Thursday, May 7, 2020

சத்யராஜ் பாணியில் "85 % கட்டண மோசடி"


சம்பளம் கேட்கும் வடிவேலுவை திருப்பி அனுப்ப சத்யராஜ் போடும் கணக்கு போலவேதான் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்தியரசு செலவழிப்பதாக சொல்லும் 85 % கட்டணத்தில் மத்தியரசு பங்கு அமைந்துள்ளது.

அது எப்படி என்று சத்யராஜ் பாணியிலேயே சொல்கிறேன்.

இந்த ட்ரெயினில ஏ.சி கோச்சு கிடையாது. அதனால அதுக்கு ஒரு 25 %

பொதுவா டாய்லெட்டுல கூட நிக்க இடம் இல்லாத அளவுக்கு டிக்கெட் கொடுப்போம். இப்போ குறிப்பிட்ட எண்ணிக்கைதான். அதுக்கு ஒரு 20 %.

காட்பாடியில இருந்து சென்னை, சென்னையில இருந்து விஜயவாடா, விஜயவாடாவில இருந்து புவனேஸ்வர், புவனேஸ்வரில இருந்து கொல்கத்தா என வழி டிக்கெட்டா ஏத்தினா கூடுதல் துட்டு. இப்போ பாயிண்ட் டு பாயிண்ட் தான். அதுக்கு ஒரு 10 %.

தொழிலாளர்களை இறக்கி விட்டு விட்டு சுத்தம் செய்யப் போறோம். அதுக்கு ஒரு 10 %.

இறக்கி விட்டுட்டு காலியாத்தான் திரும்பி வரப் போகுது (அப்படித்தான் கணக்கு காண்பிக்கப் போறோம்) . அதுக்கு ஒரு 30 %.

கூட்டிப் பாருங்க 90 % வரும். அந்த 5 % ஐ தொழிலாளி தரப் போறானா இல்லை மாநில அரசு தரப் போகுதான்னு சொல்லுங்க. இல்லைன்னா சோனியா காந்தி கிட்ட வாங்கிக் கொடுங்க . . .

1 comment:

  1. மோசடிக்குன்னே பொறந்தவனுங்க

    ReplyDelete