Friday, May 8, 2020

ஜொமாட்டோ - சரக்கு விற்பனை தீர்ப்பு


டாஸ்மாக் சரக்குகளை ஆன்லைனில் வினியோகிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அரசுக்கு முன்மொழிவு அளித்துள்ளோம் என இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் உணவு வினியோக நிறுவனம் "ஜொமாட்டோ" கூறியதற்கும் 

டாஸ்மாக் கடைகளை மூடி ஆன்லைன் மூலமே சரக்குகளை விற்பனை செய்ய வேண்டுமென்ற இன்றைய தீர்ப்பிற்கும்

எந்த தொடர்பும் கண்டிப்பாக இருக்காது

என்று

நீதித்துறையை மதிக்கும் இந்தியனாக நம்புகிறேன்.

எப்படியோ சாலைகளை ஆக்கிரமிக்கும் குடிமக்களின் இல்லையில்லை மதுப்பிரியர்களின் போக்குவரத்து குறைந்தால் நல்லது.  

2 comments: