ஆட்சி உங்களிடம்தான்,
அதிகாரம் உங்களிடம்தான்,
அக்கறையோடு இருப்பதாய்
பெயர் வைத்து
திரட்டிய பல்லாயிரக்கணக்கான
கோடி நிதியும் உங்களிடம்தான்.
ஊடகங்களின் ஆதரவும்
உங்களுக்குத்தான்.
பொய் பரப்பும் சமூக
ஊடகங்கள் கூட
உங்களிடம்தான்.
போலீஸும் உங்களிடம்தான்.
அனைத்து வித குற்றவாளிகளும்
கூட
உங்களிடம்தான்.
எல்லாம் இருந்தும்
ஏதும் செய்யாமல்
இந்தியாவை விற்பது
மட்டுமே உமது வேலையென்றால்
உங்களின் ஆட்சி
தண்டமாய் எதற்கு?
OLX போதுமே!
பிகு : வாட்ஸப்பில் வந்த படத்தைப் பார்த்து தோன்றியது.
அவர்கள் தான் "சுயசார்பு" என்ற அற்புதமான கொள்கையை தேசப்பற்றோடு நமது நாட்டு உழைக்கும் மக்களின் மீதான அளவுகடந்த பாசத்தால் அறிவித்து விட்டார்களே! பிறகென்ன நமது வரிப்பணம் முழுதும் கார்ப்பரேட்டுகள் மூலம் தங்களின் சுயசார்பிற்கு என்பது தான் சூசகமான தகவல் போலும்.கூபா சிறிய தீவு நாடு கடந்த 50ஆண்டுகளுக்கும் மேல் உலக ஆதிக்க நாடான அமெரிக்காவை எதிர்த்து பொருளாதாரத் தடைகளையும் தாங்கிக் கொண்டு பசிக்கும் பிணிக்கும் தற்சார்போடு இருப்பதைக்கொண்டு அனைவரும் சிறப்புடன் வாழும் பயிற்சியால் தான் அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசம்.அதனால் தான் இலவச மருத்துவக கல்வி கிடைக்கப்பெற்றதால் தான் மோசமான கொரோனா காலத்திலும் உலக மனித இனம் காக்கப்பட 2 லட்சம் கூபா நாட்டு மருத்துவர்கள் தலா 2000 பேர் வீதம் சுமார் 100 நாடுகளில் அச்சமின்றி சுழன்று சேவை செய்து வருகிறார்கள்.அது போன்ற சுயசார்பினை நமது அண்ணன்களும் அக்காமார்களும் தெய்வத்தொண்டர்களும் அறிவித்து விட்டதாக நப்பாசை கொள்ளாதீர் மக்களே!ஊரடங்கு உத்திரவு மட்டும் தான் நாங்கள் போடுவோம்.எப்பவும் போல ரேஷன்ல கொடுப்பதை கொடுப்போம்.அதற்கப்புறம் உங்கள் சுயசார்பு தான்.நீங்களே பிச்சை எடுக்கணும் நீங்களே மனித சேவை என்று சொல்லி பிச்சை போட்டுக்கணும்.இது தான் இந்திய நாட்டு மக்கள் நமக்கான சுயசார்புக் கொள்கை.மலைமலையாய் நம் செல்வத்தை குவித்துக்கொண்டிருப்போருக்கு இன்னும் கூடுதலாகக் குவித்துககொள்ள உதவினால் நம் நாடு உலக முதலாளிகள் பட்டியலில் முதலிடம் பெறுவோம்.அப்புறம் நாம வல்லரசு நாடு தான்.இந்த மாதிரி சுயசார்புக் கொள்கையால் கூபாவை விட சிறப்பான மருத்துவக் கல்வி கோடிக்கணக்கில் கல்விக் கார்பரேட்டுகள் ஏலம் விட்டாலும் அதெல்லாம் நமக்கானதல்ல என்று 98% மக்கள் ஒதுங்கி அவரவர்க்கான தொழில் எதுவோ அதைக் கொடுப்பனையாக ஏற்று சுயசார்பு சிந்தனையோடு வாழப்பழகிக்கொள்ள வேண்டும்.அதைவிட்டு தர்மம் உரிமை அப்டின்னு கேட்டு ரோட்டுக்கு வந்தீங்க இன்னொரு வைரஸுக்காக ஊரடங்கு வந்தாலும் வரும்.உஷாரா சுயசார்போட எல்லா பிரச்சனைகளோடும் வாழப்பழகிக்கோங்க.உங்கள் வரிப்பணத்திலிருந்து எதையும் கேட்டிடாதீங்க.அது தேச விரோதக் குற்றமாகிவிடும்.உங்கப்பணம் மொத்தம் நாம் வல்லரசு நாடு ஆவதற்கு மட்டும் தான்.எங்களைக் கேள்வி கேட்டால் ஆண்டவனைக் கேட்பதற்குச்சமம் எல்லாம் அவன் செயல்.அவன் மீது பாரத்தைப் போடுங்க.சுயசார்போடு வாழலாம் என்று சொல்லாமல் செய்வது போலத் தோன்றுகிறது தோழர்களே
ReplyDelete