Saturday, June 13, 2020

"பாரதிராஜாவின் கண்கள்" மறைந்தாலும்



16 வயதினிலே படம் தொடங்கி கல்லுக்குள் ஈரம் வரை பாரதிராஜா படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்தவர் திரு நிவாஸ். 

நிழல்கள் படத்தில் வேறு ஒளிப்பதிவாளர் என்ற செய்தி கிடைத்த போது இந்த கூட்டணி எப்படி இருக்குமோ என்று கவலைப்பட்ட ரசிகர்கள் நிறைய பேர் உண்டு.

ஆனால் அப்படியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை நிழல்கள் படத்திலேயே தன் ஒளிப்பதிவு மூலமாக பதிலளித்தவர் திரு பி.கண்ணன்..

பிரபல இயக்குனர் திரு பீம்சிங் அவர்களின் மகன், எடிட்டர் திரு பி.லெனின் அவர்களின் சகோதரரான திரு பி.கண்ணன், பின்னர் "பாரதிராஜாவின் கண்கள்" என்றே அழைக்கப்பட்டார்.

திரு பி,கண்ணன் இன்று காலமானார்.

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.

திரு பி.கண்ணன் மறைந்தாலும் பாரதிராஜாவின் கண்களாக அவர் உருவாக்கிய படங்கள் இருக்கும், உயிரோடே . . .

அவரது ஒளிப்பதிவில் உருவான இரு பாடல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.





இன்னும் சில பாடல்களின் யூட்யூப் இணைப்பையும் பகிர்ந்து கொள்கிறேன்





3 comments:

  1. புதிய சகாப்தம் படைத்தவர்
    நினைவுற்றார்

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete