இன்று
புளிச்ச மாவு சம்பவத்தின் முதலாண்டாம்.
ஜெமோவைப்
பற்றி ஏன்?
இன்று
ஒரு அனாமதேயம்
“ஜெயமோகனை
ஏன் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனாலும்
ரொம்பவே போட்டு அடிக்கறீங்க தோழர் என்று ஒரு சக கோட்டச் சங்கப் பொறுப்பாளர் கூட இன்று
தொலைபேசியில் பேசும் போது சொன்னார்.
ஜெயமோகனோடு
ஏதாவது தனிப்பட்ட பிரச்சினையா என்ன?
தமிழுக்கு
என்று ஒரு எழுத்துரு (FONT) அவசியமில்லை. ஆங்கில எழுத்துருக்களையே அம்மா என்பதற்கு AMMA என்று எழுதலாம் என எப்போது அழுத்தமாக சொன்னாரோ,
அப்போதே இவர் போலி என்பது புரிந்து விட்டது. அதன் பின்பும் அவரது ஆணவமும் அபத்தமான
நிலைப்பாடுகளும் மற்ற படைப்பாளிகள் மீதான வக்கிரமும் தொடர் பொய்களும் வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம் அந்த மனிதனை அம்பலப்படுத்த வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
வாழ்க்கையில்
பொய் இருக்கலாம். எப்போதாவது பொய் சொல்லலாம். ஆனால் பொய்யையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பது
மன நோயின் அடையாளம்.
உதாரணத்திற்கு
புளிச்ச மாவு சம்பவத்தையே எடுத்துக் கொள்வோம்.
ஜெயமோகன்
மருத்துவ மனையில் அனுமதி என்ற தகவல் கிடைத்த சில நிமிடங்களுக்குள்
“வெறும்
வாய்த் தகராறுதான். போலீஸ் கேஸை ஸ்ட்ராங் ஆக்கவே
மருத்துவ மனையில் அனுமதி”
என்ற
உண்மையான தகவலும் கிடைத்து விட்டது.
ஆனாலும்
இன்றைய நாள் வரை
தான்
ஏதோ மிகக் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் காதுக்கும் தாடைக்கும் இடையிலான குருத்தெலும்பு
பாதிக்கப்பட்டதாகவும் இன்னமும் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்.
நடக்காத
ஒரு தாக்குதல் பற்றி அவர் சமீபத்தில் எழுதியுள்ளதை படியுங்கள்.
சென்ற ஆண்டு என்மேல் தாக்குதல் தொடுக்கப்பட்டபோது இணையத்தில் ஒரு பெருங்கும்பல்
கொண்டாட்டமிட்டது. கேலி கிண்டல் வசைகள். அப்போது ஒரு நண்பர், கணிப்பொறித்துறையின் மிக
உயர் பதவியில் இருப்பவர், அப்படி களியாட்டமிட்டவர்களின் முழுப் பட்டியலை எடுத்து எனக்கு
அனுப்பினார்.
அவ்வாறு வசைபாடியவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள்
மாற்று மதத்தவர். வெறும் மதக்காழ்ப்புதான் அவர்களின் உந்துசக்தி. அவர்கள் திக, திமுக,
கம்யூனிஸ்ட் என பல வேடமிட்டிருக்கலாம். அடிப்படையில் கிறித்தவ, இஸ்லாமிய மதத்தவர்.
நடக்காத ஒரு தாக்குதலைப் பற்றி இவர் கதை விடுவார். அதை சுட்டிக் காட்டுபவர்களை
அத்தனை பேரையும் மாற்று மதத்தவர் என்ற சிமிழுக்குள் அடைத்து விட முயற்சிப்பது மிகவும்
கேவலமான செயல்
சரியான மன நிலை உள்ள மனிதனின் செயல்தானா?
தன்னை அவதூறு செய்து விட்டதால் “சட்ட நடவடிக்கை” என்று மிரட்டும் ஜெமோ, திரு பா.செயப்பிரகாசம் பற்றி தொடர்ந்து செய்து வருகிற
அவதூறுகளும் கூட அவரது மன நிலையை சொல்லாமல் சொல்கிறது. அதிலும் அந்த “மாஸ்டர்” கட்டுரை
உச்சம்.
வேலைகள் அதிகம் இருப்பதால் அது பற்றி எழுதப் போவதில்லை. அடுத்த சர்ச்சை
வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.
அதற்கு முன்பாக
“ஹேப்பி புளிச்ச மாவு டே. ஜெமோ”
என்று சொல்லி விடை பெறுகிறேன்.
பிகு 1:
நேற்றே பகிர்ந்து கொண்டிருக்க வேண்டிய பதிவு. வேறு சில முன்னுரிமைகளால் ஒரு நாள் கால தாமதமாகி
விட்டது.
பிகு 2
கடந்த வருடம் தோழர் ரவி பாலேட் வரைந்த படத்தில் வாழ்த்துச் செய்தியை மட்டும் இணைத்து விட்டேன்.
No comments:
Post a Comment