வலைப்பக்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட முதல் சமையல் குறிப்பு "அவல் புட்டு"
மனைவியின் விருப்பமாக நேற்று மீண்டும் செய்ததால் மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் அவலை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அதனை மிக்ஸியில் பொடித்து சிட்டிகை அளவு கேசரி பொடி கலந்து கொள்ளவும்.
கொதிக்க, கொதிக்க சுடு நீரை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு அந்த மாவு பூ போல வரும் வரை செய்யவும். அது ஒரு அரை மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.
முந்திரி வறுத்துக் கொள்ளவும்.
தேங்காய் துறுவலையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
வெல்லப்பாகு வைத்து பொங்கி வரும் வேளையில்
தேங்காய், முந்திரி, அவல் மாவு ஆகியவற்றை சேர்த்து கிளறவும். நெய்யும், ஏலக்காய் பொடியும் சேர்த்து இறக்கி வைத்து பரிமாறவும்.
நேற்றும் நன்றாக வந்திருந்ததாக மனைவி சொன்னாலும் வெல்லம் கொஞ்சம் அதிகம் என்று சுய விமர்சனம் செய்து கொண்டேன்.
No comments:
Post a Comment