Showing posts with label இடதுசாரிகள். Show all posts
Showing posts with label இடதுசாரிகள். Show all posts

Wednesday, April 22, 2026

விஜய் ரசிகர்கள் -திருத்தப்பட வேண்டியவர்கள்

 


கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்.


என்ன?

மிகவும் எரிச்சலாக இருக்கிறதா?

இவர்களையெல்லாம் போட்டு வெளுக்க வேண்டுமென்று கோபம் வருகிறதா?

ஆம்.

எனக்கும் அப்படித்தான் வந்தது.

ஆனால்

அது அவர்களின் குற்றமா?

அவர்களை உரிய முறையில் நெறிப்படுத்தாத அந்த கட்சித் தலைமையின் குற்றம்.

41 உயிர்கள் பறி போவதற்கு தன் சோம்பேறித்தனமும் தேவையின்றி செய்த தாமதமும்தான் காரணம் என்பதைப் பற்றிய குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாத விஜய், ஆணவமும் பொறுக்கித்தனமுமே குணாம்சமாக கொண்ட ஆதவ் அர்ஜுனா, சுயநலமே வடிவான புஸ்ஸி ஆனந்த், இந்த மடம் இல்லையென்றால் அடுத்த மடம் என்று தாவும் வாச்சாத்தி குற்ற பிரபலம் செங்கோட்டையன் இன்னும் பல உதிரித்தலைவர்கள் ஆகியோரைப் பார்த்து வளரும் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்!

விஜய்யின் பொறுப்பற்ற திரைப்பட வசன பாணி பேச்சுக்களைத்தைத்தான் அரசியல் என்று கருதிக் கொள்பவர்களும் அது போலத்தானே இருப்பார்கள்!

இவர்கள் எதிர்பார்ப்பது போல விஜய் நிச்சயமாக பெரிய வெற்றி எல்லாம் பெற்று முதலமைச்சர் எல்லாம் ஆகப் போவதில்லை.

அப்படிப்பட்ட சூழலில் இவர்களின் மன நிலை என்ன ஆகும்? இவர்கள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

தற்குறிகள், பைத்தியங்கள் என்று ஒதுக்கித் தள்ளிப் போவதை விட இவர்களோடு பேசுவதும் உண்மைகளை உணர வைப்பது, சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதுமே முக்கியமான பணியாகும்.

அந்த பணியை செய்யும் தார்மீகத் தகுதி இடதுசாரிகளுக்கு மட்டுமே இருக்கிறது.

அவர்களால் மட்டுமே இது சாத்தியம்.

Monday, January 19, 2026

இன்சூரன்ஸ் என்றால் எல்.ஐ.சி என்பதால் . . .



 சமீபத்தில் இரண்டு ஓய்வூதியர் அமைப்புக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புக்கள் சார்பாக நடத்தப்பட்ட கூட்ட,ம் ஒன்று. எட்டாவது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வுக்கு வேட்டு வைக்க நினைக்கும் முயற்சிக்கு எதிராக நடத்தப்பபட்ட தர்ணா போராட்டம் இன்னொரு கூட்டம்.

இரண்டு கூட்டங்களிலும்  நான் சந்தித்த தோழர்கள், எல்.ஐ.சி யில் நூறு சதவிகித அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவுகள் என்னாகுமோ, நாம் எல்.ஐ.சி யில் செய்யப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இருக்குமோ என்ற அச்சத்தை பகிர்ந்து கொண்டார்கள். 

நூறு சதவிகித அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது இன்சூரன்ஸ்துறையில் செய்யப்பட்டதே தவிர எல்.ஐ.சி யில் அல்ல என்று விளக்கினேன். 

அது என்ன விளக்கம் என்று இப்பதிவில் சொல்கிறேன்.

எல்.ஐ.சி யில் நூறு சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு விட்டதா? 

இல்லை, 

நிச்சயமாக இல்லை.

கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.

நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி ஆளுனராக இருந்த ஆர்.என்.மல்ஹோத்ரா  தலைமையில்  இன்சூரன்ஸ்துறையில் சீர்திருத்தம் செய்ய பரிந்துரைகள் வழங்க ஒரு குழு அமைக்கிறார்.

அந்த குழு ஜனவரி 1994 ல்  இரண்டு முக்கியமான  பரிந்துரைகளை அளிக்கிறது.

இன்சூரன்ஸ் துறையில் தொழில் செய்ய வெளிநாட்டுக் கம்பெனிகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை  அனுமதிக்கலாம்.

எல்.ஐ.சி யின் பங்குகளில் 50 % ஐ தனியாருக்கு விற்று விட வேண்டும்.

நரசிம்மராவ் ஆட்சிக்காலம் முடியும் வரை அந்த பரிந்துரைகளை அவர்களால் அமலாக்க முடியவில்லை.

1997 ல் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருக்கும் போது இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகளை 24 % அன்னிய முதலீட்டுடன் அனுமதிக்கும் ஐ.ஆர்.ஏ மசோதாவை ப.சிதம்பரம் கொண்டு வருகிறார். இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.  திருத்தம் கொண்டு வருகிறார்கள். அதை காங்கிரஸ் கட்சியுடன்  பாஜகவும் சேர்த்து தோற்கடிக்கிறது.  பிறகு ஒரு பாஜக உறுப்பினர் அன்னிய முதலீட்டிற்கு எதிரான திருத்தத்தை கொண்டு வருகிறார். அந்த திருத்தத்தை ஆதரிக்கப் போவதாக இடதுசாரிகள் அறிவிக்கிறார்கள். அந்த திருத்தம் நிறைவேறினால் அரசு கொண்டு வந்த மசோதா தோற்றுப் போகும் என்று அர்த்தம். நிலைமையை உணர்ந்து கொண்ட குஜ்ரால் ஐ.ஆர்.ஏ மசோதாவை திரும்பப் பெறுகிறார்.

பிறகு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் கொண்டு வந்த அதே மசோதா, அதே 24 % அன்னிய முதலீட்டுடன் தனியாரை அனுமதிக்கும் ஷரத்துக்களுடன் ஐ.ஆர்.டி.ஏ மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். சமஜ்வாடி கட்சியும் ராஷ்டிர ஜனதா தள் கட்சியும், அதிமுகவும் (ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன்) கூட எதிர்க்கிறார்கள். அன்னிய முதலீடு கூடாது என்று வலியுறுத்துவதாக ஒரு தர்ணா நாடகத்தை ஆடிட்டர் விஷமூர்த்தி, சுதேசி ஜக்ரான் மஞ்ச் என்ற பெயரில் நடத்தியது வேறு கதை.

ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தின் படி ஒரு வெளிநாட்டுக் கம்பெனி தனியாக இந்தியாவில் இன்சூரன்ஸ் கம்பெனி தொடங்க முடியாது. ஏதாவது ஒரு இந்திய முதலாளியின் கூட்டாளியாகத்தான் அந்த இன்சூரன்ஸ் கம்பெனியின் மூலதனத்தில் அதிகபட்சம் 24 % முதலீட்டோடு மட்டும்தான் வர முடியும்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 24 % அன்னிய முதலீடு என்று இருந்தது மோடி காலத்தில்  49 %,  ஆக முதலில் உயர்த்தப்பட்டது. பின்பு 74 % ஆகவும் உயர்த்தப்பட்டது. 

74 % வரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதே, எல்லா தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் 74 % வரை அன்னிய முதலீடு இருக்கிறதா? 

23 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் மூன்று கம்பெனிகளில் அன்னிய மூலதனமே கிடையாது.

மூன்றே மூன்று கம்பெனிகளில் மட்டும்தான் 74 % அன்னிய மூலதனம் உள்ளது.

எட்டு கம்பெனிகளில்  49 % அன்னிய மூலதனத்திற்கு மேல் கிடையாது.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் உள்ள அன்னிய மூலதனம் என்பது வெறும் 32.67 % மட்டுமே.

உங்களுக்கு சில கேள்விகள்  வரலாம்.

அன்னிய மூலதனத்திற்கு இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆர்வமில்லாத போது எதற்கு 100 % என்று உயர்த்த வேண்டும்?

ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்?

இந்த முடிவினால் என்ன பாதிப்பு யாருக்கு வரும்?

ஆளில்லாத கடையில் மோடி டீ ஆற்றுகிறார் என்று நாம் நம்பி விடக் கூடாது. 

இந்திய முதலாளிகளோடு கூட்டாளியாக தொழில் நடத்த முடியாது என்று தனிக்கடை போட காத்துக்கொண்டிருக்கும் அன்னிய கம்பெனிகள் இருக்கின்றன. அவர்களுக்கான வாசலை மோடி திறந்து வைத்துள்ளார். இந்திய மக்களின் முதலீடு முழுமையாக அந்த வெளிநாட்டு கம்பெனிகளின் வசம் போனால் அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்திற்கு என்ன பயன் இருக்கிறது! நாளை அந்த கம்பெனி ஓடிப் போனால் அதனுடன் பாலிசிதாரர்களின் பணமும் ஓடி விடும்.

இப்போது இந்திய முதலாளிகளோடு கூட்டணி வைத்துள்ள வெளிநாட்டு முதலாளிகள், தனிக்கடை திறக்க தாங்கள் கூட்டாளியாக உள்ள இந்திய இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து தங்கள் மூலதனத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால் அந்த கம்பெனியின் நிலைமை என்ன ஆகும்? இன்சூரன்ஸ் அடிப்படையில்  ஒரு நீண்ட கால ஒப்பந்தம். பிரிமிய வருமானமும் அந்த அடிப்படையில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கும். "என் பணத்தை கொடு, நான் போறேன்" என்று அவர்கள் கழுத்தில் கத்தி வைத்தால் அந்த தனியார் கம்பெனி நிலை குலைந்து போகும், அங்கே பாலிசி எடுத்த மக்களின் பணமும் கூட.

எந்த ஒரு வெளிநாட்டு கம்பெனியும் இந்திய விதிகளை மதிப்பதில்லை. வணிகத்தில் அவர்களிடம் எந்த நெறிமுறைகளும் கிடையாது. அதனால் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு பாதிப்பு வரும். 

எல்.ஐ.சி யைப் பொறுத்தவரை அரசு வெறும் 3.5 % பங்குகளை மட்டும் விற்பனை செய்துள்ளது. மேலும் விற்க வேண்டும் என்று துடிக்கிறது. மிகக் கடுமையாக அந்த முடிவு எதிர்க்கப்பட்டு வருகின்றது. 

ஆக 100 % அன்னிய முதலீடு என்பது எல்.ஐ.சி க்கு அல்ல, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குத்தான்.

பின் ஏன் இந்த குழப்பம்?

தனது 69 ஆண்டு கால மகத்தான சேவை காரணமாக, நம்பிக்கை என்றால் அது எல்.ஐ.சி என்ற முத்திரையை பதித்ததால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை அலுவலகங்கள், சின்னஞ்சிறு கிராமங்களில் கூட எல்.ஐ.சி யின் முகமாக மாறியுள்ள லட்சக்கணக்கான முகவர்கள்,  அவர்களை வழி நடத்தும் வளர்ச்சி அதிகாரிகள், நேர்மையான, திறமையான, உடனடி சேவையை அளிக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், ஆகியோரின் அர்ப்பணிப்பால்

மக்கள் மனதில் 

இன்சூரன்ஸ்  என்றால் எல்.ஐ.சி 

என்றே பதிந்துள்ளது. 

எதிர்காலமும் சொல்லும்

இன்சூரன்ஸ் என்றால் எல்.ஐ.சி மட்டுமே

பிகு: இன்று இன்சூரன்ஸ் தேசியமய நாள். 1956 ல் ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள். 



Sunday, December 14, 2025

கேரளா - பின்னடைவும் முன்னேற்றமும்

 


கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அச்சத்தையும் கவலையையும் அதே நேரம் நம்பிக்கையையும் அளிக்கிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் அதிக இடங்களை (பெரும்பான்மை இடங்களை அல்ல, ஆனாலும் பாஜக வாஷிங் மெஷினில் கொலைக்குற்றத்திலிருந்து விடுபட்ட காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் உதவியுடன் சில கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள்) பெற்றுள்ளது அச்சத்தை அளிக்கிறது ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் கேடு கெட்ட சூட்சுமத்தை அறிந்த சங்கிகள் ஒட்டு மொத்த கேரளத்திலிருந்தும் இடதுசாரிகளை வீழ்த்தி விட்டோம் என்று பிரச்சாரம் செய்வார்கள் என்பதுதான் அச்சம்.

இடது முன்னணிக்கு பின்னடைவா?

ஆம். பின்னடைவுதான். ஏற்கனவே பொறுப்பிலிருந்த பல இடங்களை இழந்துள்ளது என்பது நிச்சயமாக பின்னடைவுதானே!

மோடியும் காங்கிரஸும் சொல்வது போல இடது முன்னணி கேரளத்திலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு விட்டது.

பொய், மிகப் பெரிய பொய்


மேலே உள்ள பட்டியலே உண்மையைச் சொல்லும்.  மாநகராட்சிகளில் பெரிய இழப்பு இருந்தாலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும்  ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துக்களிலும்  கணிசமான எண்ணிக்கை கிடைத்துள்ளது.

திருவனந்தபுரத்தைத் தவிர மற்ற பகுதிகளில் பாஜக இழந்ததுதான் அதிகம். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் வாக்கு சதவிகிதம் பற்றிய புள்ளி விபரத்தை பகிர்ந்திருந்தார். அது கீழே


2024 ல் நாடாளுமன்ற தேர்தலின் போது,
காங்கிரஸ்:- 45.40%
இடதுசாரி:- 33.60%
தேஜகூ:- 19.40%
வாக்குகள் பெற்றன.

தற்போது உள்ளாட்சி தேர்தலில்
காங்கிரஸ்:- 42%
இடதுசாரி:- 40%
தேஜகூ:-9%. வாக்குகள் பெற்றுள்ளன.
2024 ஐ விட கூடுதலான வாக்கு சதவீதத்தை இடது ஜனநாயக முன்னணி பெற்றும் வெற்றி பெற இயலவில்லை.



இந்த புள்ளி விபரம் நம்பிக்கையையும் அளிக்கிறது. கவலையும் அளிக்கிறது.

திருச்சூரில் காங்கிரஸ் தன் வாக்குகளை சுரேஷ் கோபிக்கு மடை மாற்றிக் கொடுத்தமைக்கு பாஜக இப்போது நன்றிக் கடன் ஆற்றியுள்ளதோ என்றொரு சின்ன சந்தேகம் வருகிறது.

அதே நேரம் பின்னடைவு ஏற்பட்டாலும் தளம் அப்படியே இருப்பதால் இடது முன்னணி தன் பலவீனங்களை கண்டறிந்து அவற்றை களைந்திடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தோழர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில ஆட்சி எவ்வளவு சிறப்பான பணிகளை செய்திருந்தாலும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த வார்டில் நிற்பவர் யார்? அந்த தெருவில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதெல்லாம்தான் முக்கியமான காரணிகள்.

பத்தாண்டு கால கேரள மக்களுக்கு செழிப்பான ஆட்சியில் சில களைகளும் முளைத்திருக்கும். அந்த களைகளை கறாராக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இடது முன்னணி எடுத்திடும் என்று நம்புகிறேன்.

காலத்தே களைகளை அகற்றத் தயங்கினால் அது பெரும் புதராக மாறி பின்னடைவுகளை உருவாக்கிடும், மேற்கு வங்கத்தைப் போல.

கேரளா மேற்கு வங்கம் அல்ல என்பதை 2025 ல் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.

வாக்குகளின் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதால் அலட்சியம் வந்திடுமோ என்பது கவலையளிக்கிறது.

Thursday, November 6, 2025

மீண்டும் முழுமையாக சிவந்த JNU

 


சங் பரிவாரம் சிதைக்க நினைக்கிற ஏராளமான நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இடதுசாரி சிந்தனையாளர்களின் கோட்டையாக திகழ்வதால் அதன் மீது மோடி அரசு தொடர்ந்து பல விதமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நிதி ஒதுக்கீடு வெட்டு, மோசமான ஆசிரியர்கள், துணை வேந்தரை நியமிப்பது, காவல்துறை நடவடிக்கை, இன்று எம்.பி யாகவும் அமைச்சராகவும் இருக்கிற ரௌடிகளைக் கொண்டு தாக்குதல், ஜேஎன்யு மாணவர்கள் மீது அவதூறுப் பிரச்சாரம் என்று பல பரிமாணங்களில் மோடி அரசு வேட்டையாடுகிறது. 

ஜேஎன்யு மாணவர் பேரவையின் தலைவராக இருந்த தோழர் உமர் காலித் , டெல்லி கலவரங்களை தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் ஐந்தாண்டுகளாக பிணையில் உள்ளார். பிணை கூட மறுக்கப்படவில்லை. துப்பாக்கியை காண்பித்த பொறுக்கி அனுராக் தாகூருக்கு மந்திரி பதவியே கொடுக்கப்பட்டது. அது போலத்தான் இன்னொரு பொறுக்கி கபில் மிஸ்ராவுக்கும் பரிசு கிடைத்தது.

இப்படிப்பட்ட சூழலில் இந்தாண்டு நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி மாணவர் சங்கங்களின் கூட்டணி தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர்,  ஆகிய நான்கு  பொறுப்புக்களையும் இடது அணி வென்றுள்ளது.

கடந்தாண்டு இணைச்செயலாளர் பொறுப்பில் மட்டும் பாஜக குண்டர் படை ஏ.பி.வி.பி வென்றது. ஜே.என்.யு கோட்டையில் ஓட்டை விழுந்து விட்டது. இனி கோட்டை மொத்தமாக சரியும் என்று கொக்கரித்தார்கள்.

இந்த ஆண்டு அந்த கணக்கையெல்லாம் பொய்க் கணக்காக்கி விட்டு இடது அணி முழுமையாக வென்றுள்ளது.

மத்திய அரசின் ஆதரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவு, பண பலம், ஊடக பலம், ரௌடிகள் பலம் ஆகியவற்றையெல்லாம் முறியடித்து

ஜேஎன்யு வளாகத்தில் இன்று பறக்கும் செங்கொடி நாளை தேசமெங்கும் பறக்கும். 


Friday, December 13, 2024

சிவப்புக்கு அழிவில்லை சுமந்து வகையறாக்களே!

 


போராட்டப்பாதையில் சென்றால் இடதுசாரிகளை போல அழிவீர்கள் என்று காவித் தரகர் சுமந்து சொன்னதை வைத்து சில நாட்கள் முன்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

போராட்டத்தில் உண்மையாக இருந்தால் மக்கள் அப்போராட்டத்தை நடத்துபவர்களை ஆதரிப்பார்கள் என்பதற்கு வரலாறு முழுதிலும் உதாரணங்கள் உண்டு.

ஒரு புதிய உதாரணம் நேற்று படைக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வேயில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இம்மாத துவக்கத்தில் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

சி.ஐ.டி.யு சங்கத்தோடு இணைக்கப்பட்ட DREU சங்கம் 26,151 வாக்குகள் பெற்று அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

 


முதலிடம் பெற்ற SRMU சங்கத்திற்கும் இரண்டாம் இடம் பெற்ற DREU சங்கத்திற்கும் வாக்கு வித்தியாசம்  107 மட்டுமே.

 முதலாளித்துவ கட்சிகள் போல ஓட்டுக்கு பணம், மது பானம், பிரியாணி கொடுத்து மோடி போல ஜூம்லா வாக்குறுதிகள் கொடுத்து மம்தா பானர்ஜி போல வாக்காளர்களை மிரட்டி, உருட்டி அச்சுறுத்தியும் அதனால் 26,258 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

 தங்களுக்காக உழைக்கும் வல்லமை கொண்டவர்கள் செங்கொடி சங்கத்தினர் மட்டுமே என்பதை ரயில்வே தொழிலாளர்கள் SRMU அங்கீகரிக்காப்பட்ட சங்கம் என்ற ஆணவத்துட்ன் ஆடியதை புரிந்து கொண்டதால்தான் FREU அமைப்பிற்கு வாக்களித்தார்கள்.

 அப்படிப்பட்ட நிலைமை இந்தியாமுழுவதற்கும் நாளை வரும். சுமந்து போன்ற தரகர்கள் அதை பார்க்கத்தான் போகின்றனர்.