Thursday, May 7, 2020

பிரதமர் அலுவலகத்தில் ஐவர்



அனைத்து அரசு, பொதுத்துறை, தனியார் துறை ஊழியர்களும் கண்டிப்பாக தரவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்தியரசு கட்டாயப் படுத்துகிற "ஆரோக்கிய சேது" செயலி பாதுகாப்பற்றது என்றும் அதன் மூலம் ஊழியர்களை உளவு பார்க்க முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்படியெல்லாம் கிடையாது, அது பாதுகாப்பானது என்று வழக்கம் போல அரசு மறுத்துக் கொண்டிருந்தாலும் 

இணைய தளங்களை கடத்துபவர் (Hacker) ஒருவர், பாதுகாப்பானது என்று சொல்லப்படுவதெல்லாம் உடான்ஸ் என்று அம்பலப்படுத்தி உள்ளார்.


நேற்று மட்டும்
பிரதமர் அலுவலகத்தில் ஐவருக்கு உடல் நிலை சரியில்லை,
இந்திய ராணுவத் தலைமையகத்தில் இருவருக்கு உடல் நலனில்லை.
இந்திய நாடாளுமன்றத்தில் ஒருவருக்கும்
உள்துறை அமைச்சகத்தில் மூவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இது போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா

என்று கேட்டுள்ளார்.

இதற்கு அரசிடமிருந்தோ, அந்த செயலியை உருவாக்கியவர்களிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை.

அது என்ன, இந்த அரசு சொல்வதெல்லாம் 
தேவையில்லாத ஆணியாகவே இருக்கிறது?

பிகு : நான் இன்னும் அந்த செயலியை தரவிறக்கம் செய்யவில்லை. அப்படி செய்துதான் ஆக வேண்டும் என்றால் ஆண்டிராய்ட் போனிற்கு பதிலாக சாதா போனிற்கு மாறி விடலாம் என்ற சிந்தனையில் உள்ளேன். 

No comments:

Post a Comment