Sunday, May 10, 2020

ரஜினி, நிறைய வழி இருக்கு




முதல் முறையா நீங்க சொன்னதில் ஒரு விஷயத்தில் உடன் படுகிறேன் ரஜினி. இந்த நேரத்தில் டாஸ்மாக் திறப்பது சரியல்ல என்பதுதான் அது. அதை வரவேற்கிறேன். 

இரண்டாவதாக ஆட்சியில் அமர்வதை மறக்க வேண்டும் என்ற வார்த்தையில் எடப்பாடிக்கு ஏதோ சிக்னல் கொடுப்பது மட்டும் புரியுது. என்ன டீலிங் என்பதெல்லாம் உங்களுக்குதானே தெரியும். 

கஜானாவிற்கு பணம் வருவதற்கான நல்ல வழிகளைப் பாருங்கள் என்ற ஆலோசனையும் நல்ல ஆலோசனைதான்.

நீங்களே சொல்ல வேண்டியதுதானே என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். 

ஏனென்றால் நீங்கள் அந்த டுபாக்கூர் மாரிதாஸிடம் கேட்பீர்கள். அந்தாள் ஒரு வீடியோ போட்டு உங்களை மெண்டலாக்க முயற்சிப்பான். 

பிறகு என்ன வழி இருக்கிறது.

"நான் சிகப்பு மனிதன்" என்ற படத்தில் அயோக்கியர்களை கொலை செய்யும் உங்கள் கேரக்டருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் "ராபின்ஹூட்" என்று பெயர் வைத்திருப்பார். சுரண்டி செல்வம் சேர்த்தவர்களிடமிருந்து அதை கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு பகிர்த்தளித்தவர் ராபின் ஹூட்.

இப்போதும் ஒன்று கெட்டுப் போகவில்லை.

பெரும் நிறுவனங்கள், செல்வந்தர்கள் ஆகியோருக்கு விதிக்கப்படும் கார்ப்பரேட் வரி, சொத்து வரி, வருமான வரி ஆகியவற்றை கொஞ்சமாக உயர்த்தினாலே கஜானாவிற்கு பணம் வந்து அருவியாய் கொட்டும்.

ஆனால் உங்கள் நண்பர் மோடியோ அதைத்தான் குறைத்துக் கொண்டே இருக்கிறார். உங்களைப் போன்றவர்கள் அந்த சொற்ப வரியைக் கூட கட்டாமல் ஏய்க்கிறார்கள்.

வங்கிகளின் முக்கிய நிதியாதாரம், கொடுத்த கடனுக்கான வட்டி. ஆனால் உங்கள் நண்பர் என்ன செய்கிறார்? அவரது நெருங்கிய நண்பர்கள் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாமல் வெளி நாட்டுக்கு ஓடிப் போக அனுமதிக்கிறார். அவற்றை தள்ளுபடியும் செய்து விடுகிறார். தள்ளி வைப்பு வேறு , தள்ளுபடி வேறு என்று டுபாக்கூர் தாஸ் போன்ற மூடர்களின் கூந்தல் பிளக்கும் விளக்கங்கள் வேறு. போன துட்டு போனதுதான் என்பதுதானே உண்மை!

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனையெல்லாம் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து ஏழை மக்களுக்கு கடன் கொடுத்தால் அவர்கள் நியாயமாக திருப்பிச் செலுத்துவார்கள். அரசு கஜானாவுக்கு பணம் வரும்.

அதைத் தவிர தமிழக அரசு கேட்ட கொரோனா நிவாரண நிதி, ஜி.எஸ்.டி பாக்கித் தொகையை எல்லாம் உடனே அனுப்பச் சொல்லி உங்கள் நண்பருக்குச் சொல்லுங்கள்.

பொருளாதார நடவடிக்கையில் பணத்தின் சுழற்சி முக்கியம். அரசுக்கும் சரி, தனி நபருக்கு சரி.

அதனால் நீங்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை எல்லாம் கொடுத்து விடுங்கள்.

மேலும் அரசின் நிதிச்சுமையை குறைக்க கொரோனா வார்டுகள் அமைக்க ராகவேந்திரா மண்டபத்தை திறந்து விடுங்கள். பராமரிப்பு என்று எதுவும் கிடையாது என்று எங்களுக்கும் தெரியும். 

அது உங்களுக்கும் தெரியும். 

4 comments:

  1. இந்த மாரிதாஸ் சொல்றதையெலாம் உண்மைன்னு நம்பறதுக்கு படிச்ச முட்டாளுங்க நெறைய பேரு இருக்கானுங்க

    ReplyDelete
  2. படிச்ச முட்டாள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சங்கின்னு சொன்னாலே போதும்

    ReplyDelete
  3. எடப்பாடி மறுபடியும் ஆட்சிக்கு வரணுங்கற கவலை. அவ்வளவுதான்

    ReplyDelete
  4. ரஜினி ஏற்காவே மெண்டல்தான்

    ReplyDelete