Tuesday, May 12, 2020

AC வேண்டுமா? வேண்டாமா?


மோடி அரசு டெல்லியிலிருந்து பதினைந்து நகரங்களுக்கு ரயில்களை இயக்குகிறது. இன்னொரு 15 ரயில்கள் அங்கிருந்து டெல்லிக்கு திரும்பி வரும்.

குளிர்சாதனப் பெட்டிகள் மட்டுமே இயங்கும், ராஜ்தானி ரயில் போல கட்டணம் ஆகியவை அந்த ரயில்களின் சிறப்பம்சங்கள். ராஜ்தானி ரயிலின் கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள் மட்டும் பயணித்தால் போதுமா? அந்த அளவிற்கு வசதி இல்லாதவர்கள், அதே நேரம் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கு கட்டணம் செலுத்தும் சக்தி உள்ளவர்கள் பயணிக்க வேண்டாமா? 

பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிற ஆட்சிதான் மோடி ஆட்சி என்பதை இச்சம்பவமும் நிரூபித்துள்ளது.

நிற்க

இன்னொரு சந்தேகமும் வருகிறது.

தமிழக அரசு பல கடைகளை திறக்க கொடுத்துள்ள அனுமதியில் குளிர்சாதன வசதி கொண்ட துணிக்கடையோ, நகைக்கடையோ அனுமதிக்கப்பட மாட்டாது. அப்படி அவர்கள் இயங்கினால் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

குளிர்சாதன வசதி வேண்டுமா, வேண்டாமா?

மோடி அரசு மக்களை ஏமாற்றுகிறதா?

அல்லது

எடப்பாடி அரசு மக்களை ஏமாற்றுகிறதா?


No comments:

Post a Comment