Sunday, June 7, 2020

கடைசியில காற்றையும் கொடுப்பாங்களோ?




சில தினங்கள் முன்பாக தனியார் துறையைப் பாராட்டி  மோடி பேசியிருந்தார். தனியாரை ஊக்குவிக்கும் விதமாக புதிய சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் சொல்லியிருந்தார்.

“அஞ்சு நாள் அறிவிப்புக்களியே நிர்மலா அம்மையார் எல்லாத்தையும் கொடுத்துட்டாங்களே, இன்னும் என்ன புதுசா இருக்கு தனியாருக்கு கொடுப்பதற்கு?” என்று யோசித்தேன்.

“அத்தியாவசியப் பொருட்கள்” என்ற வரையறையிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை ஒரு அவசரச்சட்டம் மூலமாக அகற்றி விட்டார்கள்.

இந்த பொருட்கள் எல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தின் பிடிக்குள் வந்து விடும். ஆக இவற்றின் விலை குறித்தோ, இவற்றை பதுக்கி வைப்பது குறித்தோ அரசுக்கு எந்த பொறுப்பும் கிடையாது.

ஆன்லைன் வர்த்தகத்தின் பலன் யாருக்குப் போகும் என்பது அனைவரும் அறிந்ததே.

விவசாயிக்கும் நியாயமான விலை கிடைக்காது. இறுதியில் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் பலன் கிடைக்காது.

எல்லாவற்றிலும் இன்று இடைத்தரகர்களாக மாறியுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் பலனடைய மட்டுமே இந்த அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்ட பொருட்களின் உற்பத்தியையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதுதான் காலப்போக்கில் நடக்கப் போகிறது.

அநேகமாக நாம் சுவாசிக்கும் காற்றையும் கார்ப்பரேட்டுக்களுக்கு ஏலம் கொடுப்பதுதான் இப்போதைக்கு மிச்சமிருக்கிறது என்று நினைக்கிறேன்.

மோடியின் ஆட்சி முடிவதற்குள்ளாக அதுவும் நடந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஏனென்றால் இது தரகர்களுக்காக, தரகர்களால் நடத்தப்படும் தரகரகள் ஆட்சி.


1 comment:

  1. கடைசி அத்யாயம் ஒரு நல்ல பஞ்ச்

    ReplyDelete