Showing posts with label எச்.ராசா. Show all posts
Showing posts with label எச்.ராசா. Show all posts

Friday, April 10, 2026

எச்.ராசா அரசியலிலிருந்து விலகலா?


 மேலே உள்ள படத்திற்கு என்ன அவசியம்?

கீழேயுள்ள செய்தியை பாருங்கள்.


மிகவும் பழைய செய்திதான் இது. இதை வைத்துக் கொண்டு பலர், எச்.ராசா ஏதோ அரசியலிலிருந்தே விலகி விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் நான்கு முறை மக்களவைத் தேர்தலிலும் நான்கு முறை சட்டப்பேரவை தேர்தலிலும்  போட்டியிட்டு ஏழு முறை தோற்றுப் போயுள்ளார். ஒரே ஒரு முறை கலைஞர் புண்ணியத்தில் எம்.எல்.ஏ ஆனார். சாரணர் அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பரிதாபமாக தோற்றுப் போனார். போன முறை சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சி கொடுத்த காசை செலவழிக்காமல் ஆடம்பர மாளிகை கட்டி விட்டதாக சொந்தக்கட்சிக்காரர்களே போராட்டம் நடத்தினார்கள். அதனால் அப்போது வஜனம் பேசியிருப்பார் போல . . .

அப்போது அவர் மனதில் என்ன நினைத்திருப்பார் என்பதுதான் மேலே உள்ள படம். 

கலவர அரசியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை!


Monday, March 17, 2025

பன்றி வண்டி கிடைக்கலையாம் எச்.ராசா

 


நேற்று காவல்துறை கைது செய்த போது எச்.ராசா எனும் ஐகோர்ட், போலீஸ் வேனில் ஏற மாட்டேன் என்று கலாட்டா செய்துள்ளது. நாய் ஏற்றும் வண்டியில் நான் ஏற மாட்டேன் என்று விளக்கமும் சொல்லியுள்ளது.


அந்த ஜந்துவிற்கு நாய் வண்டியே அதிகமென்றும் அதன் குணாம்சம் கொண்ட பன்றிகளை ஏற்றும் வண்டி கிடைக்காததால் நாய் வண்டியை எடுத்து வந்தார்கள் என்பதை அந்த ஐகோர்ட்டிடம் யாராவது சொல்லவும். 

Saturday, January 25, 2025

உபியில சொல்லுவியா எச்.ராசா?

 


கீழேயுள்ள படத்தை முதலில் பாருங்கள்


உத்திர பிரதேச மாநிலம் மதுராவின் ஒரு பகுதியான விருந்தாவனில் உள்ள " தாகூர் ஸ்ரீ பன்கே  பிகாரி ஜி மகராஜ்  கோயில்" என்றழைக்கப்படும் ஒரு கிருஷ்ணன் கோயில்.

இந்த கோயிலைப் பற்றிய ஒரு செய்தி இன்றைய  ஆங்கில இந்துவில் முதல் பக்கத்தில் வந்திருந்தது. 

வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கான FCRA லைசன்ஸை அந்த கோயிலுக்கு உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ளது.

அன்னை தெரசா நடத்தி வந்த தொழு நோயாளிகளுக்கான சேவை அமைப்புக்களுக்கெல்லாம் லைசன்ஸ் கொடுக்க மறுத்து அவைகளின் செயல்பாட்டை முடக்கிய உள்துறை அமைச்சகம் கோயிலுக்கு மட்டும் கொடுப்பது நியாயமா என்று  கேட்கப்போகிறேன் என்றுதானே  நீங்கள் நினைத்தீர்கள்?

அந்த கேள்வி மனதுக்குள் இருக்கிறதுதான். ஆனால் இந்த பதிவின் நோக்கம் வேறு.

இந்த லைசன்ஸை எதிர்த்துள்ளது யார் தெரியுமா?

அந்த கோயிலின் அறங்காவலர் குழு.

"நாங்கள் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை. எதற்கு அவர்களாகவே தருகிறார்கள்? ஏற்கனவே இந்த கோயிலை கைப்பற்ற உ.பி.அரசு முயற்சிக்கிறது. அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த லைசன்ஸ் மூலம் கோயிலை கையகப்படுத்த அரசு முயற்சிக்கிறது. இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது"

என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார் கோயிலின் பிரதான பூசாரியும் அறங்காவலர் குழு உறுப்பினருமான அசோக் கோஸ்வாமி என்பவர். 

மொட்டைச்சாமியார் அரசுக்கு இந்த கோயிலின் மீது என்ன கரிசனம்?

ரொக்கமாக மட்டும் வங்கிகளிலும் சேர்த்து 480 கோடி ரூபாயும் கிலோக்கணக்கில் தங்க, வைர நகைகளும் உள்ளதாம்.

இந்து அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் கூச்சல் போடும் எச்.ராசா, உபிக்கு போய் தாகூர் ஸ்ரீ பன்கே  பிகாரி ஜி மகராஜ்  கோயிலை அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மொட்டைச்சாமியாரிடம் சண்டை போடுவாரா? அதற்கான துணிவு அவருக்கு உண்டா? தர்மப் போராளி என்று அவரது பொறுக்கித்தனங்களுக்கு அடைமொழி கொடுத்தவர்களும் உடன் செல்வார்களா?

மாட்டார்கள்.

ஏனென்றால் எச்.ராசாவுக்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும். மொட்டைச் சாமியாருக்கு எதிராக பேசினால் அவருக்கு தமிழ்நாட்டில் இரங்கல் கூட்டம் நடத்துவார்கள் என்று...