Tuesday, June 30, 2020

பீட்டா ராதா - எச். ராசா ஏன் மோதல்?







கேரள யானைமரணம் தொடர்பாக எச்.ராசா போட்ட பதிவை இப்போதுதான் பார்த்தேன்.






மனிதர்கள் சாவதை ரசிக்கும் குரூர சிந்தனை உள்ளவர்கள், மிருகங்கள் இறந்து போனால் மட்டுமே பொங்கி எழுவார்கள். இந்த பதிவில் வழக்கம் போல இப்பிரச்சினைக்கு மதச்சாயம் பூசியுள்ள ஹெச்.ராசா, பாலக்காடு  மாவட்ட சம்பவத்தை மல்லப்புரம் மாவட்டம் என்று இடம் மாற்றி இஸ்லாமியர்களை வம்புக்கு இழுத்துள்ளது மட்டுமல்ல, ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் என்று பீட்டாவுடன் சேர்த்து கிறிஸ்துவர்களையும் சாடுகிறார்.

இப்படி எல்லாம் விஷத்தை கக்கவில்லை என்றால் அது எச்.ராசா இல்லை என்பது வேறு விஷயம்.

யானை விஷயத்தில் பொங்கவில்லை என்று பீட்டாவை ஏன் சாடுகிறார் என்பது தெரியவில்லை.

ஏனென்றால் இந்தியாவைப் பொறுத்தவரை பீட்டாவின் பெயரில் ராஜாங்கம் நடத்துவது ராதா ராஜன் அம்மையார்.

அந்த அம்மையார், ராசாவுக்கு நிகராக சிறுபான்மை மக்கள் மீது நச்சு கக்கும் அக்மார்க் சங்கி.

ஒரே அழுக்கு குட்டையில் ஊறிய வெட்டி மட்டைகள்தான் இருவரும்.

அப்படி இருக்கையில்  ராதா ராஜன் அம்மையாருக்கு எதிராக எச்.ராசா பொங்குகிறார் என்றால்  ஏதோ “கோட்டைக்குள் குத்து வெட்டு” என்றுதான் தெரிகிறது.

என்ன கூட்டுக் களவாணிகளுக்குள் எப்போதுமே பங்கு பிரிப்பதில்தானே சண்டை வரும்!

பிகு: எழுதி ரொம்ப நாளா ட்ராப்டிலேயே இருந்தது. எழுதியது விரயம் ஆக வேண்டாம் என்று பகிர்ந்து கொள்கிறேன்.



No comments:

Post a Comment