பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்!
இது நாள் வரை அவர்கள் வழிபடாத கடவுள் முருகன். “தமிழ்க்கடவுள் முருகன்” என்று அழைக்கப்பட்டதாலும் வள்ளியை ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாலும் அவர்களால் இத்தனை நாள் ஒதுக்கி வைக்கப்பட்டவர் அவர்.
தமிழ்நாட்டில் காலூன்ற ராமரோ ஐய்யப்பரோ உதவ மாட்டார் என்று திடீரென யாரோ ஒரு அறிவாளி கண்டு பிடித்து சொன்னதால்
முருகருக்கு பூஜை செய்ய வேண்டும், கந்த சஷ்டி கவசம் சொல்ல வேண்டுமென்றால் எங்கே போவார்கள் அவர்கள்?
இத்தனை நாள் அவர்கள் வீட்டில் இல்லாத முருகன் படம் எப்படி உடனே கிடைக்கும்!
பூஜை செய்வது நோக்கம் என்றால் பரவாயில்லை. போட்டோ எடுத்தால் போதும் என்கிற போது எதற்கு தண்டச் செலவு செய்ய வேண்டும்!
ப்ளெக்ஸில் முருகர் படம், ஒட்டடை அடிக்கவோ அல்லது தரை துடைக்கவோ பயன்படுத்தும் குச்சியில் வேல்.
பூஜையறையில்
முருகனை அனுமதிக்கக்கூடாது என்ற உறுதியோடு
சமையலறையிலும்
கட்சி
சின்னம் மட்டுமே பதிக்கப்பட்ட அறையிலும்
எப்படி அண்ணல் அம்பேத்கரின் படத்தை வீட்டிற்கு வெளியே ஷூ ஸ்டாண்டில் வைத்து மாலை போட்டார்களோ, அது போலவே முருகனையும் வீட்டிற்கு வெளியே வைத்து
தன்னையே
முருகனாகக் கருதி கழுத்தில் மாலை போட்டுக் கொண்டாலும் மைனர் போலவே காட்சியளிக்கிற
வீட்டிற்குள்ளே இடமில்லாமல் ரோட்டில் நிற்க வைத்த, அவசரத்து அட்டை வேலில் ஒட்டப்பட்ட ஜிகினாத்தாள் புடைத்துக் கொண்டு நிற்க.
அத்தனை
கடவுள் படங்கள் இருந்தும் முருகன் படம் இல்லாமல் அட்டையில் செய்த வேல் கொண்டு வழிபட
எந்த
கந்த சஷ்டி கவசத்தைக் கொண்டு பிரச்சினை செய்தார்களோ, அதை உண்மையான முருக பக்தர்கள்
போல மனப்பாடமாய் சொல்லத் தெரியாமல் காகிதத்தில் எழுதி படுத்திக் கொண்டு
உன்னை வணங்குவது என்ற பெயரில் இப்படி காமெடி செய்கிறார்களே, இதை நீ தட்டிக் கேட்க மாட்டாயா? இந்த பாவிகளின் கண்களை உன் வேல் தாக்காதா?
பக்தி பகல் வேஷமாகக் கூடாது என்ற கலைஞரின் வசனம் இவர்களுக்கு கச்சிதமாக பொருந்துவதை உண்மையான பக்தர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
பிகு: கந்தனுக்கு அரோகரா சொன்னவரை நேற்று காணவில்லையே! மருத்துவக் காரணங்களுக்காக முறைப்படி ஈ.பாஸ் வாங்கி பண்ணை வீட்டிற்கு போய் விட்டாரோ?
எப்படி எல்லாம் நடிக்கின்றார்கள்...
ReplyDeletesanghigalukku enna murugan maela thideer paasam?
ReplyDelete