Tuesday, May 12, 2020

இதுவும் இந்தியாதான்



தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளேன். இதுதான் உண்மையான் இந்தியா. இதனை சிதைக்க பில்லா-ரங்கா கூட்டாளிகள் முயற்சிக்கின்றனர். அதனை நாம் அனுமதிக்கக் கூடாது.


இவர் பெயர் ஜாஹித் அப்துல் மஜீத். தில்லி எய்ம்ஸ் மருத்துவர். காஷ்மீர் மாநிலத்தவர்.


ஆம்புலன்சில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ள ஒரு கோவிட் 19 நோயாளியுடன் வந்துகொண்டிருந்தார். அந்த நோயாளிக்கு ஆக்சிஜன் வாய்மூலமாகசென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஆக்சிஜன் குழாய் இடறிவிட்டது. அது சரி செய்யப்படவில்லை எனில் நோயாளி இறந்துவிடுவார். ஆனால் அதை சரிசெய்ய வேண்டும் எனில் மருத்துவர் தனது பாதுகாப்பு தலை கவசத்தையும் உடையையும் களைய வேண்டும். அப்படி களைந்தால் வைரஸ் அவருக்கு தொற்றும் அபாயம்!


என்ன செய்வது?


மருத்துவர் கவசத்தை களைந்தார். குழாயை சரியாக தொண்டை வழியாக மூச்சு குழாயில் செலுத்தினார். உயிரைக் காப்பாற்றினார்.

மருத்துவர் உடனடியாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டார்.

மருத்துவரின் தந்தை தொலை பேசியில் கூறினார்:

“உனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இறந்தாலும் நான் துக்கப்பட மாட்டேன். ஏனெனில் நீ ஒரு உயிரை காப்பாற்றினாய். நீ இறந்தால் தியாகி! நான் அப்படித்தான் நினைப்பேன்”

சங்கிகளே! தெரிந்து கொள்ளுங்கள்! இதுதான் மனித நேயம்; இதுதான் இந்தியா!

அன்வர் உசேன்

No comments:

Post a Comment