Saturday, June 6, 2020

இதையே இப்போதுதான் என்றால்?



புலம் பெயர் தொழிலாளர்கள், சிறப்பு ரயிலில் செல்லும் போது ரயிலிலேயே இறந்து போனது உண்மைதான் என்று மத்தியரசு முதல் முறையாக உச்ச நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

பசியாலும் அலைக்கழிப்பாலும் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள் என்பதை மறுத்து வந்த அரசுதான்

இப்போதுதான் மரணங்கள் நிகழ்ந்ததையே ஒப்புக் கொள்கிறது.

ஆனாலும் 

பசியாலோ அல்லது தண்ணீர் இல்லாததாலோ யாரும் இறக்கவில்லை என்றும் அவர்களுக்கு முன்பிருந்த நோய் காரணமாகவே இறந்தனர் என்று புதிய கதை கட்டியுள்ளது.

மரணங்கள் நிகழ்ந்ததையே இப்போதுதான் ஒப்புக் கொள்கிற அரசு, அவர்களின் மரணத்திற்குக் காரணம் பசியும் பட்டினியும்தான் என்பதை ஒப்புக் கொள்ளுமோ?

எனக்கு நம்பிக்கை இல்லை.

ஏனென்றால் ஏழைகளின் கண்ணீரில் பரவசம் அடையும் சேடிஸ்டுகளின் அரசல்லவா இது!!!

1 comment:

  1. அதிர்ச்சித் தகவலாக இருக்கே!

    ReplyDelete