ஊரடங்கை நீட்டிக்கிற அதே வேளையில் இந்த அறிவிப்பும் வெளி வந்தும் எரிச்சலை அதிகப்படுத்துகிறது.
இதில் சொல்லப்படாத இன்னொரு விஷயமும் உள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைகள் மீது மலர் தூவும் திட்டமும் இருக்கிறதாம்.
மருத்துவர்களை மதிக்க வேண்டும் என்ற உணர்வை உண்மையாக உருவாக்கி இருந்தால் அம்பத்தூரிலும் கீழ்ப்பாக்கத்திலும் மருத்துவர் சடலங்களை அடக்கம் செய்ய பிரச்சினை வந்திருக்காது.
கை தட்டுவதையும் விளக்கேற்றுவதையும் ஒரு பொழுது போக்காகத்தான் பார்த்திருக்கிறார்கள். அப்படி கை தட்டி, விளக்கேற்றியவர்களில் எத்தனை பேர் பிரதமர் நிவாரண நிதிக்கும் (அது டுபாக்கூர் PM CARES நிதியாகவே கூட இருக்கட்டும்) முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் நிதி அளித்தார்கள் என்று பார்த்தால் உண்மை விளங்கிடும். (நாங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பினோம். சங்கத்தின் சார்பில் வசூலித்து அனுப்பிக் கொண்டிருக்கிறோம்)
இன்னும் ஒரு டாஸ்க் கொடுக்க வேண்டும் என்பதுதான் மோடியின் விருப்பமாக இருக்கும். ஆனால் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீடிக்கப் படுவதில் எரிச்சலில் உள்ள மக்கள் அதற்கு செவி சாய்ப்பார்களா என்ற ஐயத்தில் அந்த டாஸ்கை முப்படைகளுக்கு அளித்து விட்டார்.
இந்த வெட்டி விளம்பரங்களை நிறுத்தி விட்டு அதற்காக ஆகும் செலவுகளை மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களுக்கு பயன் படுத்துங்கள்.
பரிசோதனை உபகரணங்களை கமிஷன் இல்லாமல் வாங்கி அந்த கூடுதல் பணத்தையும் மக்களுக்கு பயன் படுத்துங்கள்.
சினிமாத்தனமான நடவடிக்கைகள் வீண், வெட்டிச் செலவு
US'layum muttal trump, air force flyover to praise the heath care workers'nu scene pottu kittu irukaan. Mutaal allakai moodi , trump'ai paathu copy adikiraan.
ReplyDelete