Sunday, May 17, 2020

அருமையான தலைவரின் எளிய நடனம்


நேற்று மறைந்த தோழர் கே.வி அவர்களைப் பற்றிய செய்திகளோடு முக நூல் நிரம்பியுள்ளது. 

தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் தோழர் களப்பிரன் கீழேயுள்ள காணொளியை பின் வரும் செய்தியோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.



தோழர் #கே_வரதராஜன் எவ்வளவு ரசனை மிக்க உயிரோட்டமான தோழர் என்பது அவரை நெருக்கமாக பார்த்த அத்தனை தோழர்களுக்கும் நன்கு தெரியும். சில நேரங்களில் தன்னை மறந்து அவர் பாடுவதையும் பல தோழர்கள் கேட்டிருப்பீர்கள். இந்தக் காணொளி ஒரு மாநாட்டு மேடையின் இடைவேளையில் தோழர்களை உற்சாகப்படுத்த தோழர் கே.வி.அவர்களின் உற்சாகம் மிகுந்த ஆட்டம். இத்தனை உற்சாகமாக அவர் ஆடிப்பாடிய போது, அவர் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வரை இருந்தார். இருந்தபோதும் அவர் ஆடுவார், பாடுவார். அவர் தான் தோழர் கே.வி. அந்த உற்சாகத்தை தான் இன்று நாம் இழந்திருக்கிறோம்.

No comments:

Post a Comment