Showing posts with label வெங்காயம். Show all posts
Showing posts with label வெங்காயம். Show all posts

Tuesday, April 28, 2026

மாட்டுச்சாணத்திற்கு வெங்காயம் மேல்

 


கோடை வெப்பத்தை சமாளிக்க மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றை காங்கிரஸ் கட்சியிலிருந்து தன் கோஷ்டியோடு தாவி ம.பி யில் பாஜக அமைச்சகத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக மத்திய அமைச்சர் பதவியென்ற எலும்புத்துண்டை  ருசித்துக் கொண்டிருக்கும் ராஜ வம்சத்து வாரிசு ஜோதிராதித்யா சிந்தியா சொல்லியுள்ளார்.


இப்படி ஒரு சுலபமான வழி இருப்பது தெரியாமல் நான் வீட்டிற்கு ஏ.சி போட்டு பணத்தை விரயம் செய்து விட்டேன்.

கடந்த வருடம் ஒரு கல்லூரி முதல்வர் இன்னொரு அறிவியல் கண்டுபிடிப்பை தன் கல்லூரியில் அமலாக்கினார்.


வகுப்பறைகளின் சுவரில் மாட்டுச்சாணம் பூசினார் அவர். அந்த காலத்தில் வீடுகளின் தரைகளில் சாணி மொழுகினார்களே என்று நியாயப்படுத்தினார்கள் பலர். அவர்கள் எல்லாம் தங்கள் வீட்டின் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிக் கொண்டார்களா என்பதுதான் தெரியவில்லை.

மாட்டுச்சாண தொழில் நுட்பத்திற்கு வெங்காய தொழில் நுட்பம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வு, வெங்காயம் அழுக அழுக புதிதாய் வைப்பது ஆகியவற்றுக்கு ஆகும் செலவு, மாட்டுச்சாண நாற்றத்தில் வாழ்வதை விட மேல். 

வெங்காயத்தை கக்கத்தில் வைத்து காய்ச்சல் வரவழைக்கிற டெக்னிக் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த வெங்காய விஞ்ஞானி சொல்றதை பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அங்கிருப்பவர்களிடமும் சோதித்துப் பார்க்கவும்.

மேலே நீல நிறத்தில் இருப்பது தமுஎகச தலைவர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய பதிவு.

என்னுடைய ஆலோசனை மாறானது.

வெங்காய தொழில் நுட்பத்திற்கு மாறாக மாட்டுச்சாண தொழில் நுட்பத்தை மாட்டுக்குண்டர்கள் சூழ் பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அப்படியென்றால் வெங்காய தொழில் நுட்பத்தை எங்கே பயன்படுத்துவது?

கண்டிப்பாக நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரின் வீட்டிலும் அலுவலகத்திலும்  . . .

அப்போதாவது அவர் வெங்காயத்தின் அவசியத்தை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்ப்போம். 

Thursday, October 22, 2020

வெங்காயமே! கமலே! நன்றி

 


 

தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிக்கு இல்லை என்று இத்தனை நாள் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டிருந்தேன்.

 




இப்போதுதான் அது தவறு என்று தெரிகிறது.

 வெங்காயமே தன் விலையை நிர்ணயித்துக் கொண்டு உயர்ந்து போய் விட்டதே! தானே தன் விலையை நிர்ணயத்திக் கொண்ட முதல் விவசாய உற்பத்திப் பொருளான வெங்காயத்திற்கு மனமார்ந்த நன்றி.

 அத்தியாவசியப் பொருட்கள் தடைச்சட்ட,ம் அகற்றப்பட்டதால் பதுக்கல் அதிகமாகி விலை உயர்ந்து விட்டது என்று மத்தியரசு மீதும் பதுக்கல் பேர்வழிகள் மீதும் கோபப்பட்டது தவறு என்பதை மய்யமாக உணர்த்தியதற்கு நன்றி திரு கமல் அவர்களே!