புலம்
பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான ரயில் கட்டணத்தை அவர்களே
ஏற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது மத்தியரசு.
நாடெங்கிலும்
கண்டனம் எழுந்தது.
வெளி
நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மத்தியரசு தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்து
வர முடிகிற போது உள் நாட்டு இந்தியர்களை புறக்கணிப்பது நியாயமில்லை என்றும் பி.எம்
கேர்ஸ் என்ற கணக்கில் குவிகிற நிதி எதற்காக என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனாலும்
அரசு அசைந்து கொடுக்கவில்லை.
புலம்
பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஏற்கும் என்று
சோனியா காந்தி அறிவித்த பின்பு மத்தியரசு தன் முடிவை மாற்றிக் கொள்கிறது.
ரயில்வே
கட்டணத்தில் 85 % மத்தியரசு ஏற்கும் என்றும் 15 % மாநில அரசு ஏற்க வேண்டும் என்றும்
தொழிலாளர்கள் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இப்போது தெரிவித்துள்ளது.
காங்கிரஸ்
கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதற்காக அவசரம் அவசரமாக முடிவெடுத்துள்ளது. பரவாயில்லை.
இப்படியாவது புத்தி வந்தால் சரி.
சோனியா
அறிவிக்கவில்லை என்றால் இந்த புத்தி வந்திருக்காது என்பதும் சேர்த்தே பேசப்படும்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் சொந்த ஊர் செல்வதற்கு பணம் வசூலிப்பது பாடையியில படுத்திருப்பவனிடம் சுடுகாட்டிற்க்கு செல்வதற்கு பணம் வசூலிப்பது போலாகும் என்று மதுக்கூர் இராமலிங்கம் குறிப்பிட்டது சரியாகத்தான் உள்ளது
ReplyDelete