Wednesday, May 13, 2020

அவர்கள் தலைக்குள்ளே மூளையா? களிமண்ணா?




பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு இப்போது என்ன அவசரம்?

யார் கேட்டார்கள்? 

நிலைமை சீராகி விட்டதா?

தமிழகத்தை விட்டு கொரோனா பயந்து ஓடி விட்டதா?

சாலைகளில் பேருந்துகள் ஓடுகிறதா?

ஓடுவதற்கான அனுமதியைத்தான் மோடி கொடுத்து விட்டாரா?

ஊரடங்கி வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் காலத்தில் எத்தனை மாணவர்கள் புத்தகங்களை புரட்டி இருப்பார்கள்?

சிறைக்கைதி போல வீடடங்கி நிற்கும் காலத்தில் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலை எத்தனை பேருக்கு இருந்திருக்கும்?

மாணவர்களை அழைத்து வருவதற்கும் கொண்டு விடுவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்களே, எந்த மாணவன் அல்லது மாணவி எங்கே இருக்கிறார்கள் என்ற விபரம் இருக்கிறதா தமிழக அரசிடம்?

குக்கிராமங்களுக்கும் செல்லுமளவிற்கு பேருந்துகள் உள்ளதா உம்மிடம்?

ஊரடங்கு 4.0 ஐ அறிவித்து மீண்டும் முடக்கினால் என் செய்வீர்?

நோய் தொற்றுமோ என்ற அச்சத்தை போக்கிட முடியுமோ உம்மால்?

நோய்த் தொற்று அதிகரிக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களை ஒரே இடத்தில் குவித்தால் பள்ளியே இன்னொரு கோயம்பேடாக மாறாதா?

விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்களை குவிப்பதும் விபரீத விளைவுகளை அளிக்காதா?

அறிவிக்கும் முன்பு அரசு இந்த கேள்விகளையெல்லாம் ஆராயவில்லையா?

ஆராய்ந்திருந்தும் அறிவிப்பு வருமென்றால் ஆட்சியாளர்களின் தலைக்குள் இருப்பது மூளையா? இல்லை களி மண்ணா?

பொதுத்தேர்வை நடத்தாதீர் . . . மாணவர்களை பழி வாங்காதீர் . . .

No comments:

Post a Comment