Sunday, June 21, 2020

பி.எம்.ஓ விளக்கம் - கன்ப்யூசன்



“இந்தியாவுக்குள் யாரும் ஊடுறுவவில்லை. எந்த இந்திய ராணுவ போஸ்டையும் யாரும் கைப்பற்றவில்லை”

என்ற மோடியின் ஆணித்தரமான பிரகடனம் பல கேள்விகளை எழுப்பியது. 

யாரும் ஊடுறவவில்லை என்றால் இருபது இந்திய வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.

மோடியின் உரைக்கு விளக்கம் (கோனார் நோட்ஸ் என்று ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் சொன்னார்) கொடுக்க முயன்ற பிரதமர் அலுவலகம்

"பிரதமரின் உரை விஷமத்தனமாக திரித்து சொல்லப்பட்டது" 

என்று அறிக்கை விடுத்தது.

"அப்படி அவரு என்ன சொன்னாரு? அதுல எதை திரிச்சாங்க?" 

என்ற கேள்வி வந்த பிறகு

"இறந்து போன வீரர்களின் வீரச் செயலால்தான்  " “இந்தியாவுக்குள் யாரும் ஊடுறுவவில்லை. எந்த இந்திய ராணுவ போஸ்டையும் யாரும் கைப்பற்றவில்லை”  

என்றுதான் பிரதமர் சொல்ல வந்தார் என்று மறு விளக்கம் கொடுத்துள்ளது.

After Thought என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தவறு செய்த பின்பு அதை சமாளிக்க புதிதாக ஒரு காரணம் தேடுவது. 

மிஸ்டர் மோடி,

முடிந்தால் சொந்தமாக பேசுங்கள். இல்லையென்றால் உங்கள் "பிசாசு எழுத்தாளர் (Ghost Writer) யாரோ அவரை மாற்றுங்கள். அதிலும் உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்கள் பெரும் சொதப்பல்.

மொத்தத்தில் ஒரே கன்ப்யூசன்


No comments:

Post a Comment