உத்திரப் பிரதேச ஜல் போர்ட் அதாவது அம்மாநில குடி நீர் வடிகால் வாரியம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒன்றரை கோடி ரூபாய் அளித்துள்ளது.
இதிலென்ன தவறு என்று கேட்கிறீர்களா?
அந்த வாரியத்தில் பணியாற்றும் 25,000 ஊழியர்களுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் என்று சொல்லி அவர்களிடம் கேட்காமலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து விட்டார்கள்.
ஊழியர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் கொடுக்காமல் இப்படி செய்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி எல்லாம் அந்த வாரிய நிர்வாகத்திற்கு வராதா?
"என்னோட குழந்தைக்கு பலூன் வாங்கிக் கொடுக்க துப்பில்லை, ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூபாயா?"
என்ற களவாணி படக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment