வேறு மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் என்ற நிலையை கேரள அரசு எடுத்துள்ளது.
அப்படியெல்லாம் செய்யக்கூடாதாம். அப்படி செய்யப்படாமல் சுதந்திரமாக அவர்களை அனுமதித்து அவர்கள் மூலம் கொரோனா பரவவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது கேரள காங்கிரஸ் கட்சியின் ஆசை.
விமானத்தில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யக்கூடாது என்று வலியுறுத்தி கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
அதை துவக்கி வைத்த கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் முன்பு நிஃபா இளவரசி என்று அழைக்கப்படுவதற்கு முயற்சி செய்தார்.
இப்போது கோவிட் ராணி ஆக முயற்சி செய்கிறார்
என்று பேசி உள்ளார்.
உலகம் முழுதும் தோழர் ஷைலஜா டீச்சர் பாராட்டப்படுவது இந்த மர மண்டைகளுக்கு வயிற்றெரிச்சல் போல. அதனால்தான் அந்த மனிதர் இவ்வளவு கேவலமாக பேசுகிறார்.
கேரளாவில் சங்கிகளுக்கும் காங்கிரஸ்காரனுங்களுக்கும் இடையில் எந்த வித்தியாசம் கிடையாது என்பதை இவர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சபரிமலை சர்ச்சையில் இருவரும் கூட்டுக் களவாணிகள்தானே!
காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக இருக்கிற சோனியா காந்தியும் ஒரு பெண்தானே!
தன் கட்சியின் மாநிலத் தலைவர் ஒரு பெண்ணை படு கேவலமாக பேசியுள்ளதை அனுமதிக்கிறாரா? அல்லது ரசிக்கிறாரா?
முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சோனியா காந்தி ரசிக்கிறார் என்றுதான் அர்த்தம்.
இப்படியே போனால் காங்கிரஸ் கட்சி சீக்கிரமே அழிந்து போகும்
No comments:
Post a Comment