Monday, June 8, 2020

ட்விட்டரில் கல்வியமைச்சரை கோர்த்திடுவீர்


தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாவது மிகுந்த கவலை அளிக்கிறது.

ஆனால் அந்த கவலை தமிழக அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. அதனால்தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீருவது என வறட்டுப் பிடிவாதம் பிடிக்கிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டு அப்பதிவில் கல்வியமைச்சர் @2KASengottiyan ஐயும் கோர்த்து விடுங்கள் (TAG செய்வது) என ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

ஏராளமானவர்கள் அதனை தொடர்ந்து வருகின்றனர். 

என் பங்கிற்கு நான் கல்வி அமைச்சரோடு முதல்வர் அலுவலகத்தையும் சேர்த்தே கோர்த்துள்ளேன். என் ட்விட்டர் பதிவின் SCREEN SHOT கீழே உள்ளது.


அவனவன் திரிஞ்சு போன பாலுக்கும் கெட்டுப்போன மீனுக்கும் ட்விட்டரில் பதிவு போட்டு முதல்வர் அலுவலகத்தை கோர்த்து விடுகிறார்கள்.

நாம் நம் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அதை செய்வோமே.

ட்விட்டர் கணக்குள்ள அனைவரும் உடனடியாக பதிவிடுவீர்.
இல்லையென்றால்
ட்விட்டர் கணக்கை துவக்கி பதிவிடுவீர்

No comments:

Post a Comment