Thursday, May 7, 2020

விசாகப்பட்டிணம் - இன்னொரு போபால்


விசாகப்பட்டிணத்தில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவு இதுவரை 11  உயிர்களை பலி வாங்கியுள்ளது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் உள்ளார்கள்.

சாலையில் மக்கள் மயங்கி விழும் காட்சிகள் மனதை மிகவும் பாதிக்கிறது.

ஊரடங்கு காலத்தில் அந்த தொழிற்சாலை இயங்க அனுமதி கொடுத்தது யார்?

இன்னொரு போபால் அவலம் விசாகப்பட்டிணத்தில் நிகழ யார் காரணம்?

அந்த விஷ வாயுவை நுகர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புபோபால் போல தொடர் நோயாக மாறாமல் இப்போதுடன் முடிந்து போக வேண்டும் என்பதே என் அவா. 

ஊரடங்கால் மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கும் போது பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

முதலாளிகள் இனியாவது எச்சரிக்கையாக இருப்பார்களா அல்லது அடுத்தவன் உயிர்தானே என்று அலட்சியத்தை தொடர்வார்களா?









No comments:

Post a Comment