Saturday, August 22, 2020

கூட்டத்தை விட்டா? இந்தியாவை விட்டா?


 

ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பாக மூன்று நாள் இணைய வழி பயிற்சி முகாம் ஒன்று இந்திய அளவில் நடைபெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து 37 அரசு சித்த மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பயிற்சி வகுப்பு பெரும்பாலும் இந்தியில்தான் நடந்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல வேறு சில மாநிலங்களின் பங்கேற்பாளர்களும் கூட ஆங்கிலத்தில் பேசுமாறு சொல்லியுள்ளனர். 

ஆனால் அந்த கோரிக்கை கண்டுகொள்ளப்படவேயில்லை. நேற்று இறுதி நாள் நிகழ்ச்சி. வைத்ய ராஜேஷ் கோச்சா என்ற ஆயுஷ் துறை செயலாளர் தன் பேச்சைத் தொடங்கும் முன்பே "நான் இந்தியில்தான் பேசுவேன். விருப்பமில்லாதவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டினர் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள்" என்று சொல்லியுள்ளான்.

இவ்வளவு ஆணவம் ஒரு அதிகாரிக்கு எங்கிருந்து வருகிறது?

ஆட்சியாளர்கள் எப்படியோ அதிகாரிகளும் அப்படியே!

கூட்டத்தை விட்டு வெளியேறு என்று தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்து சொல்லும் தைரியம் இருக்கிற அதிகாரிக்கும், அந்த தைரியத்தை அளிக்கிற ஆட்சியாளர்களும் நாளை "தமிழ்நாட்டை இந்தியாவை விட்டு வெளியேறு" என்று சொல்லவும் தயங்க மாட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால் காவிக் கொள்கைகளுக்கு கல்லறை அமைக்கும் மாநிலமாக திகழும் தமிழகத்தை கழட்டி விடுவதுதான் அவர்களின் உள் மனது ஆசையாகக் கூட இருக்கும்.

பிரிவினைவாதிகள் என்று காவிக் கயவர்கள் அனைவரையும் வசை பாடுவார்கள். வைத்ய ராஜேஷ் கோச்சா வும் அவனது குருமார்களும்தான் பிரிவினை எண்ணத்தையே விதைக்கிறார்கள். 

No comments:

Post a Comment