Sunday, May 3, 2020

வெப்பத்தை விட பசி கொடிது . . .



இன்று காலை நாளிதழில் பார்த்த செய்தி மனதை மிகவும் வேதனைப் படுத்தியது.

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் மும்பையில் வேலை பார்க்கிறார்கள்.

ஊரடங்கு காரணமாக வேலையோ கூலியோ கிடைக்காத காரணத்தால் எதுவானாலும் வீட்டிற்கு வந்து விடுவோம் என்று மும்பையிலிருந்து புறப்பட்டுள்ளார்கள்.

அதற்காக அவர்களுக்குக் கிடைத்த வாகனம் என்ன தெரியுமா?

பெரும் கட்டுமானப் பணிகளில் கான்க்ரிட் கலவை போடும் லாரிகள். லாரியில் ஓட்டுனர் இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்து வரவில்லை.

கான்க்ரிட் கலக்கப்படும் பகுதி இருக்கிறதல்லவா, அதிலே ஒளிந்து கொண்டு வந்துள்ளார்கள். 

பாவம், அவர்களின் நீண்ட பயணம் வெற்றிகரமாக முடியவில்லை. மத்தியப் பிரதேசத்தில் அவர்கள் கண்டறியப்பட்டு விட்டார்கள். குவாரண்டைன் முகாமில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படி அந்த கலவை இயந்திரத்திற்குள் அமர்ந்து வந்துள்ளீர்களே, அந்த வெப்பம் உங்கள் சுடவில்லையா என்று கேட்டதற்கு அந்த தொழிலாளர்களில் ஒருவரான மனோஜ் யாதவ் சொல்லியுள்ளார்.

"பசியை விட அந்த வெப்பத்தை தாங்குவது சிரமமாக இல்லை"


No comments:

Post a Comment