இந்திய சீன எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்கம் அசன்சாலில் பாஜகவினர் சீன அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி சீன அதிபரின் கொடும்பாவியை எரித்துள்ளார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை வட கொரிய அதிபர் “கிம் ஜாங் உன்” தான் சீன அதிபர். ஆமாம் அவர்கள் கண்டித்ததும் கொடும்பாவி எரித்ததும் “கிம் ஜாங் உன்” னைத்தான். ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அந்த பெயரைத்தான் சொல்கிறார்கள். சீன அதிபர் ஜி.ஜின்பிங் என்பதை அவர்கள் அறியவேயில்லை.
அதற்காக அவர்களை சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.
அவர்களை கலாய்ப்பதை நான் கண்டிக்கிறேன்.
யார் அவர்கள்?
மோடியின் விழுதுகள்.
எத்தனை பேருடைய பெயரை மோடி தவறாகச் சொல்லி இருக்கிறார் !
மகாத்மா காந்தியையே மோகன்லால் கரம்சந்த் காந்தி என்று சொன்ன அறிவாளி அல்லவா!
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்!
தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அதே வழியே.
நீங்கள் கலாய்க்க வேண்டுமென்றால்
“உங்களால்தான் உங்கள் தொண்டர்களும் உங்களைப் போலவே இருக்கிறார்கள் என்று சொல்லி அவரை கலாயுங்கள்
No comments:
Post a Comment