Sunday, June 21, 2020

இத்தனை நாள் கவனிக்கவேயில்லையே!



தமிழ்த் திரைப்படங்களில் முத்திரை பதித்த நகைச்சுவைப் படம் "காதலிக்க நேரமில்லை"

சமீபத்தில்தான் எங்கோ படித்தேன்.

அந்த படத்தை மீண்டும் தயாரித்து இயக்க நினைத்த ஒரு இயக்குனர், டைரக்டர் ஸ்ரீதரிடம் அனுமதி கேட்க, அவர் ஹீரோ யார் என்று கேட்டாராம்.

முத்துராமன், ரவிச்சந்திரன் வேடங்களில் நடிப்பதற்கான இன்றைய நடிகர்களின் பெயரைச் சொன்ன போது "நான் ஹீரோ யார் என்று கேட்டேன்"  என்று ஸ்ரீதர் அழுத்தமாக சொல்லியுள்ளார்.

இயக்குனர் முழித்த போது ஸ்ரீதர், காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டிலை மீண்டும் பார்க்கச் சொல்லியுள்ளார்.

அதைப் படித்த பின்பு நானும் பார்த்தேன்.



ஆமாம் அந்த ஹீரோ பாத்திரத்திற்கு இன்று ஆட்கள் கிடைப்பது சிரமம்தான்.


பிகு: இன்று முழுதுமே அரசியல் இல்லாத பதிவுகள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் வேறு வழியில்லாமல் முதல் பதிவு அரசியல் பதிவாகி விட்டது

No comments:

Post a Comment