Wednesday, May 13, 2020

அதிகார வர்க்க திமிர்



வாணியம்பாடியில் நடந்துள்ள அராஜகம் இது. 



காணொளியை பார்க்கையிலேயே நெஞ்சம் கொதிக்கிறது.

தனி மனித இடைவெளியை பின்பற்றவில்லை என்று சொல்லி அந்த நகராட்சி ஆணையாளர் சிசில் ஜோசப் என்பவர் நிகழ்த்திய கொடூரம் இது. விதிகளை மீறினார்கள் என்றால் வழக்கு போடுங்கள், பொருட்களை பறிமுதல் செய்யுங்கள்.

அதை விடுத்து திரைப்பட ரௌடிகள் போல நடந்து கொள்ளும் உரிமையை யார் தந்தது?

அவர் நாசமாக்கியதெல்லாம் பழங்கள். அதன் மதிப்பு தெரியுமா? அதை உருவாக்க விவசாயி போட்ட உழைப்பு தெரியுமா? அந்த விவசாயி சந்தித்த கண்ணீர் தெரியுமா? 

குப்பைக்கு போன பழங்கள் எத்தனை ஏழைகளின் பசியை போக்கியிருக்கும் என்பதாவது தெரிந்திருக்குமா?

ஏழை, நடைபாதை வியாபாரிகளிடம் காண்பித்த இவரது வீரம் செல்வந்தர்களிடம்  செல்லுபடியாகுமா?

அதிகார வர்க்க திமிருடன் நடந்து கொண்ட இந்த மனிதன் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். 

4 comments:

  1. அதிகாரத் திமிர்.சட்டத்தை இவர் சரியாக அனைவரிடமும் கடைபிடிப்பாரா? மன்னிப்பு கேடாடால் போதுமா. நஷ்டஈடு யார் தருவார்கள்?

    ReplyDelete
  2. அதிகாரத் திமிர்.சட்டத்தை இவர் சரியாக அனைவரிடமும் கடைபிடிப்பாரா? மன்னிப்பு கேடாடால் போதுமா. நஷ்டஈடு யார் தருவார்கள்?

    ReplyDelete
  3. உணவை மண்ணில் வீசும் இவனுக்கு ஒன்று வாயில் அல்லது வயிற்றில் புற்று வரும்.
    அல்லது அவன் சந்ததி பட்டினி தான். சொல்லுகின்ற வார்த்தைகளும் செய்கின்ற காரியங்களும் நம்மை தொடரும். முட்டாள் இவன் படித்தது வீண்.

    ReplyDelete
  4. உணவை மண்ணில் வீசும் இவனுக்கு ஒன்று வாயில் அல்லது வயிற்றில் புற்று வரும்.
    அல்லது அவன் சந்ததி பட்டினி தான். சொல்லுகின்ற வார்த்தைகளும் செய்கின்ற காரியங்களும்
    நம்மை தொடரும். முட்டாள் இவன் படித்தது வீண்.

    ReplyDelete