Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Tuesday, November 11, 2025

நேருவின் பெயர் என்பதால் இடிப்பா மோடி?

 







மேலே உள்ள படங்களை பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த கம்பீரமான விளையாட்டு அரங்கை புதுடெல்லிக்கு சென்று நீங்கள் நேரில் பார்க்க விரும்பினாலும் அதற்கு வாய்ப்பு கிடையாது.

ஏனென்றால் இந்த விளையாட்டு அரங்கம் இடிக்கப்படவுள்ளது.

இதுதான் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம். எண்பதுகளில் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய போது கட்டப்பட்ட அரங்கம்.

அப்படி என்றால் இது பழைய அரங்கமாகத்தானே இருக்கும்! பலவீனமாகி இருக்குமே! இடித்தால் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்.

இந்த அரங்கம் 1982 ல்  கட்டப்பட்டாலும்  அது மீண்டும் 2010 ல் இந்தியா, காமன்வெல்த் போட்டிகளை நடத்திய போது 961 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது. 

அது மட்டுமல்ல 27 செப்டம்பர் 2025 முதல் 5 அக்டோபர் 2025 வரை மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சேம்பியன்ஷிப் போட்டிகள் இதே அரங்கில்தான் நடந்தது. அதற்காக பல வசதிகளை அதிகரிக்க ஐம்பது கோடி ரூபாய் இப்போதுதான் செலவழிக்கப்பட்டுள்ளது.

ஆக இப்போது இந்த ஸ்டேடியத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது?

புதிய விளையாட்டு மையத்தை உருவாக்கப் போவதாக சொல்கிறார்கள்.

அதற்கான திட்டம் தயாராக உள்ளதா?

இல்லைங்க.

எவ்வளவு செலவாகும் என்ற மதிப்பீடு உள்ளதா?

இல்லைங்க.

இப்போது கால்பந்து விளையாடலாம். தட களப் போட்டி நடத்தலாம், குதிரை சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் நடத்தலாம். ஊக்க மருந்து சோதனை மையம் உள்ளது. இந்திய விளையாட்டு முன்னேற்ற ஆணையத்தின் அலுவலகம் உள்ளது. வேறு ஏதாவது புதிய விளையாட்டு இணைக்க வாய்ப்பு உண்டா?

தெரியாதுங்க.

ஸ்டேடியம் இடிக்கப்பட்டால் மேலே சொன்னவை எல்லாம் எங்கே செல்லும்?

தெரியாதுங்க.

அப்பறம் என்னதான்யா தெரியும்?

இந்த ஸ்டேடியம் மோடிக்கு பிடிக்காத நேருவின் பெயரில் உள்ளது.

அதனால்தானா?

ஆமாங்க. அதனால்தான் ஸ்டேடியத்தை இடிக்கறோம்., 

புதுசா கட்டுவீங்களா?

கட்டினாலும் கட்டுவோம். மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மாதிரி கிடப்பில போட்டாலும் போடுவோம். ஆனா?

என்ன ஆனா?

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் பெயரில இனி டெல்லியில் ஸ்டேடியம் கிடையாது.

அப்படியா?

நேருவுக்கு பதிலா மோடி தூக்கி வச்சுக்கற சர்தார் படேல் பெயரில் அகமதாபாத்தில் இருந்த ஸ்டேடியத்தை லைட்டா புதுசாக்கிட்டு படேல் பெயரை தூக்கிட்டு மோடி அவரு பெயரையே வச்சுக்கிட்டவரு. படேலுக்கே இதான் மோடி மரியாதைன்னா, நேருவுக்கு ????????


Saturday, October 7, 2023

சத்தமில்லாமல் நிகழும் சாதனை

 


சீனாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை நூறு பதக்கங்களை வென்றுள்ளது. இனியும் வெல்ல வாய்ப்பு உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இந்தியா வென்றுள்ள அதிகபட்ச பதக்கங்கள் இந்த முறைதான்.

ஹாக்கிப்போட்டியில் ஆடவர் அணி தங்கம் வென்று அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதியாகியுள்ளனர்.

விற்போட்டி, பேட்மிண்டன், பிரிட்ஜ், கபாடி, மல்யுத்தம் என பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியா சீனாவில் நிகழ்த்தி வரும் சாதனைகள் எத்தனை பேருக்கு தெரியும்?

சமூக வலைத்தளங்களில் கூட பெரிய பரபரப்பு இல்லை. அந்த நிசப்தத்தில்  இந்திய விளையாட்டு வீரர்களின் உழைப்பும் முயற்சியும் அமுங்கிப் போய் விட்டது.

நாமாவது இந்திய வீரர்களை மனதார வாழ்த்துவோம்.

பிகு; இந்தியாவின் துயரமான டிமோ, வெற்றி பெற்றவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு ட்விட்டரில் போட அனுமதிக்கக்கூடாது. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை ஒடுக்கி, குற்றவாளிக்கு பாதுகாப்பு கொடுத்த அந்தாளுக்கு அதற்கெல்லாம் தகுதியே கிடையாது. 

Thursday, August 24, 2023

எதிர்காலம் உனக்குத்தான் தம்பி

 


இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தால் என்ன! இத்தனை சிறிய வயதில் இவ்வளவு உயரத்துக்கு வந்ததும், உயரத்தில் இருந்தவரை தடுமாற வைத்ததும் சாதாரணமான விஷயமா என்ன !

எதிர்காலம் உனதுதான் தம்பி. சதுரங்க உலகை ஆளப் போகும் நாளைய வாகையாளன் நீதான். .. 

இந்தியா உன்னால் பெருமையடைகிறது, நாளை இன்னும் அதிகமாய் . . .

வாழ்த்துக்கள் தம்பி பிரஞ்ஞானந்தா. 

Saturday, June 3, 2023

அவர்களும் தேசத் துரோகிகளா சங்கிகளே?

 


இந்நாள் பிரபலங்கள் வாய் மூடி ஒதுங்கி நிற்கையில் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியின் வீரர்கள் கூட்டறிக்கை மூலம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நின்றுள்ளனர்.

கபில்தேவ், கவாஸ்கர், பாஜக முன்னாள் எம்.பி கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

அவர்களின் அறிக்கையில் கடுமையான வாசகங்கள் எதுவும் இல்லை. மென்மையாகவே அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனாலும் இவர்களை தேசத்துரோகிகள் என்று சங்கிகள் வசை பாடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அவ்வளவு சகிப்புத் தன்மை!

Monday, May 29, 2023

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கொடூரம்

 


நேற்று தலைநகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்றம் புது இடத்திற்கு மாறுவதற்கு ஒரு கொண்டாட்டம் நடந்தது.

 

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் எப்படி பாபர் மசூதி இடிப்பதற்கான நாளாக குறிக்கப்பட்டதோ, என்ரான், யூனிட் ட்ரஸ்ட், பால்கோ போன்ற நுணுக்கமான ஊழல்களைச் செய்த வாஜ்பாயின் பிறந்த நாளை சிறந்த நிர்வாக நாளாக கொண்டாட வேண்டுமென்று கிறிஸ்துமஸ் நாள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதோ,   எப்படி  அண்ணல் காந்தியின் பிறந்த நாள் அவரது மத நல்லிணக்கம், நேர்மை, தீண்டாமை எதிர்ப்பு, கிராமப்புற முன்னேற்றம், இறையாண்மை போன்ற அம்சங்களை இருட்டடிப்பு செய்து துடைப்பம் தூக்கும் நாளாக அறிவிக்கப்பட்டதோ, அது போல இந்த திறப்பு விழாவுக்கான நாளும் காவிக்கயவர்களால் தேர்ந்தெடுக்கப்ப்பட்டது.                                                                                                                    

 

அந்தமான் சிறையிலிருந்து விடுதலையாக தொடர்ந்து மன்னிப்பு கடிதங்கள் எழுதி, இங்கிலாந்து அரசுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதிமொழி கொடுத்து அவர்களிடமிருந்து ஓவ்வொரு மாதமும் ஓய்வூதியமும் வாங்கிக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஒரு தேசத்துரோகியும் மகாத்மா காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டிக் கொடுத்து துப்பாக்கியும் கொடுத்தனுப்பிய பயங்கரவாதியும்  இந்தியாவை இரண்டு நாடுகளாக மத அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த மத வெறியனும் தனக்குத்தானே வீரன் என்று செல்ஃபியாக பட்டம் கொடுத்துக் கொண்டவனுமான சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த விழா நடைபெற்றதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

 

நாடாளுமன்ற திறப்பு விழாவும் வழக்கமான காமெடிக் கூத்துக்களோடு நடந்து முடிந்தது. டிமோவுக்கு போட்டி என்று சொல்லக் கூடிய விதத்தில் விதம்விதமான தலை அலங்காரங்களுடைய சாமியார்கள் காலில் விழுந்து ஆசி வாங்கினாலும் ஹோமம் வளர்த்தவர்களிடமிருந்து அந்த சாமியார்களை தள்ளி வைத்ததில் இளித்தது மனு தர்மம்.

 


இந்த கூத்து நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் அயோக்கியன் ஒருவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளின் வீரம் செறிந்த போராட்டம் கொடூரமாக நசுக்கப் பட்டது.

 

ஒலிம்பிக்கிலும் மற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்கள் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்த போது அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு பீற்றிக் கொள்பவர் டிமோ. ஏதோ தானே அவர்களுக்கு நேரடியாக பயிற்சி கொடுத்தது போல பில்ட் அப் செய்து ட்வீட்டுவார் அவர் பெண் குழந்தைகளுக்கு தானே சிறந்த காவலர் என்றும் கூசாமல் அளப்பார். “பேட்டி பச்சாவ்” என்று விளம்பரப் பதாகைகள் அவர் முகம் தாங்கி எங்கெங்கும் காணப்படும்.

 


பாலியல் சீண்டல் செய்த மல்யுத்த ஃபெடரேஷனின் தலைவரும் பாஜக எம்.பி யுமான பிரிஜ் பூஷண் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாதக் கணக்கில் மல்யுத்த் வீராங்கனைகளும் வீரர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். போஸ்கோ சட்டத்தின் படி அவன் மீது வழக்கு பதியப் படுகிறது. போஸ்கோ சட்டத்தின் படி வழக்கு பதியப்பட்டால் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், இழப்பீடு அளிக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்டவனுக்கு பிணையும் கிடையாது.

 

ஆனால் இங்கே அந்த எம்.பி கைதும் செய்யப்படவில்லை. மல்யுத்த ஃபெடரேஷனின் தலைவராகவும் தொடர்கிறான். எம்.பி யாகவும் நீடிக்கிறான். பாஜக எம்.பி என்ற என்ன அயோக்கியதனமும் செய்யலாமா? இவனை ஏன் அமித் ஷா வும் டிமோவும் பாதுகாக்கிறார்கள்? இவர்களுக்கு இவன் ஏதாவது தரகு வேலை பார்த்தானா என்று சந்தேகம் வருகிறதே!

 

நாடாளுமன்றம் திறப்பு விழா கண்ட நேரம் தங்களுக்கு நீதி கேட்டு வந்தவர்கள் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி ஏவல் துறை அவர்களை மடக்கியது. முன்னேற விடாமல் முடக்கியது. வன்முறையை பயன்படுத்தியது. விளையாட்டில் தங்களை இறுக்கி தடுப்பவர்களை தட்டி விட்டு முன்னேறுபவர்கள் நிஜத்தில் முரண்டு பிடிக்கவில்லை. கைதானார்கள். சீட்டுக்கட்டு கோபுரத்தை தகர்ப்பது போல போராட்டக் களம் அகற்றப்பட்டது.

 




தங்கப்பதக்கம் வென்று பெருமை தேடித்தந்தவர்களை கிரிமினல்களை விட மோசமாக நடத்தியது டிமோவின் செங்கோல்.

 

பாரதீய ஜல்சா கட்சி எனும் பெருமையை தக்க வைத்ததுதான் அரண்மனை திறப்பு விழாவின் சிறப்பம்சம்.

 

அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை.

 

கைதாகி இறுக்கமான முகத்தோடு ஏவல்துறை வேனில் சென்றவர்களின் முகத்தில் போட்டோஷாப் புன்னகை வரைந்து இழிவு படுத்தியது பாஜக. முட்டாள்தனத்தை மட்டுமே மூளையில் கொண்டுள்ள காவிக்கயவர்கள் அந்த போட்டோஷாப் படத்தை பரப்பி தங்கள் அறிவீனத்தை பறைசாற்றிக் கொண்டார்கள்.

 


அவசர நிலைக்காலத்தில் கைதான போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னதையே சொல்ல வேண்டியுள்ளது.

 

“விநாச காலே விபரீத புத்தி”

 

அழிவுக்காலத்தில் அறிவு விபரீதமாகத்தான் செயல்படும்.

 

 

Thursday, December 15, 2022

அவர் கலகக்காரரும் கூட

 முகநூலில் பார்த்த ஒரு முக்கியமான பதிவு. பெரும்பாலானவர்கள் ஒரிஜினலாக எழுதியவரின் பெயரை தவிர்த்து தாங்களே எழுதியதாக காண்பித்துக் கொண்டிருந்தார்கள் என்பது வேறு விஷயம்.

 மு.சித்திக் என்ற அந்த ஒரிஜினல் பதிவருக்கு நன்றி சொல்லி பகிர்கிறேன்.

 


பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர். 

 

எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.

 

உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார். அதாவது ஃபோர்மேன் நாக்அவுட் ஆகி நிலைதடுமாறி கீழே விழுகின்ற நேரத்தில் அலி முழு வேகத்தில் கையை ஓங்கி குத்த செல்வார், ஒரு விநாடி சுதாரித்து ஃபோர்மேனின் நிலை கண்டு ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி விடுவார். அதை தான் ஃபோர்மேன் சிலாகித்து கூறுவார்.

 

இப்படியாகபட்ட அலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் எதிராளியை அவரின் நிலைக்கும் மீறி கடுமையாக தண்டித்தார். நினைத்தால் நாக்அவுட் செய்து போட்டியை முடித்திருக்க முடியும், ஆனால் அலி அதை செய்யவில்லை, என முகம் சுழித்தவாரே பத்திரிக்கைகள் எழுதின.

 

போட்டிக்கு முன் நடத்தபடும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே "உன்னை நான் கடுமையாக தண்டிப்பேன்" என்ற சூளுரைத்தார். 

 

ஏன் அப்படி செய்தார் ?

 

ஒரே ஒரு காரணம் மட்டும் தான். Terell, அலியை "முஹம்மது அலி" என்று தற்போதைய பெயரை சொல்லி அழைக்காமல் அவருடைய பழைய பெயரான Cassius clay என்று அழைத்தார். பல தடவை அலி தன்னுடைய தற்போதைய பெயரை கூறுமாறு வற்புறுத்தியும் Terrell மறுத்துவிடுவார். அது மட்டும் தான் காரணம்.

 

போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஒவ்வொரு அடியின்போதும் "say my name", "What is my name" என்று ஆக்ரோசமாக தான் சண்டையிட்டார். அந்த சண்டையே "whats my name fight” என்றே அடையாளப்பட்டு போனது.

 

அப்படி என்ன பழைய பெயரின் மீது அலிக்கு இவ்வளவு கோபம் ? 

 

அந்த காலக்கட்டத்தில் ஒரு வழக்கம் கடைபிடிக்கபட்டு வந்தது. கருப்பினத்தவர்கள் பண்ணை அடிமையாக பயன்படுத்தபட்டு வந்தனர், அப்படி எஜமானர்களுக்கு விசுவாசமான அடிமையாக வாழ்ந்த கருப்பர்களை விருப்பத்தின் பெயரில் விடுதலை செய்வார்கள் முதலாளி வெள்ளையர்கள்.

 

அப்படியாக விடுதலை பெற்ற கருப்பர்கள் தன் பெயருக்கு பின்னால் அந்த வெள்ளை எஜமானரின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த பெயரே அவரது சந்ததியினருக்கு குடும்ப பெயராகவும் தொடரும். அப்படி விடுதலை பெற்ற குடும்பம் தான் அலியின் குடும்பமும், விடுதலையளித்த எஜமான வெள்ளையரின் பெயர் தான் "Clay". 

 

அந்த பெயரை அடிமை சின்னத்தின் அடையாளமாக பார்த்தார் அலி. உண்மையில் அது அடிமைச்சின்னம் தான். அதனாலயே தன்னுடைய பெயரை முதலில் Cassius X என்று மாற்றினார். இது Malcom X உடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பால் மாற்றிய பெயர். பின்னர் இஸ்லாமிய மதம் மாறிய பின் தன் பெயரை முஹம்மது அலி என்று மாற்றிக்கொண்டார்.

 

இந்த பெயரை கூற மறுத்து, அடிமை பெயரை கூறிய Terrell ஐ தான் அலி தண்டித்தார். வெறும் பெயருக்கு கூட அலி அத்தனை போராட வேண்டியிருந்தது. 

 

வெள்ளையர்களுக்கு எதிராக செயல்படுவதாக அவரை கைது செய்ய FBI திட்டம் தீட்டியது, அவரை பல நாட்களாக கண்காணித்தும் வந்தது. இத்தனையும் தனி ஆளாக எதிர்கொண்டார். அலி அடிமைத்தனங்களை உடைத்தெறிந்தவர். அவர் ஒரு கலகக்காரன், புரட்சியாளன்.. 

 

Ali is not just a sportsperson, he is a rebellion...

 

பதிவர் - மு.சித்திக்