கோயம்பேடு
வியாபாரிகள்தான் கொரோனா தொற்று பரவல் அதிகமானதற்கு காரணம் என்று எடப்பாடி பொங்கியதை
அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதிலே அவர் அழுத்திச் சொன்ன இன்னொரு விஷயத்தை எத்தனை
பேர் கவனித்தீர்கள்?
ஆங்கிலத்தில் Read Between the lines என்று சொல்வார்களே, அது
போல உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் அது.
கோயம்பேடு
வியாபாரிகளோடு ஓ.பி.எஸ் நான்கு முறை பேச்சுவார்த்தை
நடத்தினார். அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது என்றும் எடப்பாடி சொல்கிறார்.
ஓ.பி.எஸ்
சாதுர்யத்தோடும் கண்டிப்போடும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் கோயம்பேடு மார்க்கெட்டை
முன் கூட்டியே மூடியிருக்கலாம், கொரோனா தொற்று பரவலையும் கட்டுப்படுத்தி இருக்கலாம்
என்ற பொருள் அதில் தொக்கி நிற்கிறதல்லவா?
இதை
புரிந்து கொண்டாலும் ஓ.பி.எஸ் இன்னொரு தர்ம யுத்தம் தொடங்க மாட்டார் என்பது வேறு விஷயம்.
பிகு:
எழுதி நாளாச்சுதான். முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்து கொள்ளத்தான் கால தாமதமாகி
விட்டது.
No comments:
Post a Comment