கேரளாவில் "கடக்கல்" என்ற ஊரில் அனிலன் என்பவர் "கொரோனா தேவி" கோயிலை தன் வீட்டிலேயே உருவாக்கியுள்ளார் என்பதை இன்றைய ஹிந்து நாளிதழ் சொன்னது.
இந்து மதத்தில் ஏற்கனவே 33 கோடி கடவுள்கள் உள்ளதாகவும் கேரளாவில் "பெரியம்மை" உள்ளிட்ட சில தொற்றுக்களுக்கு ஏற்கனவே கோயில் உள்ளதால் "கொரோனா தேவி" ஆலயம் ஒன்றும் புதிதோ, தவறோ இல்லை என்பது அவர் வாதம்.
வழிபாட்டுத்தளங்களை திறப்பது என்ற முடிவுக்கு எதிராக தான் கொரோனா தேவி ஆலயத்தில் யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறும் அனிலன், தான் நியமப்படி எல்லா பூஜைகளையும் செய்வதாகவும் பக்தர்கள் விரும்பினால் தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார்.
கொரோனா தேவி விக்ரகம், கருங்கல்லிலோ, சலவைக்கல்லிலோ அல்லது ஐம்பொன்னிலோ செய்யப்படவில்லை. வெறும் தெர்மகோலில் செய்யப்பட்டதுதான்.
கேரளா பைத்தியக்காரர்களின் தேசம் என்று ஒரு முறை விவேகானந்தர் சொல்லியுள்ளார். நாராயண குருவும், ஐய்யங்காளியும், ஈ.எம்.எஸ் உம் பல இடது முன்னணி அரசுகளும் விழிப்புணர்வை உருவாக்கி, அறிவுத்தளத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி அந்த அவப்பெயரை நீக்கினார்கள்.
அனிலன் போன்றவர்களும் சங்கிகளும் கேரளாவை "பிராந்தன்கள் பிரதேசம்" ஆக மீண்டும் முயல்கிறார்கள்.
அது நடக்காது.
No comments:
Post a Comment