Showing posts with label காஷ்மீர். Show all posts
Showing posts with label காஷ்மீர். Show all posts

Monday, January 12, 2026

அருவி மட்டும் உறையவில்லை . . .

 






மேலே உள்ள படங்கள் எல்லாம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ட்ராங் என்ற நீர் வீழ்ச்சி. அதீத குளிரில் அருவி அப்படியே உறைந்து போய் விட்டது. பனிக்கட்டியாய் காட்சி அளிக்கும் அருவியைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்களாம். இதுதான் செய்திகளில் சொல்லப்பட்டது.

சொல்லப்படாதது ஒன்று.

காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற சிந்தனை எழாத வண்ணம் ஆட்சியாளர்களின் மூளை வெறுப்பால் உறைந்து போய் இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற வாக்குறுதி நினைவுக்கு வராத வண்னம் மத்தியரசு முற்றிலுமாக வன்மத்தால் உறைந்து போயுள்ளது.

காஷ்மீரின் அழகு கண்ணுக்குத் தெரிவது போல அதன் கண்ணீர் கண்ணுக்கு தெரியாதது பெருந்துயரம் . . .

Saturday, December 6, 2025

அதிகாலை அழகே

 


இன்றைய "ஆங்கில இந்து" நாளிதழில்  முதல் பக்கத்தில் வெளியான படம்தான் மே#லே உள்ளது.

காஷ்மீர் தால் ஏரியின் அழகான காட்சி.

காஷ்மீர் எழில் மிகுந்த அழகான இடம்.

அமைதியான இடமா?

மோடி ஆட்சி அதை  அமைதியாய் இருக்க அனுமதிக்காது என்பது சோகமான உண்மை. 

Wednesday, September 24, 2025

எப்படி இருந்த லடாக்கை இப்படி???

 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான லடாக்கை மோடி அரசு ஜம்மு காஷ்மீரிலிருந்து துண்டித்து தனியான யூனியன் பிரதேசமாக அறிவித்தது. 

லடாக், லே  பகுதியின் அழகை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.


இப்படி அழகு கொஞ்சும் இடத்தின் இன்றைய நிலை என்ன?


இங்கே எரிந்து கொண்டு இருப்பது லே நகரில் உள்ள பாஜக அலுவலகம்.

காரணம் என்ன?

தனி யூனியன் பிரதேசம் ஆனதால் லே, லடாக் பகுதியில் தேனும் பாலும் கரை புரண்டோடும் என்றொரு ஜூம்லா வாக்குறுதியை மோடி அளித்தார். 

வழக்கம் போல எதுவும் நடக்கவில்லை. புதுவை போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளதைப் போல சட்டப்பேரவையும் கிடையாது. அதனால் பிரச்சினைகளை பேச எம்.எல்.ஏ க்களும் கிடையாது. 

அதனால் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று போராட்டம் நடந்தது. 

3 இடியட்ஸ் படத்தில் ஷாருக்கான், நண்பன் படத்தில் விஜய் தோன்றிய கொஸாக்ஸி பசப்புகழ் பாத்திரத்தின் ஒரிஜினலான சோனம் வாங்க்சுக் என்பவர் இந்த போராட்டத்தின் மையப்புள்ளி.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த பயனும் இல்லை. அவ்வளவு சீக்கிரம் மோடி விட்டுக் கொடுத்திடுமா என்ன! அதிலும் 2024 மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற பாஜக வேட்பாளருக்கோ மூன்றாவது இடம்தான் கிடைத்தது.

ஜம்மு காஷ்மீருக்கே இன்னும் மாநில அந்தஸ்து தராத மோடி அரசு லடாக்கிற்கு அவ்வளவு சுலபமாக கொடுத்திடுமா என்பது சந்தேகமே.

பாஜக அரசின் அணுகுமுறை கலவரமாக வெடித்து நால்வர் இறந்து போக மக்களின் கோபம் பாஜக அலுவலகத்தின் மீது நெருப்பாக வெடித்துள்ளது. 

உரைய வைக்கும் குளிர்ப் பிரதேசத்தை பற்றி எரிய வைத்ததுதான் மோடியின் சாதனை.

Tuesday, July 15, 2025

முதல்வருக்கே இப்படியென்றால் ???

 


காஷ்மீரின் முதல்வர் ஓமர் அப்துல்லா. காஷ்மீரில் மன்னராட்சி நடைபெற்ற போது போராடிய மக்கள் மீது அரசு நடத்திய தாக்குதலில் இறந்து போனவர்கள் தியாகிகளாக கிட்டத்தட்ட 94 ஆண்டுகளாக மதிக்கப் பட்டு அவர்கள் நினைவு நாளன்று அவர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.

அப்படி அஞ்சலி செலுத்த ஓமர் அப்துல்லா நேற்று அந்த கல்லறைத் தோட்டத்திற்கு சென்ற போது கதவுகள் அடைக்கப்பட்டு அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அவர் சுவரேறி குதித்து உள்ளே சென்றுள்ளார்.

ஒரு முதலமைச்சர் மீதே துணை நிலை ஆளுனரும் காவல்துறையும் இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமென்றால் காஷ்மீர் மக்களின் நிலை என்ன?

காஷ்மீர் தேர்தலில் அடி வாங்கிய பின்பும் மோடி வகையறா, சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது. காஷ்மீருக்கு நடப்பது நாளை நமக்கு வராதா என்ன?

சிந்திப்பீர், காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுப்பீர் . . .

Thursday, May 1, 2025

சங்கிகள் சினிமாவுக்கு கதை எழுதலாம்

 சங்கிகளால் மட்டுமே இப்படிப்பட்ட கதைகளை உருவாக்க முடியும். இந்த கதையை ஒரிஜினலாக எழுதிய ஆள் திரைப்படத்துறைக்கு சென்றால் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

 இந்த கதையை எங்கே படித்தேன் என்று நீங்கள் சுலபமாக ஊகித்து விடுவீர்கள். ஆமாம். மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்தான்.

 மத வெறியேற்றுவதற்காகவே  பொய்ப்பிரச்சாரங்களோடும் சிகண்டிகளோடும் செயல்படும் குழு அது.

 


சம்பவம் நடந்த அன்று பஹல்காம் சுற்றுலாவிற்கு சென்று வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஏக்தா திரிவேதி என்ற பெண்மணி கொடுத்த வாக்குமூலம் மிகவும் முக்கியமான ஆதாரமாக உள்ளது.

 தாக்குதல் நடந்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பஹல்காம் சென்ற அவரும் & அவரது குடும்பத்தினரும், குதிரை ஓட்டிகளின் சந்தேகத்திற்கிடமாக நடத்தைகளால் mini Switzerland அருகில் வந்தும் உள்ளே செல்லாமல் திரும்பியிருக்கின்றனர்.

 அவரது குதிரையோட்டி, நல்ல ஆங்கிலத்தில் இவரோடு பேசிக் கொண்டே வந்ததில், இவருக்கு சந்தேகம் தோன்றுகிறது. அதற்கு அந்த ஆள், தான் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்ததாகவும், பின் அந்த வேலையை விட்டு ponywala வந்ததாக சொல்கிறான். பணம் எத்தனை கிடைத்தாலும், எந்த ஒரு மனிதனும் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு கழுதை மேய்க்க வர மாட்டான்

 மேலும், மிகச் சிறியதான satellite ஃபோன் ஒன்றை வைத்துள்ளான். அதில் அழைப்பு வரவே, குதிரையை ஓரிடத்தில் நிற்க வைத்து விட்டு, சற்று தள்ளி சென்று பேசி விட்டு திரும்பியிருக்கிறான். உருதுவில் பேசியதில் , சில முக்கிய விஷயங்கள் , இந்த பெண்மணியின் காதில் விழுந்திருக்கின்றன. அதில் முக்கியமானது 35 துப்பாக்கிகளை இன்று மேலே கொண்டு சென்று பதுக்கியிருக்கிறோம் என

 இதையெல்லாம், கேட்டு அந்த பெண்மணி mini Switzerland செல்ல சந்தேகப்பட்டு, தன் குழுவினரை அழைத்து திரும்ப சொல்லியிருக்கிறார். அவர்கள் 'இத்தனை தூரம் வந்து விட்டோம், photos எடுத்துக்கொண்டு உடனே திரும்பி விடலாம்' என சொன்னதற்கெல்லாம் ஒத்து கொள்ளாமல் 'உடல் நிலை சரியில்லை, அவசரம்' என சொல்லி, எதற்கும் எங்கும் நிற்காமல் திரும்பியிருக்கிறார்கள். அதற்குள் இன்னோரு ponywala அந்த பெண்மணியிடம் ' yahan rahna teen nahi mam. Sheegra vapaz chale jaayiye ' (இங்கிருப்பது பாதுகாப்பு அல்ல, சீக்கிரம் இங்கிருந்து சென்று விடுங்கள்' என்றிருக்கிறான். அவர்களோடு இரண்டு மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறி, போலீஸூக்கு அழைத்து தகவல் சொல்லியிருக்கின்றனர்.

 இதேபோன்று பல சுற்றுலாப் பயணிகள் சம்பவத்தன்று போலீஸ் அவசர எண்ணில் அழைத்துள்ளனர் ஆனால் எதிர்ப்பக்கம் "அப்படியா ஓகே" என்று சாதாரண பதில் மட்டுமே வந்ததுள்ளது. ஆனால், அந்த புள்ளிகளை இணைக்க போலீஸார் தவறியது ஏன்.!!?

 

 பிகு: ஏக்தா திவாரி என்றொரு உ.பி யைச் சேர்ந்த தொலைக்காட்சி விளம்பர மாடல் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பஹல்காம் போனதாகவும்  அந்த தீவிரவாதிகளை பார்த்ததாகவும் சொல்லியுள்ளார். அவரது அறிக்கையே பல முரண்பாடுகளும்  சந்தேகங்களும் நிறைந்துள்ளதாக தெரிகிறது. அதை பட்டி டிங்கரிங் பார்த்து மாநிலம், பெயர் எல்லாம் மாற்றி கதை சொல்லி விட்டார் மத்யமர் சங்கி. 

 

 

 

 

Monday, April 28, 2025

போர், போர் என பொங்கும் சங்கிகளெல்லாம் . . .

 


கீழேயுள்ள பதிவுகள் எல்லாம் சங்கிகளுடையது. போர், போர் என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே ஆருத்ரா திருடன் அமர் பிரசாத் ரெட்டியும் அதில் அடக்கம். இந்த பதிவுகளை முதலில் படியுங்கள்.







மேலே உள்ள படம் போல இந்த போர் வெறி சங்கிகள் எல்லாம், அவர்களை இந்திய ராணுவம் அழைத்தால் சமையலறை மேடைக்கடியில் ஒளிந்து கொண்டு விடுவார்கள் என்பது நிச்சயம்.

56 இஞ்சர் போரெல்லாம் தொடுக்க மாட்டார் என்ற தைரியத்தில் சொல்லப் படும் வெட்டி வார்த்தைகள் அவை

Saturday, April 26, 2025

எல்.ஐ.சி யால் மட்டுமே முடியும்

 



பஹல்காம் தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் இருந்தால் அவர்களின் பட்டுவாடா கேட்புரிமங்கள் உடனடியாக செய்யப் படும் என்றும் அதற்காக சில சிறப்பு தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் எல்.ஐ.சி அறிவித்துள்ளது. அரசின் பட்டியலில் பெயர் இருந்தால் போது இறப்புச் சான்றிதழ் கூட  அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24.04.2025 அன்றே நெல்லூர் கோட்டம் ஒரு கேட்புரிமத்தை பட்டுவாடா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இது போல துயரில் தவிப்பவருக்கு வேகமாக எந்த ஒரு தனியார் நிறுவனமும் சேவை செய்யாது என்றும் பொதுத்துறை எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம் என்று எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

இது புதிதல்ல.

சுனாமி தாக்கிய போது கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் 24 மணி நேர சேவை செய்தோம்.

காட்பாடி தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் இறந்த போது வேலூர் மையத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் 24 மணி நேர உதவி மையம் செயல்பட்டது.

இது எல்.ஐ.சி யின் பாரம்பரியம்.

சுனாமி சமயத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அவ்வளவாக இந்தியாவில் கால் பதிக்கவில்லை (இப்போதும் கூட அவர்களால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை). ஆனால் சுனாமி தாக்கிய வேறு சில நாடுகளில் அங்கே இருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , "சுனாமி என்பது கடவுளின் செயல். அதனால் பாலிசி பணத்தை தர முடியாது" என்று மறுத்து விட்டன. பாலிசிதாரர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

மும்பை தாக்குதலின் போது வீர மரணம் அடைந்திட்ட காவல்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரேவின் இறப்புக் கேட்புரிமத்தை எல்.ஐ.சி மறுநாளே வழங்கியது. அவர் இன்னொரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கார்கரே மீட்பு நடவடிக்கைக்குச் சென்றார் என்று சொல்லி பணம் கொடுக்க மறுத்து விட்டது.

இப்படிப்பட்ட தனியார் கம்பெனிகள் கொழிக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசு எல்.ஐ.சி யின் செயல்பாடுகளை, வணிகத்தை சீர்குலைக்க சில சதிகளை செய்து கொண்டிருக்கிறது.

அதை எந்நாளும் நாங்கள் அனுமதியோம்.


Thursday, April 24, 2025

கல்லறை கட்டப்படும் முன்பே பிரச்சாரமா மோடி?

 


காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கு இன்றுதான் நடந்திருக்கும். 

எந்த குடும்பங்களில் கல்லறையோ நினைவுச் சின்னமோ அமைக்கும் வழக்கம் இருந்தால் அவர்கள் அதைப் பற்றி  இன்னும் நினைத்திருக்கக் கூட மாட்டார்கள்.

காலையில் எழுதிய பதிவின் படி "பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன் பலனை பாஜக அறுவடை செய்யும்" என்பதை மோடி நிஜமாக்கி விட்டார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தை துவங்கி விட்டார். அதிலே அவரது வழக்கமான வாய்ச்சவடாலும் உண்டு.


ஒரு மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. இந்த சூழலிலும் இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் என்றால் இவரையெல்லாம் எப்படி மனிதன் என்று சொல்வது! 

அதே போலத்தான் நேற்று விருந்து வைத்த எடப்பாடியையும்!

என்ன ஜென்மங்கள் இதெல்லாம்!