Friday, May 15, 2020

டாஸ்மாக் மூடல் – அபராதம் நியாயமில்லை




டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று பொது நல வழக்கை தொடுத்தவரைக் கண்டித்து ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது உச்ச நீதி மன்றம்.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தனி மனித விலகல் என்பது முற்றிலுமாக அலட்சியப்படுத்தப்பட்ட இடமாக டாஸ்மாக் இருந்தது என்பது கடை திறந்த இரண்டு நாட்களில் பார்த்த காட்சிகளே உணர்த்தியது. அமைதியாக நடந்து கொண்டிருந்த குடும்பங்களில் புயல் வீசியது. கட்டுக்குள் இருந்த குற்றச்சம்பவங்கள் அதிகரித்தது. ஏன் திருவெண்ணெய்நல்லூரில் ஜெயஸ்ரீயை உயிரோடு கொளுத்திய கயவர்களும் மதுவின் பிடியில்தான் இருந்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று வழக்கு தொடுத்தவரை கண்டிப்பதும் அபராதம் விதிப்பதும் எந்த விதத்திலும் நியாயமில்லை.


No comments:

Post a Comment