கொரோனா காலத்தை பயன்படுத்தி மத்தியரசு பல்வேறு விதமான தாக்குதல்களை மக்கள் மீது தொடுத்து வருகின்றது என்றால்
நாங்களும் மோடி வகையறாக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல
என்பதை
தமிழக காவல்துறையும் நிரூபித்து வருகிறது.
ஊரடங்கு காலத்தில் கடையைத் திறந்திருந்தார்கள் என்ற காரணத்தால் ஏற்கனவே ஒரு முதியவரை மதுரையில் அடித்துக் கொன்றார்கள்.
இப்போது தந்தை மகன் என்று இருவரை சாத்தான் குளத்தில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.
கடை திறந்த குற்றத்திற்கு மரண தண்டனையா?
ஆணவக்கொலை செய்தவர்கள் விடுதலையாகி வரும் அதே நாளில் ஒரே குடும்பத்தின் இரு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.
இது கொரோனா காலத்து கொடூரம் மட்டும் அல்ல.
காக்கிச்சட்டைகளுக்குள் எப்போதும் ஊறியிருக்கிற ரத்த வெறிதான்.
அதை மேலிடம் திட்டமிட்டு வளர்க்கிறது.
அதனால்தான் வெறும் பணியிட மாறுதலோடு அந்த கொலைகாரர்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று வணிகர் சங்கம் கடையடைப்பு அறிவித்துள்ளது நல்ல விஷயம்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக நாமும் குரல் கொடுப்போம், குறைந்த பட்சம் சமூக வலைத் தளங்களிலாவது . . .
No comments:
Post a Comment