின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது தவறு என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

பத்திரிக்கையாளர் மன்றத்தின் நேற்றைய நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வந்த போது பு.த பத்திரிக்கையாளர் சுப்பையாவிற்கும் யூட்யூபர் கரிகாலனுக்கும் இடையில் நடந்த சர்ச்சை வைரலானது.

அதிலே ஆணவத்துடன் நடந்து கொண்டது புதிய தலைமுறை சுப்பையாதான் என்பதை காணொளி பார்த்த அனைவருக்கும் தெரியும். கரிகாலன் ஆற்றியது எதிர்வினைதான். நான் சென்னை ப்ரஸ் க்ளப் மெம்பர், நீங்கள் மெம்பரா என்று கேட்டது எத்தனை பேருடைய உறக்கத்தை கெடுத்தது என்று தெரியவில்லை.

அந்த சர்ச்சை பாஜக- தவெக விற்கு இடையிலான ரகசிய கூட்டை அம்பலப்படுத்தியது. அதனுடைய விளைவோ என்னமோ இப்போது கரிகாலனை பத்திரிக்கையாளர் மன்றத்திலிருந்து நீக்கியுள்ளார்கள்.


இப்போதைய பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போது முற்போக்காளர்கள் நிறைந்த அவை அது என்று நம்பினேன். 

ஆனால் இப்போதுதான் தெரிகிறது.

புதிய தலைமுறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாஜக மன்றம் என்று . . .

Wednesday, November 5, 2025

ஜாக்கிரதையா இருப்பா விஜய் !!!

 


தம்பி விஜய் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கப்பா! மூணு கட்சி மாறி ஆதவன் அர்ஜூனா வடிவேல் தன்னோட குருநாதனை உசுப்பேத்தி விட்ட மாதிரி உன்னை உசுப்பேத்தி விடறான்.


அதை நம்பி நீ ஓவரா சீன் போடாதே! கரூர் நெரிசல் மரணங்களில் உன்னை மாட்டி விட்ட மாதிரி வேற எதிலாவது மாட்டி விட்றப் போறான்.

குருநாதனுக்கு என்ன ஆச்சுன்னு ஞாபகம் இருக்குல்ல? இல்லாட்டி கீழே இருக்கற படத்தை பார்த்துக்க . . .




Wednesday, October 29, 2025

பூவு போல விழுந்திருப்பாரோ விஜய்?

 


கீழேயுள்ள செய்தியை படியுங்கள்...




அதனை படித்தவுடன் வில்லாதி வில்லன் திரைப்படத்தின் ஒரு காட்சிதான் நினைவுக்கு வந்தது.


விஜய் இப்படியெல்லாம் காலில் விழுந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். வேண்டுமானால் மோடி, அமித்ஷா கால்களில் 


23ம் புலிகேசி போல விழலாம்...

Thursday, October 23, 2025

காக்க வைத்த எம்.ஜி.ஆர்

 


கரூர் நெரிசல் மரணங்கள்   எழுத வைத்த இன்னொரு ஒரு அனுபவப் பதிவு.

எட்டாவது வரை காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்த  நான் ஒன்பதாவது  முதல் பனிரெண்டாவது வரை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பில்  பார்டரில் பாஸ் செய்ததால் என் அக்கா ஆசிரியராக வேலை பார்த்த பள்ளியில் அவரது கண்காணிப்பில் படித்தாலாவது தேறுவேன் என்ற நம்பிக்கையில் அங்கே வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டேன் என்பதுதான் அக்மார்க் உண்மை. 

1978 ல் திருக்காட்டுப்பள்ளி வாசம் தொடங்கியது. ஒன்பதாவது முழுப் பரிட்சை முடிந்து விடுமுறைக்கு காரைக்குடி (என் பெற்றோர் அப்போது அங்கேதான் இருந்தார்கள் ) சென்று பத்தாவது வகுப்பு பள்ளி திறக்கும் நாளில் திருக்காட்டுப்பள்ளி வந்தால் ஊரே பரபரப்பாக இருந்தது. 

ஆம்.

திருக்காட்டுப்பள்ளி, இடைத்தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

ஆம்.

1979 ஜூன் மாதம், தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம் (பின்னாளில் உதிர்ந்த ரோமம் என்று புகழ் பெற்றவர்) தமிழக அமைச்சரானதால் ராஜினாமா செய்ய இடைத்தேர்தல் வந்தது.

1977 பொதுத்தேர்தலில் உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதியில் தோற்றுப் போன திருமதி இந்திரா காந்தி மீண்டும் மக்களவைக்குச் செல்ல தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் போட்டியிடப் போகிறார் என்றுதான் பத்திரிக்கைக்கள் எழுதின. அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து கலைஞர் போட்டியிடுவார் என்றும் எழுதினர். ஆனால் இவை இரண்டுமே நடக்கவில்லை. இந்திரா போட்டியிட அதிமுக ஆதரவு தரக்கூடாது என்று அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மிரட்டியதால்தான் எம்.ஜி.ஆர் பின் வாங்கினார் என்றும் பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் எம்.ஜி.ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தார். 

காங்கிரஸ் சார்பில் சிங்கார வடிவேலு என்பவரும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் (இந்நாள் கல்வி அமைச்சர் அன்பில் மஹேஷ் பொய்யாமொழியின் தாத்தா) போட்டியிட்டனர்.

நான் விடுமுறை முடிந்து திருக்காட்டுப்பள்ளி வரும் முன்பே அந்த சிறு ஊருக்கு மூன்று முக்கியத் தலைவர்கள் வந்து போயிருந்தனர். 

அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அன்றைய முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோருடைய கூட்டங்கள் காவிரியில் ( நதியில் தண்ணீர் இல்லை) நடந்திருந்தது. 

அதற்குப் பிறகு நடந்த கூட்டம் நடிகர் திலகம் சிவாஜி கணெசனின் கூட்டம். அந்த கூட்டம் தினசரி மார்க்கெட்டை ஒட்டிய ஒரு திடலில் நடந்தது. தஞ்சாவூர் தொகுதிக்கு திமுக சம்பந்தமே இல்லாத  திருச்சிக்காரரை நிறுத்தியுள்ளது என்று  அவர் குற்றம் சுமத்தினார். ஒரு வேளை இந்திரா அம்மையார் நின்றிருந்தால் ????

தேர்தல் நாளுக்கு  ஒரு நான்கு நாட்கள் முன்பாக எம்.ஜி.ஆர் திருக்காட்டுப்பள்ளி வரப் போவதாக  காரில் மைக் கட்டி கிராமம் கிராமமாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இரவு எட்டு மணிக்கு அவர் வருவார் என்று சொல்லப்பட்டது. 

எந்த மைதானத்திலோ, காவிரியிலோ எம்.ஜி.ஆர் பேசவில்லை. மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு முனையில் அவர் ஜீப்பில் நின்றபடியே பேசுவார் என்று சொல்லப்பட்டது. ஆறு மணிக்கெல்லாம் அந்த இடம் நிரம்பி வழிந்தது. பக்கத்தில் இருந்த ஒரு பள்ளி நண்பனின் கடையில் பாதுகாப்பாக இடம் பிடித்திருந்தேன்.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. தலைவர் வந்து கொண்டே இருக்கிறார் என்று அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் வருவதாகத் தெரியவில்லை. பதினோரு மணி வாக்கில் அறிவிப்பு வந்தது. வரும் வழியில் ஒவ்வொரு இடத்திலும் தலைவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பேசச் சொல்வதால் தாமதமாகிறது. அதனால் வேறு வழியில்லாமல் இன்றைய கூட்டம் ரத்து செய்யப்படுகிறது, நாளை எட்டு மணிக்கு இதே இடத்தில் மீண்டும் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். மக்களும் அமைதியாகக் கலைந்தனர். 

மறு நாளும் ஆறு ,மணிக்கெல்லாம் மக்கள் குவிந்து விட்டனர். ஆனால் இந்த முறை எட்டரை மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர் வந்து விட்டார். அவர் பேசியதை எல்லாம் எங்கே மக்கள் கேட்டார்கள்! ஒரே ஆரவாரம்தான், பார்த்தாலே பரவசமடைந்த மக்கள் அவரிடம் காண்பித்த பிரியமே தேர்தல் திசை வழியை சொன்னது.

முதல் நாள் வராமல் காக்க வைத்தமைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார் என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. "தலைவா, தலைவா" என்று அப்போது மக்கள் எழுப்பிய ஆரவாரமே அவர் வருத்தமெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் சொல்லாமல் சொன்னார்கள் என்பதன் அர்த்தம். 

41 பேர் இறந்ததற்கு தான் தாமதமாக வந்ததுதான் முக்கியக் காரணம் என்பதை இன்னமும் ஒப்புக் கொள்ளாமல் சதிக் கோட்பாடு எழுதும் விஜய் தன்னை எம்.ஜி.ஆர் என்று நினைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ஓவர்.  

பிகு: அந்த தஞ்சாவூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சிங்காரவடிவேலுதான் வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தது. 


Tuesday, October 21, 2025

ராஜீவ் கூட்ட்டத்தில் சுருண்ட கதை . . .



 விஜயின் கரூர் கூட்டத்தில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த நாள் முதல் எழுத நினைத்த என் சொந்த அனுபவம் இது.

1984 ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராகிறார். தன் தாயின் மரணத்தால் உருவான அனுதாபத்தை அறுவடை செய்ய மக்களவையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கிறார்.

அத்தேர்தலுக்காக நாடெங்கிலும் பிரச்சாரம் செய்கிறார். அப்போது நாங்கள் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இருந்தோம். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான பிரச்சாரத்திற்காக நெய்வேலி வருகிறார். முதல் நாள் மாலையில்தான் ஆட்டோவில் அறிவிப்பு செய்கிறார்கள். 

மதுரையில் படித்துக் கொண்டிருந்தாலும் ஐந்தாவது செமஸ்டர் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தேன். 

ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு புறப்பட்டேன். ராஜீவ் காந்தி மீது பெரிய நாட்டம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அந்த காலகட்டத்தில் பிடித்த தலைவர் ராமகிருஷ்ண ஹெக்டேதான்.  இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் ( நான் பார்த்த போது அவர் பிரதமர் இல்லை) ஆகிய மூன்று பிரதமர்களை பார்த்துள்ளேன். அந்த பட்டியலில் ஒன்று கூடுவதை வைத்து கல்லூரியில் பீற்றிக் கொள்வதுதான் நோக்கம்.

மந்தாரகுப்பம் சுரேஷ்குமார் பேலஸ் தியேட்டர் (பெயர் சரியாக நினைவில் இல்லை, சந்தோஷ்குமார் பேலஸாகக் கூட இருந்திருக்கலாம்)  பக்கத்தில் கூட்டம்  என்று சொன்னார்கள். சைக்கிளில் போனால் அங்கே கூட்டம் நடப்பதற்கான  எந்த சுவடும் இல்லை. இன்னும் கொஞ்ச தூரம் போனால் கூட்டம் நடக்கும் இடம் வரும் என்றார்கள். 

காலை பத்தரை மணி இருக்கும். மிகக் கடுமையான வெய்யில். சைக்கிளை மிதிக்கிறேன், மிதிக்கிறேன், மிதித்துக் கொண்டே இருக்கிறேன். வானில் ஹெலிகாப்டர் செல்லும் சப்தம். சைக்கிளை மிதிக்கும் வேகம் அதிகரிக்கிறது.

கிட்டத்தட்ட ஏழெட்டு கிலோ மீட்டர் சென்ற பின்பு கூட்டம் நடக்கும் இடம் வந்தது. அந்த ஹெலிகாப்டரில் வந்தது ராஜீவ் காந்தி இல்லை. அந்த பொட்டல் மைதானம் சென்றதும் சைக்கிளை நிறுத்தி விட்டு அப்படியே கட்டாந்தரையில் சுருண்டேன். படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. தொண்டை தாகத்தில் வரண்டது. ஆனாலும் எழுந்திருக்க முடியவில்லை. ஒரு பத்து நிமிடங்கள் சோர்வில் படுத்துக் கொண்டே இருந்தேன். 

அதன் பிறகு எழுந்து பார்த்தால் பக்கத்தில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்தது. கைகளில் தண்ணீரை பிடித்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது. நீண்ட நேரம் காக்க வைக்காமல் ராஜீவ் காந்தியும் வந்து விட்டார். அவருடைய பேச்சு அவ்வளவு சுகமில்லை. தமிழாக்கம் செய்த ப.சிதம்பரம் தன் சொந்த சரக்கையும் சேர்த்து சமாளித்தார் என்பது வேறு கதை.

மீண்டும் அதே வெய்யிலில் சைக்கிளை மிதித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.  அப்படியே ஒரு பெஞ்சில் படுத்தேன். மதியம் சாப்பிடக் கூட எழுந்திருக்கவில்லை. மாலையில் உடல் கேஸ் அடுப்பு போல கொதித்தது.  மந்தாரக்குப்பத்தில் உள்ள மருத்துவரிடம் இரண்டு மூன்று நாள் சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர் என்.எல்.சி பொது மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டார். 

அங்கே டைபாய்டு என்று கண்டறிந்து உள் நோயாளியாக சேர்ந்து ஒரு வாரம் இருந்தேன். கடைசி செமஸ்டரில் இப்படியாகி விட்டதே என்று என் அப்பா திட்டினாரே தவிர, எதற்காக ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு போனாய் என்று அவர் திட்டவேயில்லை. இந்திரா காந்தி, எம்,ஜி.ஆர், கலைஞர், மொரார்ஜி தேசாய், சோ ஆகியோருடைய கூட்டங்களுக்கு 1977 ல் அழைத்துச் சென்றவரே அவர்தானே. அரசியலை பின்பற்றத் தொடங்கியது அந்த காலகட்டத்திலிருந்தேதான். 

அதனால்தான் , அந்த நாற்பத்தி எட்டு வருட அனுபவத்திலிருந்து சொல்ல முடிகிறது. த.வெ,க  போன்ற பொறுப்பற்ற கட்சி எதுவுமில்லை. 

Monday, October 13, 2025

நீதி வெல்லும் விஜய் ?????

 


கரூர் நெரிசல் மரண வழக்கை பாஜகவின் பங்காளியான சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் அந்த விசாரணையை குஜராத்தில் குடும்பத்தினர் கண் முன்னே கூட்டு பாலியல் வன் புணர்ச்சிக்கு உள்ளாகி குழந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரையும் கொலையாளிகளால் இழந்த பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்த கருணையாளர் அஜய் ரஸ்தோகி  மேற்பார்வை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை விட எரிச்சலூட்டியது எது தெரியுமா?

"நீதி வெல்லும்" என்று விஜய் சொன்னது.

41 பேர் மரணத்துக்கு காரணமானோம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் மணிப்பூருக்கு போகாத மோடி போல பனையூர் வீட்டில் பதுங்கி இருந்து கொண்டு இப்படி திமிரோடு பேசுவது மிகப் பெரிய எரிச்சலாக உள்ளது.

தம்பி விஜய், உன்னுடைய நிதியோ, அல்லது உன் பங்காளி பாஜகவோ இல்லாமல் நிஜமாகவே நீதி வென்றால் அது உனக்குத்தான் பிரச்சினை. உனக்குத்தான் அசிங்கம்.

இது கூட தெரியாமல் அறிக்கை விடும் நீ, உன் ரசிகர்கள் போலவே நீயும் தற்குறிதான். 

Saturday, October 11, 2025

அப்போ நீ ........ இல்லையா விஜய்?

 


அன்று விஜய் பேசிய வீர வஜனங்கள் இப்போது அவருக்கு எதிராகவே திரும்புவது மிகவும் சுவாரஸ்யம். 

இதோ இந்த காணொளியை பாருங்கள்.


41 பேர் இறந்தபின் ஓடிப்போன விஜய் தான் வீரன், அரசன், தலைவன் என எதுவும் இல்லை, வெறும்  கோழை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்  விஜய். . .

Thursday, October 9, 2025

விஜய், தவெக பாஸா இல்லை லூஸா?

 


41 பேர் மரணங்களுக்கு காரணமான தவெக விஜய் கரூர் போக வேண்டுமாம். அதற்காக அவர் காவல்துறைக்கு சில நிபந்தனைகளை கோரிக்கைகள் என்ற பெயரில் வைத்துள்ளார்.


இதில் ஒன்று கூட சாத்தியமில்லை என்று அவருக்கு தெரியும். இருந்தும் ஏன் இப்படிப்பட்ட நிபந்தனைகளை விதிக்கிறார்?

இந்த ஆணவமிக்க, முட்டாள்தனமான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் விஜய் கரூருக்கு செல்ல அனுமதி மறுக்கப் படும்.

"பார்த்தீர்களா மக்களே இந்த திமுக அரசை, என்னை கரூர் செல்ல விடாமல் அனுமதி மறுத்து விட்டார்கள், என்ன சிஎம் சார் பயந்துட்டீங்களா?"

என்று அடுத்து ஒரு வீடியோ போட்டு முட்டாள் தற்குறிகளை மேலும் உசுப்பேற்றி விடுவீர்கள்.

அதற்குத்தானே இந்த நிபந்தனைகள்?

ஆனால் இது எடுபடாது. உங்களை லூஸ் என்றே மக்கள் கருதுகிறார்கள். 

ஆமாம், யார் உங்களுக்கு வஜனம் எழுதித்தராங்க? திருட்டுக்கதை சர்க்காருக்கு வஜனம் எழுதினவரா? அந்தாள நம்பினா இன்னும் அசிங்கப்படுவீங்க!

Monday, October 6, 2025

கரூர் மரணங்களும் காமராஜரும்

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின்    முகநூல் பக்கத்தில்தான் கீழேயுள்ள காணொளியை பார்த்தேன்.


திரு நெல்லை கண்ணன் அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகி விட்டதால் விஜய் கூட்டத்தின் கொடுமைகளுக்காக பேசியதாக இருக்க வாய்ப்பில்லை. இதை இங்கே சொல்வதற்கான காரணமே விஜய் ரசிகர்களின் அறிவுத்தரம்தான்.

இந்த காணொளியிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. பிரச்சினை என்றால் தொண்டர்களை சிக்க வைத்து விட்டு தலைவர்கள் தப்பிப்பது ஈன்பது அந்தக் காலத்திலும் நடந்துள்ளது. 

Sunday, October 5, 2025

என்ன மிரட்டறியா லச்சூ?

 


கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பாக இலக்கியவாதிகள், செயற்பாட்டாளர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையால் நொந்து போன புளிச்சமாவு ஜெமோ குண்டர் படை தளபதி, அற்ப சங்கி, போதைக்கவி லச்சுமி மணிவண்ணனில் அசிடிட்டி பிரச்சினை தீரவில்லை.

அடுத்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட எல்லோரும் அரை நக்ஸல்கள், தேசத் துரோகிகள் என்றெல்லாம் திட்டி தீர்த்து விட்டு மோடியின் என்.ஐ.ஏ அவர்கள் அனைவர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை செய்துள்ளார்.



இப்படித்தான் எழுத்தாளர் பா.ஜெயபிரகாசம் அவர்களை புமா ஜெமோ அவதூறு செய்த போது அதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்ட போது ஜெமோவும் அப்படித்தான் மிரட்டினார். அவரை யாரெல்லாம் புளிச்ச மாவு என்று எழுதுபவர்களில் மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் நிர்வாகத்திற்கு புகார் செய்து வேலையை காலி செய்யப் போவதாக மிரட்டினார்.

நான் கூட என்னை எங்கள் நிர்வாகம் விளக்கக் கடிதம் கேட்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் எனக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது.

அய்யா லச்சு, உங்க ஆஜானாலாயே ஒன்னும் கிழிக்க முடியலை, நீ எம்மாத்திரம்!!!

பல்டி ஏன் ஆட்டுக்காரா?

 


போன ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் விஜய்க்கு ஆதரவாக பேசி, மோடி "பொறுக்கி" எடுத்த எம்.பி க்கள் குழுவிடம் விஜய் சார்பாக தப்பு தப்பாக தமிழாக்கம் செய்த ஆட்டுக்காரன் நேற்று உதிர்த்த முத்து கீழே . .


ஆட்டுக்காரனை இந்த அளவு நொந்து போக வைத்தது யார்? அப்போ சங்கிகள் எதிர்பார்க்கும் பாஜக-அதிமுக-தவெக கூட்டணி கிடையாதா?

ஏன் இந்த பல்டி ஆட்டுக்காரன்?

தினேஷன் வான்ட்ஸ் டு நோ

(ஆர்ணாப் கோஸ்வாமி ஸ்டைலில் படிக்கவும்}