ஊரடங்கு தளர்த்தப்படுமா?
ஊரடங்கு 4.0 புதிய வடிவில் இருக்கும். 18 ம் தேதிக்கு முன்பு தெரியும்.
இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?
உலகிற்கு இந்தியா "யோகா"வை அளித்துள்ளது.
எங்கள் வேலை பிழைக்குமா?
ஒரு நாளைக்கு 2 லட்சம் மாஸ்க் தயாரிக்கிறோம்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது?
சுய சார்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்
பொருளாதாரம் மேம்படுமா?
20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
மக்களுக்கு அல்ல என்று தெரியும், இருப்பினும் அந்த பணம் யாருக்கு?
அதை நிர்மலா அம்மையார் அறிவிப்பார்
சரி கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படுமா?
கொரோனாவா அப்படியென்றால்?
துப்பாக்கி க்ளைமேக்ஸில் விஜய் "சஸ்பென்ஸோடயே செத்துப் போ" என்று சொல்லி வில்லனை சுடுவார்.
இந்திய மக்களை இங்கே பிரதமர் "சஸ்பென்ஸோடயே வாழுங்கடா" என்று சொல்கிறார்.
பிகு: சிவப்பு நிறத்தில் உள்ளது எட்டு மணி வெள்ளியங்கிரியிடம் இன்னும் அப்பாவியாய் இருக்கும் சில மக்கள் எதிர்பார்த்தது.
நீல நிறத்தில் உள்ளது : அதை நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன?
No comments:
Post a Comment