Showing posts with label தமிழக அரசு. Show all posts
Showing posts with label தமிழக அரசு. Show all posts

Thursday, August 14, 2025

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் முதல்வர்

 


என் பெயர் ஸ்டாலின், நான் ஒரு பாதி கம்யூனிஸ்ட் என்று முதல்வர் சொல்லலாம். அந்த மீதி முதலாளித்துவவாதிதான் தொழிலாளர்கள் பிரச்சினையில் செயல்படுகிறார் போல . . .

முதலில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டம். கடுமையான போராட்டம் காரணமாக அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அடுத்து சாம்சங் பிரச்சினையில் முதலாளியின் பிரதிநிதியாய் அரசின் அனைத்து இயந்திரங்களும் செயல்பட்டது. நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறு வழியின்றி சங்கம் பதிவு செய்யப்பட்டது.

இப்போது துப்புறவுப் பணியாளர்கள் பிரச்சினையில் தேவையற்ற ஈகோ காரணமாக தீர்வைக் காணாமல் போலீஸ் மூலம் அடக்குமுறையை ஏவி விட்டு உழைக்கும் மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார் முதல்வர். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

துப்புறவுப் பணியாளர்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்றெல்லாம் பட்டியல் போடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாகும்.

மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் ஆட்சிக்கு மீண்டும் வருவதற்கு அவரே போடும் முட்டுக்கட்டைகள் என்று முதல்வர் எப்போது உணரப் போகிறாரோ?

திமுக தோல்வியைத் தவிர்க்க வேண்டுமென்றால் மைத்ரேயன் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆட்களை சேர்ப்பதை தவிர்ப்பது மட்டுமல்ல, சேகர்பாபுவை தள்ளி வைப்பதும் மிக முக்கியம். 

Tuesday, February 11, 2025

ஆட்டுக்காரனையும் எச்.ராசாவையும் கைது செய்யுங்கள்

 


தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட காவிக்கயவர்கள் இப்போது திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து புதிய வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசின் சொதப்பல்கள் காரணமாக மதுரையில் ஒரு கூட்டத்தை கூட்டிய தெனாவெட்டில் மீண்டும் பல வதந்திகளை பரப்பத் தொடங்கி உள்ளனர்.

அந்த வதந்தி என்னவென்று கீழேயுள்ள படங்கள் சொல்லும். (படங்கள் உதவி திரு முகமது பஷித்)

மிக முக்கியமாக கடைசியில் உள்ள படங்களை பார்க்கவும்.











ஆக, காவிக்கயவர்கள் போட்டோஷாப் மோசடி செய்து மதுரையில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

முதலமைச்சர் உறுதியாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய வேண்டும்.

சங்கி குணாம்சத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சேகர் பாபுவின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

கலவரத்தை தூண்ட சதி செய்யும் எச்.ராசா, ஆட்டுக்காரன், காடேஸ்வரா சுப்புரமணி, அர்சுன் சம்பத் போன்றோரை கைது செய்து கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்கள் வெளியே வராதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியார் மண் என்பதை வாயால் மட்டும் சொல்லிக் கொண்டிராமல் செயலிலும் காண்பிக்க வேண்டும், 

Saturday, May 8, 2021

கதறுங்க, கதறுங்க, கதறிக்கிட்டே இருங்க

 


சங்கிகள்  கதறத் தொடங்கி விட்டார்கள். மகளிருக்கு பேருந்துக் கட்டணம் கிடையாது என்பதை நக்கலடிக்கும் மீம்கள் இவை





மோடி மோகிகளுக்கு சாதாரண மக்களின் சிரமங்கள் எப்போதும் புரியாது. மோடியிடம் செருப்படி பெறுவதைக் கூட பிரசாதமாக கருதும் மூடர் கூட்ட ஆட்கள் அல்லவா அவர்கள்! யதார்த்தம் என்ன என்பதை கீழே உள்ள படம் சொல்கிறது.

இந்த முடிவுகளை சங்கிகளால் ஏற்க முடியாவிட்டால் ஜெலுசில் குடிக்கவும் என்று மட்டுமே நான் சொல்வேன். அவர்களைப் போல உபிக்கு போ, குஜராத்துக்கு போ என்று சொல்ல மாட்டேன். 



Friday, May 7, 2021

சிறப்பான துவக்கம் தொடரட்டும் . . .

 


முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் "உளமாற" பதவி ஏற்றனர்.

எந்த ஒரு அமைச்சரும் முதல்வர் காலில் விழவில்லை.

ஆளுனர் அளித்த தேநீர் விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் புறக்கணிக்கப் படவில்லை. முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஐந்து முக்கிய அறிவிப்புக்கள்.

மக்கள் நலப் பணிகளில் அக்கறை செலுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு முக்கியப் பணிகள்.

துவக்கம் நன்றாக உள்ளது. தொடரட்டும் என்று வாழ்த்துவோம்.

Thursday, May 6, 2021

வாழ்த்துக்களும் வயிற்றெரிச்சலும்

 திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்பதற்கான விழா தொடங்கி விட்டது. 



ஒரு மக்கள் நல அரசை அவர் நடத்த வேண்டும் என்று வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

போர்ட் முல்லா தாஸின் ஒரு பதிவை பார்த்தேன். 



இதனை வயிற்றெரிச்சல் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது! பாவம் ஸ்டாலின் முதலமைச்சராகும் யோகம் அவர் கட்டத்தில இல்லவே இல்லை என்று உசுப்பேத்தி விட்ட ஜோசியர்களிடம் போய் சண்டை போடுங்கய்யா!

Tuesday, June 12, 2018

இது மிகவும் கேவலம் எடப்பாடி . . .



கோவையில் நடந்த புதிய தலைமுறை நிகழ்ச்சியில் அராஜகம் செய்ததும் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதும் பாஜக ஆட்கள் மட்டுமே. தமிழிசையின் கண்ணசைவில்தான் அனைத்தும் நடந்தது.

தமிழிசை மீதும் ரௌடித்தனம் செய்த பாஜக ஆட்கள் மீதும் வழக்கு பதிவதற்குப் பதிலாக  புதிய தலைமுறை மீதும் அமீர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது மிகவும் கேவலமானது. அதை நியாயப்படுத்தி சட்டமன்றத்தில் பேசியுள்ளது அதை விட கேவலமானது.

அடிமைத்தனத்திற்கும் ஒரு அளவு உள்ளது எடப்பாடி.


Tuesday, September 27, 2016

உண்மையைச் சொன்னால் வதந்திகள் பரவாது




நேற்று இரவு வேலூர் நகரின் பல முக்கியப் பகுதிகளில் எல்லாம் கடைகள் முன்னதாகவே அடைக்கப்பட்டு விட்டது.

முதலமைச்சர் பூரண உடல் நலனோடு உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு அறிவிப்புக்கும் கடைகள் மூடப்பட்டதற்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கிறது.

முதல்வர் உடல் நலன் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமுமே. ஆனால் அவரது உடல்நிலை குறித்த தகவலை முழுமையாக பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் உண்மை நிலவரம் என்னெவென்றாவது அரசு அறிவிக்க வேண்டும்.

"காய்ச்சல் குணமாகி விட்டது. சீராக இருக்கிறார், உணவு சாப்பிடுகிறார் " என்று ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நாளும் அறிவிக்கும் போதுதான் காய்ச்சல் குணமாகி சீராக இருக்கையில் ஏன் மருத்துவமனையிலேயே தொடர்ந்து இருக்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. 

"என் பெயரே மறந்து போகும் அளவிற்கு பாசம் காட்டிய மக்கள்" என்று வாட்ஸப்பில் சொன்னீர்களே, அந்த மக்களுக்கு கவலை இருக்காதா? உடல்நிலை சீராக இருக்கையில் ஒரு போட்டோவோ, வீடியோவோ, ஆடியோவோ அதே வாட்ஸப்பில் வெளியிட்டால் பிறகு வதந்திகள் எப்படி பரவும்?

வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தமிழக அரசு செய்ய வேண்டியது உண்மை நிலவரத்தை மறைக்காமல் சொல்வதுதான்.

Thursday, June 23, 2016

மந்திரி போலவே மேயரையும் தூக்கி அடிக்க . . .




மாநகராட்சி மேயரை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க வழி செய்யும் மசோதாவை ஜெ அரசு கொண்டு வந்துள்ளது.

முன்பு இதே போன்ற சட்டத்தை கொண்டு வந்த திமுக இப்போது எதிர்ப்பது வெறும் அரசியல். அவ்வளவுதான்.

இதன் பாதக சாதகம் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை.

இந்த மசோதா கொண்டு வரப்பட்டதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய என்னுடைய தியரியைத்தான் எழுதுகிறேன்.

சென்னையில் தோல்வி பயம், மற்ற ஊர்களில் சிரமம் என்பதெல்லாம் அல்ல பிரச்சினை. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஐந்தாண்டுகளில் இருபத்தி ஐந்து முறைகளுக்கு மேல் மந்திரிகள் மாற்றப்பட்டார்கள். நேற்று மந்திரி, இன்று எந்திரி என்பதுதான் நிலைமை. சபாநாயகரைக் கூட மாற்றிய பெருமை ஜெயலலிதாவிற்கே உண்டு.

நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதால் அவரால் அவ்வளவு சுலபமாக மேயர்களை மாற்ற முடியவில்லை. மாற்றினால் அடுத்த மேயரை தேர்தல் மூலமாகத்தான் கொண்டு வர முடியும்.  மந்திரிகள் உள்ளே, வெளியே ஆட்டம் போல நினைத்த போதெல்லாம் மேயர்களை மாற்றிக் கொண்டிருக்க முடியாது. 

ஆகவே வந்தாச்சு மசோதா.

இனி மேயர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் கிடையாது. அமைச்சர்கள் போல அற்பாயுசு பதவிக்காலம்தான், 

 

Sunday, December 27, 2015

கருவூலத்துறையின் களங்கம் போக்க . . .

நாளை வேலூரில் நடைபெறவுள்ள இயக்கம் பற்றிய பிரசுரம்.

வேலூர் நகரத்தோழர்கள் அவசியம் பங்கேற்பீர்