Wednesday, June 3, 2020

இறந்தும் அச்சுறுத்தும் கலைஞர்


கலைஞரின் பிறந்த நாளான இன்று அவரை இழிவு படுத்துவதேயே ஒரு பிழைப்பாக இன்று சிலர் நடத்தி வருகிறார்கள். இது குறித்து  நான் சுருக்கமாக எழுத நினைத்ததை மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழ உறுப்பினரும் வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு விரிவாகவே எழுதியுள்ளதால் அதனை அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.

பேராசான் காரல் மார்க்ஸ்,
அண்ணல் அம்பேத்கர்,
தந்தை பெரியார்

ஆகிய மூவர்தான் தங்களின் எதிரிகளை இறப்பிற்குப் பின்னும் அச்சுறுத்தி வருபவர்கள்.  எப்படியெல்லாம் இழிவு படுத்த முடியுமோ அப்படியெல்லாம் இழிவு படுத்த முயன்று கடைசியில் தோற்றுப் போவார்கள்.

அதே போல கலைஞரைக் கண்டும் அவரது எதிரிகள், அவரது இறப்பிற்குப் பின்னும் அஞ்சுகிறார்கள், திட்டுகிறார்கள், இழிவு செய்கிறார்கள் என்றால் அதற்கு கலைஞருக்கு பெருமைதான்.



கலைஞர் பிறந்த நாள்

 இணைய வெளியில் காலை முதல் தமிழக முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூறும் வகையில் பலவகையான பதிவுகள் பதியப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக நண்பர்கள் அவரது சாதனைகளை, வாழ்வின் சிறப்புகளை எடுத்து பதிவிட்டுவருகின்றனர்.


ஆனால் அதற்கும் அதிகமாக கலைஞரை இழிவுப்படுத்தும் பதிவுகள் பகிரப்பட்டு வருவது திட்டமிட்ட இயக்கமாக மேற்கொள்ளப்படு வருவதை புரிந்துக்கொள்ள முடிகிறது. பொதுவாழ்வில் உள்ள எவரும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர் என்றோ, மிகப்பெரிய ஆளுமையாக வாழ்ந்து மறைந்த எவரும் விவாதத்திற்கு அப்பார்பட்டவர் என்றோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் கொள்கைகளை, அவர்களின் சமூக பங்களிப்பை விவாதத்திற்கு உட்படுத்துவது சரியானதுதான்.

 ஆனால் தரம் தழ்ந்த விமர்சனமும், தனி மனித குரோதமும், சாதி அடிப்படையில் பகடியும், மறைந்த தலைவரின் ஒட்டுமொத்த வாழ்வையும் கொச்சை படுத்தும் பதிவும், குடும்ப உறுப்பினர்கள் அரசியல் இருப்பதாலே அவர்களை இழிவு படுத்துவதும், அவர் பிறக்கவில்லை என்றால் தமிழகமே செழிப்பாய் இருந்திருக்கும் என்றும் பிதற்றுவதும்  இன்றைய தினத்தில் அளவுக்கு அதிகமாக பகிறப்படுகிறது.

 மூன்று வகையில் இந்த தாக்குதல் நடக்கிறது. ஒன்று நாம் தமிழர் இயக்க நண்பர்கள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், தமிழ் இன உணர்வாளர்களாக தங்களை காட்டிக்கொள்ள, இன வெறியர்களாகவே மாறி மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் கலைஞரை அசிங்கப்படுத்தி பதிவிடுவது பார்க்கமுடிகிறது.

 இரண்டு அதிமுக நண்பர்கள் வழக்கம் போல தனிநபர் துதிபாடல் வழமையை பயன்படுத்தி தங்கள் எதிர் கட்சி தலைவரை வசைபாடுவது தொடர்கிறது.

 மூன்றாவது பாஜக, ஆர்.எஸ்.எஸ் இணைய கூலிகள்  நடத்தும் நாராசமான தாக்குதல்.  இவர்கள் கலைஞர் என்ற பிம்பத்தை உடைக்க கடும் முயற்சியில் இறங்கி உள்ளனர். எவ்வுளவு கீழ்தரமாக பதிவிடமுடியுமோ அவ்வுளவு கொச்சையாக பதிவிடுகின்றனர். இதில்  போலி முகவரிகள் அதிகம்.  பிராமணரல்லாதோர் இயக்கம் துவங்கிய தமிழ்கத்தின் ”ஒரு தத்துவ” பின்புலம் அவர்களை மிகவும் இம்சிப்பது புரிந்துக்கொள்ள முடிகிறது. தமிழ்க அரசியல் கலாச்சாரம் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு உவப்பாக இல்லை என்பது தெரிந்து, அவர்கள் முகம் மறைத்து கடும் தாக்குதலுக்கு செல்ல காரணமாகிறது. 

 பிரமாணரல்லாதோர் இயக்கம், தென்னிந்திய நல உரிமை கழகம், சுயமரியதை இயக்கம், திரவிட இயக்கம் குறித்தெல்லம் விவாதிப்பது அவசியமே. ஆனால் அவை அரசியல் தத்துவார்த்த நிலைபாடுகள் மீது இருக்க வேண்டும். ஆனால் அவைகளை புறம் தள்ளி தனிநபர் தாக்குதல் தொடுப்பது கொடுமைதான். ஆனால் இந்த தனிநபர் தாக்குதல் என்ற அரசியல், மேடைகளில் ஒருமையில் விளிபதும், பால் சார்ந்து கொச்சையாக பேசுவதும், தலைவர்களின் குடும்ப அந்தரங்கங்களை ஹாஸ்யமாக ஒலிப்பெருக்கியில் இடைவெளி விட்டு பேசுவதும் இரண்டு திராவிட இயக்கங்களும் விதைத்த விதை என்பதை மறுத்திட முடியாது. 

  அந்த பாணியை இப்போது மிகவும் வசதியாய் ஆர்.எஸ்.எஸ் கூட்ட இணைய சங்கிகள் பயன்படுத்துகின்றனர். கொடுமை என்னவெனில் இவர்கள் பதிவுகளை அப்படியே நாம் தமிழர் தம்பிகள் பதிவிடுவதுதான். மே மாதம் துவங்கியது கலைஞர் பிறந்த நாளுக்கு எதிரான தாக்குதல். மிகவும் திட்டமிட்டு கேலி சித்திரங்கள்  உருவாக்கப்பட்டு பரப்பபட துவங்கி அதையே இயக்கமாய் முன்னெடுத்துள்ளனர்.

 என் நண்பன் ஒருவனின் முகநூல் பதிவுகளை மே மாதம் துவங்கி கவனித்து வருகிறேன். அவன் ஒரு நாம் தமிழர் இயக்க ஆதரவாளன். கொஞ்சம் காவி நிறமும் உண்டு. (அது சரி இனவெறியும் மதவெறியும் கைகோற்பது இயல்புதானே) ஆனால் அவனது பதிவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தோ, வாயல் வடை சுடும் மத்திய அரசு குறித்தோ எந்த கண்டனமும் இல்லை. போனால் போகிறது என ஒரு பதிவு. 

 ஆனால் பி.எம் கேர்ஸ் என்ற பெயரில் கோடி கோடியாய் பணத்தை குவித்து, அது தனி அறக்கட்டளை என பேசும் பிரதமர் குறித்தோ, அல்லது நாடெல்லாம் சாலைகளில் செத்து விழும் மக்கள் குறித்தோ, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்த பின்பும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வு நடந்தது குறித்தோ, கோவை மகா சிவராத்திரி குறித்தோ எந்த கண்டனமும் இல்லை.

 ஆக கொரோனா தோல்வியை அல்லது மத்திய அரசின் கையாலாகாதனத்தை மூடி மறைக்க சீனா, தப்ளிக், பின் தனி மனித தாக்குதல் என திசை திருப்பும் வேலையை ஆர்.எஸ்.எஸ் கூட்டம் மிகவும் கவனத்துடன் அமலாக்கி வருகிறது.  இப்போது கலைஞரை வசை பாடுகின்றனர். நாளை மற்றொருவரோ அல்லது ஒரு சம்பவமோ அவர்களுக்கு கிடைக்ககூடும்.

 நிச்சயம் அவர்களால் நேர்மையக விவாதிக்க முடியாது. அவர்களது வரலாறு அதுதான். ஆனால் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கலைஞர் என்ற ஆளுமையை அவரது கொள்கை சாராது கொச்சை படுத்துவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இன்று கலைஞர், நாளை எந்த ஒரு தலைவருக்கும் இது நீண்டு செல்ல வாய்புகள் அதிகம் உள்ளது.

 எனவே கலைஞர் குறித்த தனிமனித தாக்குதலை வன்மையாக கண்டனம் செய்வோம்.    

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு


No comments:

Post a Comment