கொரோனா காலத்தை பயன்படுத்திக் கொண்டு கேவலமாக செயல்படுகிறது மத்தியரசு.
இருபது லட்சம் கோடி ஊக்கத்தொகை என்ற பெயரில் இந்திய மக்களின் சொத்துக்களை எல்லாம் தங்களுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக எலும்புத்துண்டுகளை வீசுகிற முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அறிவிப்புக்கள் மேல் அறிவிப்பாக தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருக்கிறார் தமிழகத்திற்கு களங்கம் சேர்க்கும் நிர்மலா அம்மையார்.
அமித் ஷா ஏனோ தலை மறைவாக இருக்கிற காரணத்தால் ஆணவமாக பேசுவதற்கும் அந்த அம்மையாரையே பயன்படுத்துகிறார் மோடி.
அனைத்தையும் விற்பது என்பதைத்தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத அரசு.
இன்று இந்தியா ஏதோ கொஞ்சமாவது உருப்படியாக இருக்கிறது என்றால் அதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே காரணம்.
"வந்தே பாரத்" என்று வெளி நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை (மோசடிப் பேர்வழிகள் உட்பட) அழைத்து வருவதற்கு பொதுத்துறை நிறுவனம் ஏர் இந்தியாதான் பயன் பட்டது என்பதை மறக்கக் கூடிய அளவில் இருக்கிறது இவர்களின் முதலாளிகள் விசுவாசம்.
பாதுகாப்புத்துறையில் மட்டும் பொதுத்துறை நிறுவனம் இருக்குமாம். போர் விமான உற்பத்தியையே திவாலாகிப் போன அம்பானி கிட்ட கொடுத்திட்டீங்க. 75 % அன்னிய முதலீடு உண்டு என்றும் சொல்லிட்டீங்க! இன்னும் என்ன மிச்சம் இருக்கு அம்மையாரே?
ராணுவ வீரர்களுக்கு ரொட்டி சுட்டுத்தரும் வேலையையாவது இந்தியர்களுக்கு விட்டு வைப்பீர்களா?
No comments:
Post a Comment